ஸ்ரீகுருப்யோ நம!
இந்துசமயமன்றத்தின் பொன்விழாவையொட்டி ஸ்ரீகாஞ்சி மஹாபெரியவர் பஞ்சலோகவிக்ரஹஸ்வரூப மூர்த்தியை சென்னை பள்ளிக்கரணை காமகோடிநகர் வேதபாடசாலைக்கு சமர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி 03.02.23 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்துசமயமன்ற வியாசர்பாடி அமைப்பாளர் ஸ்ரீஹரிஹரன்ஜி அவர்கள் இல்லத்திலிருந்து வேதபாடசாலைக்கு ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு வேதமந்திரங்கள் முழங்க அபிஷேக, ஆராதனைகள் ஸ்ரீமஹாபெரியவாளுக்கு சிறப்பாக நடைபெற்றது. சாக்தஸ்ரீ.காசி ஸாஸ்த்ரிகள் விழாவிற்கு வருகைதந்து சிறப்பித்தார்.பக்தி ச்ரத்தையுடன் செய்யப்பெற்ற இந்த சமர்ப்பண நிகழ்விற்கு இந்துசமயமன்ற மாநில அமைப்பாளர்.புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன், ஸ்ரீ.ஜெயராமன்ஜி மற்றும் பாடசாலை டிரஸ்டிகள் வந்திருந்தனர். திவ்ய விக்ரஹ ஸ்வரூப மஹாபெரியவர் இனி காமகோடிநகர் வேதபாடசாலையில் வீற்றிருந்து அருள்பாலிப்பார். அனுஷந்தோறும் விசேஷ பூஜைகள் நடைபெறும். ஏற்கனவே ஸ்ரீபுதுப்பெரியவர் விக்ரஹ மூர்த்தி சாக்தஸ்ரீ.காசி ஸாஸ்த்ரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டதையும் நினைவுகூர்கிறோம். மிகவும் உத்தமமான இடங்களில் இரண்டு பெரியவாளும் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க இருப்பதை மிகுந்த மனமகிழ்ச்சியுடன் அன்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.