நாள் 05.02.25 ஞாயிறு
இடம்: கலிவந்தப்பட்டு பழங்குடி மக்கள் பகுதி
செங்கல்பட்டு மாவட்டம்
ஸ்ரீகாஞ்சி சங்கராச்சார்ய ஸ்வாமிகளின் அருளாசியுடன், ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய,கலாச்சார, பண்பாட்டு,சேவை அமைப்பான இந்துசமயமன்றம் சார்பில் கடந்த ஆறு ஆண்டுகளாக பல்வேறு பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளில் அவர்களின் வாழ்க்கைத்தரம் உயர பாடுபட்டு வருகிறது. குறிப்பாக பெண்கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துச்சொல்லி படிக்க உதவிவருகிறது. தமிழரின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் திருவிழா அப்பகுதிகளில் மிகச்சிறப்பாக நடைபெற்றுவருகிறது.
அந்த வகையில் இந்த 2025 ஆண்டு ஏழாம் ஆண்டாக கடந்த 5.1.2025 ஞாயிற்றுக்கிழமை செங்கை மாவட்டம் கலிவந்தப்பட்டு பழங்குடி மக்கள் பகுதியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கோலாகலமாக தெரு முழுக்க கோலங்களுடன் களைகட்டிய நிகழ்வில் மக்களுக்கு வழக்கம்போல் புத்தாடையுடன் பொங்கல் பரிசாக பச்சரிசி, பாகுவெல்லம்,பாசிப்பருப்பு, பசுநெய், திராட்சை,முந்திரி,ஏலக்காய் அடங்கிய பை வழங்கப்பட்டது. சமயமன்ற அன்பர்கள் உட்பட அனைவருக்கும் அருமையான மதிய உணவு (கேசரி,,வெஜிடபிள் பிரிஞ்சி சாதம், கத்தரிக்காய் பச்சடி) பரிமாறப்பட்டது. இதற்கு மனமுவந்து உதவிய ஸ்ரீகாஞ்சி கைங்கர்ய சபா அன்பர்கள், இந்துசமயமன்ற அன்பர்கள்,மறைமலைநகர் ஸ்ரீக்ருஷ்ணபவனம் டிரஸ்ட், அனுஷஅமிர்தம் அன்பர்கள், பிடிஅரிசிதிட்ட அன்பர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை காணிக்கையாக்குகிறோம். அனைவருக்கும் ஸ்ரீகாஞ்சி மஹாபெரியவரின் அருளாசிகளை ப்ரார்த்திக்கிறோம்.
குருசேவையில்,
புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன்
கௌரி வெங்கட்ராமன்
அமைப்பாளர்கள்,
இந்துசமயமன்றம்.