ஸ்ரீபெரும்புதூர் தாலுகா படப்பை அருகில் சிறுமாத்தூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு சித்தநாயகி சமேத சித்தபுரீச்வரஸ்வாமிக்கு ருத்ராபிஷேகம், கோபூஜை மாட்டுப்பொங்கலை முன்னிட்டு மிகச்சிறப்பாக நடைபெற்றது. தேசீய இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் சார்பில் பூஜைக்கான ஏற்பாடுகளை கிராமத்தார்கள் செய்திருந்தனர். இந்துசமயமன்றம் மாநில அமைப்பாளர் புலவர் க ஆத்ரேய சுந்தரராமன் சொற்பொழிவு மற்றும் சமயமன்ற அன்பர் ப்ரம்மஸ்ரீ. ராமமூர்த்தி சர்மா ருத்ர பாராயணம் மற்றும் பூஜைகளை நடத்தினார்.திருக்கோவில் கூட்டமைப்பின் தேசிய செயலாளர் ஸ்ரீராம் அபிஷேகத்தை நடத்தியும் வெகு அழகாக அலங்காரம் செய்து வைத்தார். திரளாக ஊர்மக்கள் கலந்துகொண்டனர். வெகுவிரைவில் ஸ்ரீசித்தபுரீச்வரஸ்வாமிக்கு கும்பாபிஷேக வையவத்தை நடத்திட கூட்டுப்ரார்த்தனை செய்யப்பட்டது.