ஸ்ரீகுருப்யோ நம! இன்று 01.05.19 புதன்கிழமை அன்று தாம்பரம் வள்ளுவர் குருகுலம் பள்ளியில் ஏகதின கோடி காயத்ரி ஜபம் பஞ்சமி சேவா டிரஸ்ட், ஸ்ரீசங்கரா டிவி மற்றும் பல தன்னார்வலர்கள், ஸ்ரீமடத்தின் பக்தர்கள் சேர்ந்து மிக விசேஷமாக நடந்தேறியது. நெரூர் ஸ்ரீவித்யா சங்கர ஸ்வாமிகள் விஜயம் செய்து அனுக்ரஹ பாஷணம் செய்தார். இரண்டாயிரம் பேர் சுமாராக கலந்துகொண்டு காயத்ரி ஜபம் சிரத்தையுடன் பண்ணினர்.ஸ்ரீ சங்கரா டிவி நேரடி ஒளிபரப்பு காலை ஆறிலிருந்து எட்டு மணிவரை செய்தனர். அடியேன் வேதமாதாவைப்பற்றி பேசும் பாக்கியம் சிறிது பெற்றேன். இந்த கோடி காயத்ரி ஜபத்திற்கு ஊக்கப்படுத்தி, ஆங்காங்கே ஸஹஸ்ரகாயத்ரி ஜபங்களை நடத்தி எழுச்சியூட்டிய பஞ்சமி ஸ்ரீ.நாகராஜன் அண்ணா, ஸ்ரீராம், ஸ்ரீரமணி ஹால் ஸ்ரீமகேஷ், கவிஞர். சாணுபுத்திரன், இந்துசமயமன்றம் மன்றக்கிளைகள், திருவொற்றியூர் ஸ்ரீசங்கரமடம் ஸ்ரீ.விசு, வேதபாரதி அமைப்பு, மாடம்பாக்கம் ஜனகல்யாண், மற்றும் பல அமைப்புகள் இந்த புனித யக்ஞத்தில் கலந்துகொள்ள அன்பர்களை அழைத்திருந்தனர். உலக நலனை வேண்டி நடத்தப்பெறும் இந்த ஜபயக்ஞம் தொடர்ந்து ஸ்ரீஆசார்யாள் அனுக்ரஹத்துடன் சிறப்பாக அனைத்து பகுதிகளிலும் நடக்க வேதமாதா ஸ்ரீகாயத்ரி மாதாவை ப்ரார்த்திக்கிறேன்.