
















செங்கல்பட்டு மாவட்டம் கலிவந்தப்பட்டு கிராமத்தில் பழங்குடி மக்கள் பகுதியில் தொடர்ந்து நான்காவது ஆண்டாக இந்த வருடமும், ஸ்ரீகாஞ்சி சங்கரமடத்தின் சமயச்சேவை அமைப்பான இந்துசமயமன்றம் சார்பில், 04.01.26 ஞாயிற்றுக்கிழமை மிகச்சிறப்பாக பொங்கல் விழா பழங்குடி மக்களின் குலதெய்வ பூஜையுடன் நடைபெற்றது. இதில் வழக்கம்போல ஆதரவளிக்கும் சகோதர அமைப்புகளான ஸ்ரீக்ருஷ்ணபவனம் டிரஸ்ட், மறைமலைநகர், ஸ்ரீகாஞ்சி கைங்கர்ய சபா,அனுஷ அமிர்தம் மற்றும் ஊரப்பாக்கம் வேதபாரதி ஆகியவற்றின் பிரதிநிதிகள், மற்றும் ஊர் பிரமுகர்கள் பங்கேற்றனர். பழங்குடி மக்களுக்கு பொங்கல் பண்டிகைக்கான புத்தாடைகள், பொங்கல் பொருட்கள் (முதல்தர பச்சரிசி, மில்க்மிஸ்ட் நெய், முந்திரி, ஏலக்காய், ஸாகம்பரி பாகு வெல்லம், பாசிப்பருப்பு, எல்.ஜி சாம்பார் பொடி, மல்லித்தூள், மஞ்சள் தூள்) ஆகியவை வழங்கப்பட்டன. கேசரி, மணக்கும் வெஜிடபிள் பிரியாணி, கத்தரிக்காய் கொத்சு, மினரல் வாட்டர் பாட்டில் அனைவருக்கும் வழங்கப்பட்டதுடன் வந்திருந்த அனைவரும் மகிழ்ச்சியுடன் உணவருந்தினர். சனாதன இந்து சமத்துவ சமுதாயம் மலர ஸ்ரீகாஞ்சிப்பெரியவர்கள் அருளாசியுடன் நடைபெற்ற இந்த பொங்கல் விழா இனிதே நடந்தேறியது.
