இணையதளம் பற்றி

ஹிந்து சமய மன்றம் காஞ்சிமஹாபெரியவரால் 1972ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. மதமாற்றம் மற்றும் இந்து ஒற்றுமையின்மை, நம் சமயத்தைப்பற்றிய அறிவை நம்மக்களுக்கு உணர்த்துதல், சாதி வித்தியாசங்கள் பார்க்காமலும் சகோதரத்துவம் பேணுதல் மற்றும் நலிவடைந்த நிலையில் உள்ள திருக்கோவில்களை புனரமைப்பு செய்தல், விளக்கேற்றி வழிபாடு நடக்க அங்காங்கு உள்ள மக்களை ஒன்றுகூட்டி மன்றம் ஏற்படுத்தி செயல்படுத்துதல்.

மன்றத்தின் மூலமாக திருவிளக்கு பூஜை, கூட்டுப்ப்ரார்த்தனை, சமய சொற்பொழிவுகள் செய்தல், துறவியர்பெருமக்கள், சமயச்சான்றோரை அழைத்து சமயப்பெருமையை அடித்தட்டு மக்களுக்கும், சமய உணர்வற்றவர்களுக்கும் எடுத்துச்சொல்லுதல், கோயிலே இல்லாத பகுதிகளில் சிறு விநாயகர் அல்லது அம்மன் கோயில் கட்டி கும்பாபிஷேகம் ஸ்ரீமடத்தின் மூலமாகச்  செய்து அப்பகுதி மக்களை கோயில் சேவையில் ஈடுபடச்செய்தல், மன்றத்தின் மூலமாக சிறு சிறு கையேட்டு பிரதிகள் மற்றும் சிறு புத்தகங்கள் மூலமாக நம் சமயத்தின் அருமை பெருமைகளை, நம் கடவுளர் தத்துவங்களை, நாயன்மார்கள் ஆழ்வார்கள் போன்றவர்கள் வரலாறுகளை அச்சிட்டு மக்களுக்கு இலவசமாக வழங்குதல். மாணவர்களுக்கு திருப்பாவை திருவெம்பாவை போட்டிகள், சமயக்கட்டுரை மற்றும் பல போட்டிகள் நடத்துதல், ஸ்ரீஆசார்யாள் ஆசியுடன் பள்ளிகளில் ப்ரசாதம் மற்றும் பரிசுகள் வழங்குதல், மருத்துமனைகளுக்கு சென்று நோயுற்றவர்களுக்கு ஸ்ரீமடத்து ப்ரசாதம் வழங்கி ஆறுதல்கூறி மனதைரியத்தை ஏற்படுத்துதல் மற்றும் கூட்டுப்ரார்த்தனை செய்தல், சிறை வளாகம் மற்றும் சிறுவர் சீர்திருத்தப்பள்ளி, கூர்நோக்கு இல்லங்களில் சமய வகுப்புகள், நீதிநெறி வகுப்புகள் நடத்துதல் போன்ற பல சேவைகள் இதில் அடங்கும். தமிழகத்தில் ஊர்வாரியாக ஏற்படுத்தப்பட்ட இந்த அமைப்பு ஒரு மாநில அமைப்பாளர் தலைமையில் ஒருங்கிணைந்து செயல்பட்டது. பல முன்னணி செயல்வீரர்கள் ஆங்காங்கே இந்த அமைப்பில் இருந்து பங்காற்றினர்.