ஸதாஸிவ ஸமாரம்பாம் சங்கராச்சார்ய மத்யமாம்அஸ்மத் ஆசார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம்!

ஸ்ரீகுருப்யோ நம!
ஆதிசங்கரரிலிருந்து இன்றுவரை இடையறாத ஞான ஸாகரமாய், ஸனாதன தர்மத்தின் ஆணிவேராய், ஸ்ரீகாஞ்சி காமகோடி மூலாம்னாய ஸர்வக்ஞ ஜகத்குரு பீடாதீச்வரராக யதி தர்மத்துடன் எழுந்தருளி அருள்பாலிக்கும் நமது ஸ்ரீகாஞ்சி சங்கர மடத்தின் 71வது ஆசார்ய ஸ்வாமிகளை நமக்களித்த ஸ்ரீபெரியவர் ஸ்ரீஸ்ரீஸ்ரீசங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகளின் பொற்பதங்களை பக்தியோடு நமஸ்கரித்து பணிவோம். புதுப்பெரியவர் ஸ்ரீஸ்ரீஸ்ரீஸத்ய சந்திரசேகரேந்த்ர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகளை அனந்தகோடி நமஸ்காரங்களுடன் பணிந்து போற்றுவோம்.
குரு சேவையில்,
புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன்
கௌரி வெங்கட்ராமன்
அமைப்பாளர்கள்,
இந்துசமயமன்றம்.
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய,கலாச்சார, பண்பாட்டு,சேவை அமைப்பு

அக்ஷயதிருதியை

அனைவருக்கும் ஸ்ரீமஹாலக்ஷ்மி அனுக்ரஹம், அக்ஷயதிருதியை சுபநாளில் பரிபூரணமாக கிடைக்க ப்ரார்த்திக்கிறோம்.
ஸ்ரீமந்நாராயணீய பாராயண யக்ஞ சமிதி,
ஸ்ரீசங்கர சனாதன சேவா சம்ஸ்தானம் மற்றும்
இந்துசமயமன்றம்

மஹாஸ்வாமிகளின் ஏழாவது வார்ஷிக ஆராதனை

இந்துசமயமன்றம் சார்பில்
ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீஜயேந்த்ர ஸரஸ்வதி சங்கராச்சார்ய மஹாஸ்வாமிகளின் ஏழாவது வார்ஷிக ஆராதனையை முன்னிட்டு இன்று (11.03.25, செவ்வாய்) நடைபாதை ஏழை எளிய மக்களுக்கு சிறப்பு அன்னதானம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீருடன் அவரவர் இடம்தேடிப்போய் வழங்கப்பட்டது. அனுஷஅமிர்தம் க.இராமச்சந்திரன், செல்வம் மற்றும் ஷ்யாம் ஆகியோர் இக்கைங்கர்யத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு இந்துசமயமன்றம் சார்பில் வாழ்த்துக்கள்!

ஏழாவது வார்ஷிக ஆராதனை

ஸ்ரீசங்கர பகவத்பாதாசார்ய பரம்பராகத மூலாம்னாய ஸர்வக்ஞ பீடமாகிய ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் 69வது பீடாதீச்வரரும் ஜகத்குருநாதருமான ஸ்ரீஸ்ரீஸ்ரீஜயேந்த்ர ஸரஸ்வதி சங்கராச்சார்ய மஹாஸ்வாமிகளின் ஏழாவது வார்ஷிக ஆராதனை புண்யதினமாகிய இன்று (11.03.25, செவ்வாய்) ஸ்ரீஸ்வாமிகளின் பொற்பதங்களில் இந்துசமயமன்றம் சார்பில் பக்திபூர்வமாக நமஸ்கரித்து வணங்குகிறோம்.

புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன்,
முனைவர்.கலைராம.வெங்கடேசன்
கௌரி வெங்கட்ராமன் மற்றும் மன்ற அன்பர்கள்.

மஹாஸ்வாமிகளின் 57வது ஜயந்தி

ஸ்ரீஆதிசங்கர பகவத்பாதாசார்ய பரம்பராகத மூலாம்னாய ஸர்வக்ஞ பீடமாகிய ஸ்ரீகாஞ்சிகாமகோடி பீடத்தின் பீடாதீச்வரரும் ஜகத்குருநாதருமான ஸ்ரீஸ்ரீஸ்ரீசங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சார்ய மஹாஸ்வாமிகளின் 57வது ஜயந்தி தினத்தில் பக்திபூர்வமான ஹ்ருதயபூர்வமான அனந்தகோடி நமஸ்காரங்களை ஸ்ரீஆசார்ய ஸ்வாமிகளின் பொன்னார்திருவடிகளில் சமர்ப்பிக்கிறோம்.
புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன்
கௌரி வெங்கட்ராமன்
இந்துசமயமன்றம்
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய,கலாச்சார, பண்பாட்டு சேவை அமைப்பு.

சிறப்பு அன்னதானம்

ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதீச்வரரான ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சார்ய மஹாஸ்வாமிகளின் 57வது ஜயந்தி மஹோத்ஸவத்தையொட்டி இன்று 25.02.25 செவ்வாயன்று இந்துசமயமன்றம் சார்பில் சிறப்பு அன்னதானம் (தக்காளிசாதம், மினரல் வாட்டர்பாட்டில்) நடைபாதை வாழ் மக்களுக்கு வழங்கப்பட்டது.

இன்றைக்கு மாதாந்திர அனுஷம் ஆவஹந்தீ ஹோமம், ஸ்ரீமஹாபெரியவருக்கு அபிஷேகம், பூஜை, அன்னதானம் சிறப்பாக ஸ்ரீபெரியவா அனுக்ரஹத்தில் நடைபெற்றது.

இந்துசமயமன்றம், அமெரிக்காவின் மஹாசிவராத்ரி

இந்துசமயமன்றம், அமெரிக்காவின் மஹாசிவராத்ரி கலை நிகழ்ச்சிகளின் முதல்நாளான இன்று 19.02.25 பாரத இந்துசமயமன்றத்தைப்பற்றி அடியேன் விளக்கியும், அமெரிக்காவில் பல நகரங்களில் கிளைகளுடன் தோற்றுவிக்கப்பட்டுள்ள இந்துசமயமன்றத்திற்கு வாழ்த்துச்செய்தியும் தெரிவித்தேன்.