புத்தாண்டு வாழ்த்துக்கள்

சிவாய நம! நாளை பிறக்கும் விளம்பி வருஷம் அனைவருக்கும் ஒரு புத்துணர்ச்சி ததும்பும் புத்தாண்டாக, வளம், நலம், மனமகிழ்ச்சி என வாழ்வில் அனைத்து நல்லவையும் பெற்று, குருவருளுடன் திருவருளும், குலதேவதைகளின் பேரருளும் பெற்று சிறப்பாக வாழ எமது ஆன்மார்த்த பூஜா மூர்த்தி ஸ்ரீலலிதா மகாத்ரிபுரசுந்தரி சமேத ஸ்ரீநந்தி லிங்கேஸ்வரஸ்வாமி பொன்மலரடிகளையும், ஸ்ரீநந்திசித்தர் ஸ்வாமிகள் மற்றும் காஞ்சிப்பெரியவரின் கமலமலரடிகளையும் ப்ரார்த்திக்கிறேன். எமது இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

புலவர் க. ஆத்ரேய சுந்தரராமன் @ இராகவன், ஸ்ரீநந்தி சித்தர் பீடம். அமைப்பாளர், இந்துசமயமன்றம்.

லக்ஷகாயத்ரி ஜபம்

லக்ஷகாயத்ரி ஜபம் இந்த மாதத்தில் இருந்து ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள் அனுக்ரஹத்துடன் துவக்கப்படுகிறது. இந்த மாதம் நந்திவரம் கூடுவாஞ்சேரி ஸ்ரீமஹாலக்ஷ்மி நகர் ஸ்ரீத்ரிநேத்ர சதுர்புஜ நவக்கிரக யோக ஆஞ்சநேயர் திருக்கோவிலில் காலை 7.30 மணியளவில் துவக்கப்படுகிறது. கலந்து கொள்பவர்கள் காலை அனுஷ்டானங்களை முடித்து பஞ்சபாத்ர உத்தரணியுடன் சம்ப்ரதாயப்படி உடையணிந்து வர வேண்டுகிறோம்.

 

ஸ்வாமிகளை தரிசனம்

இன்று ஸ்ரீகாஞ்சி சங்கர மடத்தில் ஸ்ரீஆசார்ய ஸ்வாமிகளை தரிசனம் செய்து இந்துசமயமன்றம் சார்பில் நடந்துவரும் நிகழ்ச்சிகளை பற்றி சொல்லி ஸ்வாமிகள் அனுக்ரஹப்ரசாதம் பெற்றேன். மேலும் ஸ்ரீயோகசந்தோஷபீடம் ஸ்ரீஜெயமாருதிதாச ஸ்வாமிகள் தமது பீடத்தின் சார்பில் மாதந்தோறும் வெளியாகும் ஸ்ரீஅனுமன் குரல் பத்திரிகையை ஸ்ரீஸ்வாமிகளுக்கு சமர்ப்பித்து ஆசி பெற்றார்கள். ஸ்ரீபெரியவர் மிகவும் மகிழ்ச்சியுடன் ஸ்ரீஅனுமன் குரல் மாதஇதழின் ஆன்மிக சேவைக்கு ஆசீர்வதித்தார்கள். அவ்வமயம் தேசிய இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ஸ்ரீராம்ஜி அவர்களும் உடனிருந்து ஸ்ரீசரணர்களின் ஆசியை பெற்றார். கூட்டமைப்பின் சேவைகள் இந்துசமயமன்றம் மற்றும் ஸ்ரீயோகசந்தோஷபீடத்துடன் இணைந்து செய்ய ஸ்ரீஆசார்ய ஸ்வாமிகள் சந்தோஷத்துடன் ஆசி வழங்கினார்கள்.

லக்ஷ காயத்ரி ஜப யக்ஞம்

சிவாய நம! உலக நன்மையை முன்னிட்டும் ஸ்ரீசங்கர ஜயந்தி மஹோத்சவத்தின் ஒரு பகுதியாகவும் நமது இந்துசமயமன்றம் மற்றும் ஸ்ரீயோகசந்தோஷபீடம், ஸ்ரீநந்தி சித்தர் பீடம், தேசீய இந்து திருக்கோவில் கூட்டமைப்பு, தென்னக ஆன்மீக ஆராய்ச்சி மையம் சார்பில் லக்ஷ காயத்ரி ஜப யக்ஞம் வருகிற ஏப்ரல் 22 ந்தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணி முதல் 10.30 மணிவரை நந்திவரம் கூடுவாஞ்சேரி மஹாலக்ஷ்மிநகர் ஸ்ரீத்ரிநேத்ர சதுர்புஜ நவக்கிரக யோக ஆஞ்சநேயர் திருக்கோவிலில் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதீச்வரர்களின் அருளாசியுடன் ஸ்ரீமாருதிதாச ஸ்வாமிகள் அருள்முன்னிலையில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சி வருகிற மாதங்களில் இந்துசமயமன்றம் கிளை மன்றங்களில் மாதத்திற்கு ஒரு கிளை சார்பில் ஸ்ரீபெரியவா அனுக்ரஹத்துடன் நடைபெற உள்ளது.அடுத்த மாதம் பெருங்களத்தூர் இந்துசமயமன்றம் கிளை சார்பில் நடைபெறும். திரளாக கலந்துகொண்டு வேதமாதா ஸ்ரீகாயத்ரிதேவியின் அருளைப்பெறுவீர். இந்த நிகழ்ச்சியை தங்கள் பகுதிகளில் ஏற்பாடு செய்ய விரும்புபவர்கள் எங்களை அணுகவும். இதற்கு கட்டணம் சிரத்தையாக ஒருமனதுடன் காயத்ரி ஜபிப்பது மட்டுமே . இவண்: இந்துசமயமன்றம் அமைப்பாளர்கள் மற்றும் சகோதர அமைப்புகளின் நிர்வாகிகள்.