ஸ்ரீப்ராண்ம்பிகை சமேத ஸ்ரீதர்ப்பாரண்யேச்வர ஸ்வாமி திருக்கோவில்

ெங்கல்பட்டு மாவட்டம் கொண்டமங்கலம் கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலித்துவரும் ஸ்ரீப்ராண்ம்பிகை சமேத ஸ்ரீதர்ப்பாரண்யேச்வர ஸ்வாமி திருக்கோவிலில் சனிப்ரதோஷ காலத்தில் மிகச்சிறப்பாக அபிஷேக ஆராதனைகளும் புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன், இந்துசமயமன்ற மாநில அமைப்பாளர் அவர்களின் சிறப்பு சொற்பொழிவும் நடைபெற்றது. டாக்டர்.சிவசிதம்பரநாதன், ஸ்ரீ.மணிவண்ணன், அனுஷ அமிர்தம் ஸ்ரீ.இராமச்சந்திரன் ஆகியோர் வருகைபுரிந்தனர். திருக்கோவில் பூஜகர் சிவனடியார்.ஸ்ரீ.எல்லப்பன் தம்பதியினர் இத்திருக்கோவிலை சிறப்பாக பராமரித்து வருகின்றனர். இந்துசமயமன்றம் சார்பில் திருக்கோவில் தீபமேற்ற நல்லெண்ணெய் வழங்கப்படுகிறது.