ஸ்ரீமந்நாராயணீய பாராயணம்

ஸ்ரீமந்நாராயணீய பாராயணம், குருவாயூரில் 02.12.23 சனிக்கிழமை அன்று நமது பாராயணக்குழுவினரால் வெகு விமரிசையாக நடந்தேறியது. சென்னை மற்றும் திருச்சி அன்பர்கள் சுமார் எழுபது பேர் கலந்துகொண்ட பாராயணம் ஸ்ரீசங்கர நிலையத்தில் நடந்தது. முன்னதாக 01.12.23 அன்று கேரள முக்ய க்ஷேத்ர தரிசனத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்துசமயமன்றம் சார்பில் அன்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்! தோன்றாத்துணையாக வழிநடத்திய காஞ்சி மஹாபெரியவரின் மலரடிகளில் அனந்தகோடி நமஸ்காரங்கள். ஸ்ரீகுருவாயூரப்பனுக்கு கோடானுகோடி நமஸ்காரங்கள்.

தேசீய இந்து திருக்கோவில் கூட்டமைப்பு வழங்கிய திருக்குடைகள்

திருவண்ணாமலை தீபத்திருவிழாவிற்காக தேசீய இந்து திருக்கோவில் கூட்டமைப்பு வழங்கிய திருக்குடைகள் பவனி கடந்த 4.11.23 அன்று தாம்பரம், நந்திவரம், மறைமலைநகர், சிங்கப்பெருமாள் கோவில் பகுதிகளில் நடைபெற்றபோது இந்துசமயமன்றம் மற்றும் விஎச்பி சார்பில் வரவேற்பளிக்கப்பட்டது.

வேத ரக்ஷணம்

வேத ரக்ஷணம் ப்ரதானம் என்பார் ஸ்ரீகாஞ்சி மஹாபெரியவர்.
இந்துசமயமன்றத்தின் சார்பில் ‘தெய்வத்தின் குரலை’ சிரமேற்கொண்டு, இந்த வருட தீபாவளிக்கு தாம்பரம் இரும்புலியூர் ப்ரம்மஸ்ரீ.விஜயகுமார் ஸாஸ்த்ரிகளின் ரிக்வேதபாடசாலை வித்யார்த்திகளுக்கு, புதுவஸ்த்ரம், தீபாவளி பக்ஷணங்கள், வேத வாத்யாருக்கும் அவர் மனைவிக்கும் வஸ்த்ரம், பக்ஷணங்கள், மங்கல திரவியங்கள் இன்று 02.11.23 வியாழக்கிழமை இந்துசமயமன்றத்தின் சார்பில் பல நல்ல உள்ளங்களின் உதவியுடன் மாநில அமைப்பாளர் புலவர் க.ஆத்ரேய சுந்தரராமன் தலைமையில் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக விஸ்வ ஹிந்து பரிஷத் வடதமிழக மாநில அமைப்புச்செயலாளர் ஸ்ரீ.ராமன்ஜீ,VHP மாவட்ட நிர்வாகி ஸ்ரீகணேஷ்ஜீ,தாம்பரம் தமிழ் சங்க செயலாளர் ஸ்ரீகாந்த்ஜீ, அனுஷ அமிர்தம் ஸ்ரீராமச்சந்திரன்,சுதேசி பத்திரிகை ஸ்ரீ.முரளி, கோசாலை ஸ்ரீ.ஷ்யாம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இனிய சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்!

ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமயச்சேவை அமைப்பான இந்துசமயமன்றம் சார்பில் இனிய சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்!
புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன்
முனைவர்.கலைராம.வெங்கடேசன்
கௌரி.வெங்கட்ராமன்
மாநில அமைப்பாளர்கள்,
மற்றும் கிளை அமைப்பாளர்கள், சமயமன்ற அன்பர்கள்

ஓம் சக்தி

கோடானுகோடி மக்களை ‘ஓம் சக்தி’ என சொல்லவைத்து, அவர்களை எளிய முறையில் சித்த வழிபாடுகள்,பூஜைகள், யாகங்கள் செய்யவைத்து, அருள் வார்த்தை சொல்லி வழிநடத்தியும், பல சமூக, சமுதாய, அறப்பணிகள் ஆற்ற மிகப்பெரிய அறநிலையத்தை, சித்தர்பீடத்தை உருவாக்கியும் விளங்கிய வணக்கத்திற்குரிய மகான் மேல்மருவத்தூர் ஸ்ரீபங்காரு அடிகளார் அவர்கள் மருவூர்அரசியின் மலரடிகளையடைந்தார்கள். இந்த செய்தி ஆன்மீக உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பேயாகும். இந்துசமயமன்றம் மறைந்த மகானின் திருவடிகளில் அஞ்சலிமலர்களை சமர்ப்பிக்கிறது.


புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன்,
முனைவர்.கலைராம.வெங்கடேசன்,
கௌரி வெங்கட்ராமன்
மற்றும் கிளை அமைப்பாளர்களுடன், சமயமன்ற அன்பர்கள்.
இந்துசமயமன்றம்

நவராத்திரி விழா

மறைமலைநகர் பிராமணர் சங்கம், வேதபாரதியுடன் இந்துசமயமன்றம் இணைந்து 15.10.23 ஞாயிற்றுக்கிழமை மறைமலைநகரில் நடத்திய நவராத்திரி விழாவில் கோ பூஜை, வடுக பூஜை, ஷோடஸ மஹாலக்ஷ்மீ ஸ்வரூப கன்யா பூஜை, நவதுர்கா ஸ்வரூப ஸுவாஸினி பூஜை, கௌரீ சமேத சாம்ப சதாசிவ ஸ்வரூப 16 தம்பதிகள் பூஜை மற்றும் ஸ்ரீலக்ஷ்மீ நாராயண ஸ்வரூப 16 தம்பதி பூஜை அனைத்தும் மிக சிறப்பாக கோலாகலமாக ஸ்ரீமஹாபெரியவர் அனுக்ரஹத்தில் நடைபெற்றது. இந்துசமயமன்ற மாநில அமைப்பாளர் புலவர் க.ஆத்ரேய சுந்தரராமன் பூஜைகளை நடத்திவைத்தார். வேதபாரதி மாநில செயலாளர் ஸ்ரீ.வெங்கட்ராமன்ஜீ, தேசீய இந்து திருக்கோவில் கூட்டமைப்பு தேசீய செயலாளர் டாக்டர் க.ஸ்ரீராம் மற்றும் பல நிர்வாகிகள் கலந்துகொண்டனர். மறைமலைநகர் பிராமணர்சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் விழாவை சிறப்பாக நடத்தினர்

ஸ்ரீவேணுகோபால ஸ்வாமிக்கு வேதபாராயணத்துடன் விசேஷ பூஜைகள்

இந்துசமயமன்றம் ஆதரவுடன் ஊர் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு மற்றும் ஈடுபாட்டுடன் 07.10.23 புரட்டாசி மாத மூன்றாம் சனிக்கிழமையன்று திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தையடுத்த தண்டலம் (ஸ்ரீபாலப்பெரியவர் அவதாரக்ஷேத்ரம்) கிராமத்தில் இரண்டாவது ஆண்டாக ஸ்ரீவேணுகோபால ஸ்வாமிக்கு வேதபாராயணத்துடன் விசேஷ பூஜைகள் நடைபெற்றது. பாகவதர்களின் வீதி பஜனை, குழந்தைகள் கோலாட்டம், கயிலாய வாத்தியம், மங்கள வாத்தியத்துடன் ஸ்வாமி திருவீதி ஊர்வலம் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
தண்டலத்தில் ஸ்ரீமடம் சார்பில் மருத்துவச்சேவை, கல்விச்சேவை என பல்நோக்கு வளர்ச்சித்திட்டங்கள் நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

திருச்சியில் வருகிற 24ந்தேதி இந்துசமயமன்றம் சார்பில் நடைபெறவுள்ள ஸ்ரீமந்நாராயணீய பாராயண யக்ஞ பேனர்கள் திருச்சி மாநகரெங்கும் திருக்கோவில் சார்பில் வைக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் வினாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!

எப்போதகத்தும் நினைவார்க்கிடரில்லை
கைப்போதகத்தின் கழல்!
அனைவருக்கும் வினாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!
இந்துசமயமன்றம்
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய,கலாச்சார, பண்பாட்டு சேவை அமைப்பு.