ஸ்ரீக்ருஷ்ணாய துப்யம் நமஹ!
ஸ்ரீமந்நாராயணீய பாராயண யக்ஞ மேளா 2026ல் கலந்துகொள்ள அனைத்து பாராயண மண்டலியினரையும் இருகரம்கூப்பி அழைக்கிறோம். தொடர்ந்து ஆறாவது மேளா மிகச்சிறப்பாக ஸ்ரீகாஞ்சி மஹாபெரியவர் குருவருளுடன், குருவாயூரப்பன் திருவருளுடன் நடைபெற உள்ளது. அதுவும் ஸ்ரீக்ருஷ்ணஜயந்திக்கு அடுத்த இரண்டாவதுநாளே கோபாலனை கொண்டாடப்போகிறோம். நமது சமிதியின் விசேஷ நிகழ்வுகளான ஸ்ரீக்ருஷ்ண ஜனனோத்ஸவம், கோவிந்த பட்டாபிஷேகம், ராஸக்ரீடை கோலாட்டம், ஸ்ரீருக்மிணீ கல்யாண மஹோத்ஸவம் அனைத்தும் விஸ்தாரமாய் நடக்கும். கண்ணனை நந்தகோகுலத்தில், வ்ரஜத்தில் அனுபவிப்பது போன்ற உணர்வுடன் அனைவரும் கோபிகைகளாய், அச்சுதக்ருஷ்ணனை, அனந்தனை ஆராதிக்கப்போகிறோம். ஆகாரம் மற்றும் இருக்கை ஏற்பாடுகளுக்காக வழக்கம்போல இதற்கு முன்பதிவு அவசியமாகிறது. மண்டலியினர் தங்கள் குரு அல்லது அமைப்பாளர் பெயர், தொடர்பு மொபைல் எண் (வாட்ஸ்ஆப் நம்பர்), எந்த ஊர் விவரம், மண்டலி பெயர், கலந்து கொள்ளும் நபர்கள் எண்ணிக்கை குறிப்பிட்டு கீழ்க்கண்ட வாட்ஸ்ஆப் எண்களில் அனுப்பவும். தனியாக கலந்துகொள்வோர் அவரவர் பெயர், ஊர், மொபைல் எண், நபர் எண்ணிக்கை அனுப்பவும். பதிவு செய்ய கடைசி நாள்: வருகிற ஆகஸ்டு ஒன்றாம் தேதி (01.08.2026)
பதிவுக்கட்டணம் கிடையாது.
விவரம் அனுப்பவேண்டிய வாட்ஸ்ஆப் எண்கள் (ஏதாவது ஒன்றில் மட்டும்) 9789007401 (or) 9444613198.
பத்திரிகையில் உள்ள மற்ற மொபைல் எண்களிலும் தங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் கேட்டுக்கொள்ளலாம். நாங்கள் கேட்ட விவரம் மட்டும் மேற்கண்ட இரண்டு எண்ணில் மட்டுமே அனுப்பவும்.
இதுவரை ஸ்ரீமந்நாராயணீய யக்ஞம் குழுவில் இல்லாதவர்கள் உடன் சேர்ந்துவிட வேண்டுகிறோம். அப்போதுதான் உடனுக்குடன் மேளா விவரங்கள் தங்களுக்கு வந்து சேரும்.
இவண்,
ஸ்ரீமந்நாராயணீய பாராயண யக்ஞ சமிதி நிர்வாகம்


Sri Krishnaya Tubhyam Namah!
We extend our heartfelt invitation to all Srimannarayaniya Parayana Mandalis (recitation groups) to participate in the Srimannarayaniya Parayana Yajna Mela 2026.
With the divine blessings of Sri Kanchi Maha Periyava and Lord Guruvayurappan, this sixth consecutive Mela is set to be conducted in a grand and auspicious manner. Significantly, we will be celebrating Lord Gopāla on the second day following Sri Krishna Jayanthi.
The special events organized by our Samithi—including Sri Krishna Jananotsavam (celebration of Lord Krishna’s birth), Govinda Pattabhishekam (coronation of Lord Govinda), Rasa Krida Kolattam (the divine Rasa dance with Kolattam), and Sri Rukmini Kalyana Mahotsavam (the grand wedding festival of Lord Krishna and Rukmini)—will all be celebrated elaborately.
Together, we shall worship Achyuta Krishna, the Infinite One, with the feeling of experiencing Him in Nandagokulam and Vraja, immersing ourselves in devotion as though we are the Gopikās themselves.
As usual, advance registration is mandatory to facilitate arrangements for seating and meals.
For Parayana Mandalis, kindly send the following details via WhatsApp:
• Name of the Guru or Organizer
• Contact mobile number (WhatsApp number)
• Town/City
• Name of the Mandali
• Number of participants
Individuals attending independently should send:
• Name
• Town/City
• Mobile number
• Number of participants
Last date for registration: 1st August 2026 (01.08.2026)
There is no registration fee.
Please send the required details only to either one of the following WhatsApp numbers:
9789007401
9444613198
If you have any queries, you may contact any of the other mobile numbers mentioned in the invitation brochure. However, please send the registration details only to the above two WhatsApp numbers.
Those who are not yet members of the Srimannarayaniya Yajna WhatsApp Group are requested to join at the earliest so that all updates and announcements regarding the Mela reach you promptly.
With regards,
Administration
Srimannarayaniya Parayana Yajna Samithi


















































