மூலாம்னாய ஸர்வக்ஞபீடமாகிய ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் 69வது சங்கராச்சார்ய ஸ்வாமிகளான ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீஜயேந்த்ர ஸரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகளின் எட்டாவது வார்ஷிக ஆராதனை ஸமயத்தில், ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய,கலாச்சார, பண்பாட்டு,சேவை அமைப்பான இந்துசமயமன்றம் ஸ்ரீசரணர்களின் திவ்ய திருவடிகளில் அனந்தகோடி நமஸ்காரங்களுடன் புஷ்பாஞ்சலிகளை பக்தியுடன் சமர்ப்பிக்கிறது.
புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன்
கௌரி வெங்கட்ராமன்
அமைப்பாளர்கள்

ஸ்ரீசங்கர சனாதன சேவா சம்ஸ்தானத்தின் சார்பில் நடக்கும் ஸத்கார்யங்கள் விவரம் சமர்ப்பிக்கப்பட்டது

03.02.2026 செவ்வாயன்று காஞ்சி ஸ்ரீமடத்தில் மூலாம்னாய ஸர்வக்ஞபீடமாகிய ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதீச்வரர்களின் சந்நிதியில், இந்து சமய மன்றம் மற்றும் ஸ்ரீசங்கர சனாதன சேவா சம்ஸ்தானத்தின் சார்பில் நடக்கும் ஸத்கார்யங்கள் விவரம் சமர்ப்பிக்கப்பட்டது. மேலும் ஸ்ரீஆசார்யஸ்வாமிகள், மயிலாடுதுறை மாவட்டம், சிவனாரகரம் கிராமத்தில் நமது டிரஸ்ட் சார்பில் ஸ்ரீசந்த்ரசேகரேந்திர சரஸ்வதி மஹாஸ்வாமிகள் அனுஷ்டான கேந்திரம், யாத்ரீ நிவாஸ் நிர்மாணிக்க அனுக்ரஹித்தருளினார்கள். இதற்கான நிலம் நமது டிரஸ்டி ஸ்ரீமான்.வெங்கட்ராமய்யர் மற்றும் ஸ்ரீமதி.அலமேலு கணேசன் ஆகியோரால் அன்புடன் தானமாக டிரஸ்டிற்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீசங்கர சனாதன சேவா சம்ஸ்தானத்தின் முதன்மை டிரஸ்டிகளான புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன் மற்றும் ஆடிட்டர் ஸ்ரீகாந்திற்கு சால்வையும், ஆசியும் வழங்கியருளினார்கள்.