இந்துசமயமன்றத்தின் சார்பில்,
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதீச்வரரான ஸ்ரீஸ்ரீஸ்ரீசங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சார்ய மஹாஸ்வாமிகளின் ஜயந்தி மஹோத்ஸவத்தின் ஒரு அங்கமாக ஸ்ரீபெரியவர்கள் அவதரித்த திருத்தலமான திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகிலுள்ள தண்டலத்தில் மிகவிமரிசையாக திருவிளக்கு பூஜை அருள்மிகு காமாக்ஷியம்மன் உடனுறை ஸ்ரீதரணீச்வரஸ்வாமி தேவஸ்தான வளாகத்தில் 10.03.26 செவ்வாய்கிழமை மாலை நடைபெற்றது.கயிலாய வாத்தியத்துடன் கிராமதேவதையான பொன்னியம்மன் கோவில் இருந்து, வேதபாடசாலை வித்யார்த்திகள், திரளான ஊர் மக்களுடன் ஸ்ரீபெரியவர்கள் திருவுருவப்பட ஊர்வலம் ‘ஜய ஜய சங்கர’ கோஷத்துடன் நடைபெற்றது. திருவிளக்கு பூஜையினை இந்துசமயமன்ற அமைப்பாளர் புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன் நடத்திவைத்தார். ஸ்ரீசங்கரா கலை கல்லூரி முதல்வர் முனைவர்.கலைராம வெங்கடேசன் சிறப்புரை ஆற்றினார். ஆடிட்டர் ஸ்ரீகாந்த்ஜி, ஸ்ரீ.M.K.ஸ்ரீதர் மற்றும் ஊர் முக்யஸ்தர்கள் விழா ஏற்பாட்டினை சிறப்பாக செய்து கலந்துகொண்டனர்.










