நாராயணீயத்தால் பாடிப்பரவிய ஆய்ப்பாடி கோபிகைகள்

அலைகடலெனத்திரண்டுவந்து ஆனந்தமாய் ஆயனை, மாயனை, வடமதுரை மைந்தனை நாவார நாராயணீயத்தால் பாடிப்பரவிய ஆய்ப்பாடி கோபிகைகள்.
இங்கே ஆண்பெண் பேதமில்லை, ஜாதிமத வித்யாசமில்லை. உயர்வு தாழ்வு இல்லை. பெரியவர், சிறியவர் இல்லை. பரமனிடம் பக்தி மட்டுமே ப்ரதானம். நாராயணனே நமக்கே பறை தருவான் என்கிற நம்பிக்கையே ஊன்றுகோல். எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உனக்கே நாம் ஆட்செய்வோம் என சங்கல்பித்தவர்கள் இவர்கள். சர்வம் க்ருஷ்ணார்ப்பணம்!

ஸ்ரீருக்மிணீ கல்யாண வைபவம் தொடர்ச்சி.

கல்யாணோத்சவம் மூலமாக 19 ஜோடி வேஷ்டி, புடவைகள் மற்றும் உபரியாக 3 புடவைகள் இந்துசமயமன்றத்திற்கு பக்தர்கள் வழங்கினர். தீபாவளிக்கு திருக்கோவில் பணியாளர்களுக்கு இனிப்புடன் வழங்க இது உதவும். உதவிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்!

ருக்மிணீ கல்யாண வைபோகமே


கோகுல்தாமில் மிகக்கோலாகலமாக ஸ்ரீருக்மிணீ க்ருஷ்ண விவாஹம் நடந்தேறிய காக்ஷிகள்.
சீர்வரிசைகள், சீர் பக்ஷணங்கள், கல்யாண புடவை, வேஷ்டி செட்கள், இனிப்புகள், புஷ்ப ஹாரங்கள் என பக்தர்கள் கொண்டுவந்து குவித்தனர். பாகவத சம்ப்ரதாயத்தை அடியொற்றி லகுவாக நடத்தப்பெற்ற இந்த தெய்வத்திருமணத்தை ஸ்ரீமதி.சாந்தா பாலசுப்ரமண்யன் குழுவினர் அருமையாக நடத்தினர்.

ஆசிரியர் பயிற்சி முகாம்

இந்துசமயமன்றத்தின் ஆசிரியர் பயிற்சி முகாம் சென்னையையடுத்த பூவிருந்தவல்லி நசரத்பேட்டை ஸ்ரீஜெயஜெய சங்கரா சர்வதேசப்பள்ளியில் ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள் அருளாணையின்வண்ணம் இன்று 24.08.24 சனிக்கிழமை துவக்கப்பட்டது. இந்த நிகழ்வில் இந்துசமயமன்ற மாநில அமைப்பாளர்கள் புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன், ஸ்ரீமதி.கௌரி வெங்கட்ராமன் மற்றும் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீமதி.நீரஜா ஆகியோர் கலந்துகொண்டனர். பள்ளி முதல்வர் ஸ்ரீமதி.மணமல்லி அவர்கள் கௌரவித்தார். நிகழ்ச்சி உரைகளை ஸ்ரீ.பி.என்.பரசுராமன் மற்றும் ஸ்ரீ.வைத்யநாதன் ஆகியோர் நிகழ்த்தினர். ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை இந்த பயிற்சி முகாம் மேற்படி பள்ளியில் நடைபெறும்.

மகுடி ஆட்டம்

மகுடி ஆட்டம். ஸ்ரீருக்மிணீ கல்யாண வைபவத்தின்போது மாலைமாற்றும் நிகழ்வில் நடந்த அற்புதமான ஆட்டம். நமது தேசிய இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் க.ஸ்ரீராம் மற்றும் பெருங்களத்தூர் கோசாலை நிறுவனர் ஸ்ரீ.ஷ்யாம் ஆகியோர் பங்கேற்ற நிகழ்வு.

கோவிந்த பட்டாபிஷேகத்தில் 88 வகையான இனிப்புகள் ஸ்ரீக்ருஷ்ணனுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. அவ்வளவு கோபிகைகள் ஸ்ரீபெரும்புதூருக்கு வந்து சமர்ப்பித்தது பெரும்பாக்கியம். இந்த யக்ஞத்தில் 18 வகையான பழங்கள், நூற்றியோரு நைவேத்யம், சித்ரான்னங்கள் என துவாரகையின் மஹாராஜாவிற்கு சமர்ப்பிக்கப்பட்டது. உங்கள் அனைவரின் தூய பக்தியே இத்தனையையும் ஸாத்யமாக்கி இருக்கிறது.

ஸ்ரீமந்நாராயணீய பாராயண யக்ஞம் 2024, ஸ்ரீபெரும்புதூர்.


சுமார் 550க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர் இந்த யக்ஞத்தில்.
நமது சூளைமேடு இந்துசமயமன்ற அமைப்பாளர் ஸ்ரீமதி.ஜெயலலிதா ஸ்ரீனிவாசன் மற்றும் மறைமலைநகர் இந்துசமயமன்றம் ஸ்ரீமதி.சத்யபாமா கோபாலன் வழிநடத்தினர். இந்துசமயமன்ற அன்பர்.ஸ்ரீமதி.சாந்தா பாலசுப்ரமண்யன் அவர்கள் குழுவினர் ஸ்ரீருக்மிணீ கல்யாண வைபவத்தை நடந்தினார்கள்.

திருவிளக்கு பூஜை

திருவண்ணாமலை மாவட்டம் பர்வதமலை அடிவாரகிராமமான கடலாடியில் இந்துசமயமன்றம் கடலாடி கிளை சார்பாக ஆடி மூன்றாவது வெள்ளிக்கிழமை திருவிளக்கு பூஜை ஸ்ரீகாஞ்சி மஹாபெரியவர் விஜயம் செய்த ஸ்ரீலக்ஷ்மிநாராயணர் திருக்கோவில் வளாகத்தில் நடைபெற்றது. இந்துசமயமன்ற மாநில அமைப்பாளர் புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன் தலைமையேற்று பூஜையை நடத்திவைத்தார். அகிலபாரத இந்து மக்கள் அமைப்பின் நிறுவனத்தலைவர் ஸ்ரீ.வி.எம். சிவகுமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் நிர்வாகத்தினர், கிராம முக்யஸ்தர்கள் வந்திருந்தனர். கடலாடி இந்துசமயமன்ற கிளை அமைப்பாளர்.ஸ்ரீ.ஜெயவேலு சிறப்பாக ஏற்பாடுகளை செய்திருந்தார்.