இருளர் மக்களுக்கு வாசவி கிளப் சார்பில் உதவிகள், தார்ப்பாய் வழங்கப்பட்டது.(28.08.22 ஞாயிறு). பயனாளிகளுடன் ஸ்ரீவாசவி கிளப் நிர்வாகிகள், அனுஷ அமிர்தம் க.இராமச்சந்திரன்(இந்துசமயமன்றம்)
Month: July 2022
ஜலமுகாளாம்பிகா சமேத ஸ்ரீவாருணீச்வரஸ்வாமி
இந்துசமயமன்றம் சார்பில் கும்பகோணம் அருகிலுள்ள மிகப்பழமையான சோழநாட்டு சிவஸ்தலமான சிவனாரகரம் வருணன் பூஜித்த அருள்மிகு ஜலமுகாளாம்பிகா சமேத ஸ்ரீவாருணீச்வரஸ்வாமிக்கு ஸ்ரீகாஞ்சி ஆசார்யஸ்வாமிகளின் பரிபூரண அனுக்ரஹத்துடன் மூன்றாவது ஆண்டாக நேற்று (11.07.2022 திங்கட்கிழமை ஸோமவாரம்) மிகச்சிறப்பாக வேதோக்தமாக நடைபெற்ற ஏகாதச ருத்ராபிஷேக வைபவத்தின் சீர்மிகு காட்சிகள்.
இந்துசமயமன்றம் சார்பில் சிவனாரகரம் ஏகாதச ருத்ராபிஷேகம் (Part 1) சிவனாரகரம் நோக்கி புனித பயணம்
இந்துசமயமன்றம் சார்பில் சிவனாரகரம் ஏகாதச ருத்ராபிஷேகம் (Part 2) சிவனாரகரம் ஸ்ரீஆசார்யாள் புறப்பாடு மற்றும் வீதி வலம்
இந்துசமயமன்றம் சார்பில் சிவனாரகரம் ஏகாதச ருத்ராபிஷேகம் (Part 3) கோபூஜை, ஸ்ரீபாதுகா பூஜை, மஹன்யாச ஜபம்
இந்துசமயமன்றம் சார்பில் சிவனாரகரம் ஏகாதச ருத்ராபிஷேகம் (Part 4) ஏகாதச ருத்ராபிஷேக வைபவம், பஞ்சமுகார்ச்சனை, மஹா ஹாரத்தி
இந்துசமய பண்பாட்டு பயிற்சி வகுப்பு
இந்துசமய பண்பாட்டு பயிற்சி வகுப்பு சான்றிதழ் வழங்கும் விழா 03.07.2022 ஞாயிற்றுக்கிழமை மதுராந்தகம் அருகில் வேதவாக்கம் கிராமத்தில் நடைபெற்றது. நாற்பது குழந்தைகள் பத்துநாள் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டனர். அவர்களுக்கு சான்றிதழ், நோட்டு, எழுது கருவிகள், ஆன்மீக புத்தகம் இந்துசமயமன்றம் சார்பில் வழங்கப்பட்டது. இதற்காக பெருமுயற்சி எடுத்த செங்கை தெற்கு மாவட்ட இந்துமுன்னணி தலைவர் ஸ்ரீ.ஏழுமலை அவர்கள் மற்றும் பயிற்சி அளித்த ஆசிரியர்களை பாராட்டி சால்வை போர்த்தி நினைவு புத்தகப்பரிசு இந்துசமயமன்றம் சார்பில் வழங்கப்பட்டது. பரிசுகளை பேராசிரியர் டாக்டர்.சிவசிதம்பரநாதன் மற்றும் அனுஷ அமிர்தம் ஸ்ரீ.ராமச்சந்திரன் ஆகியோர் வழங்கினர். இந்துசமயமன்ற மாநில அமைப்பாளர் புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன் வாழ்த்துரை வழங்கினார்.