மஹாஸ்வாமிகளின் ஏழாவது வார்ஷிக ஆராதனை

இந்துசமயமன்றம் சார்பில்
ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீஜயேந்த்ர ஸரஸ்வதி சங்கராச்சார்ய மஹாஸ்வாமிகளின் ஏழாவது வார்ஷிக ஆராதனையை முன்னிட்டு இன்று (11.03.25, செவ்வாய்) நடைபாதை ஏழை எளிய மக்களுக்கு சிறப்பு அன்னதானம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீருடன் அவரவர் இடம்தேடிப்போய் வழங்கப்பட்டது. அனுஷஅமிர்தம் க.இராமச்சந்திரன், செல்வம் மற்றும் ஷ்யாம் ஆகியோர் இக்கைங்கர்யத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு இந்துசமயமன்றம் சார்பில் வாழ்த்துக்கள்!

ஏழாவது வார்ஷிக ஆராதனை

ஸ்ரீசங்கர பகவத்பாதாசார்ய பரம்பராகத மூலாம்னாய ஸர்வக்ஞ பீடமாகிய ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் 69வது பீடாதீச்வரரும் ஜகத்குருநாதருமான ஸ்ரீஸ்ரீஸ்ரீஜயேந்த்ர ஸரஸ்வதி சங்கராச்சார்ய மஹாஸ்வாமிகளின் ஏழாவது வார்ஷிக ஆராதனை புண்யதினமாகிய இன்று (11.03.25, செவ்வாய்) ஸ்ரீஸ்வாமிகளின் பொற்பதங்களில் இந்துசமயமன்றம் சார்பில் பக்திபூர்வமாக நமஸ்கரித்து வணங்குகிறோம்.

புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன்,
முனைவர்.கலைராம.வெங்கடேசன்
கௌரி வெங்கட்ராமன் மற்றும் மன்ற அன்பர்கள்.