காலமெல்லாம் க்ருஷ்ணபக்தியிலேயே மூழ்கின மஹான். பல்லாயிரக்கணக்கான பக்தர்களை சனாதன வழியில் திருப்பியவர். எண்ணற்ற கைங்கர்யங்கள் பண்ணினவர். பரனூர் மஹாத்மா ஸ்ரீஸ்ரீஸ்ரீக்ருஷ்ணப்ரேமி ஸ்வாமிகளின் மறைவு சனாதன ஹிந்து மதத்திற்கு பேரிழப்பு ஆகும். ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய,கலாச்சார, பண்பாட்டு,சேவை அமைப்பான இந்துசமயமன்றம் அன்னாரின் திருவடிகளில் பக்தியுடன் மலரஞ்சலிகளை சமர்ப்பிக்கிறது. புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன், முனைவர்.கலை.ராம.வெங்கடேசன், கௌரி வெங்கட்ராமன் மாநில அமைப்பாளர்கள். இந்துசமயமன்றம்.

ஸ்ரீஸ்ரீஸ்ரீஜயேந்த்ர ஸரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகளின் ஜயந்தி

ஸ்ரீசங்கர பகவத்பாதாசார்ய பரம்பராகத மூலாம்னாய ஸர்வக்ஞ பீடமாகிய ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் 69வது பீடாதீச்வரராகிய ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீஜயேந்த்ர ஸரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகளின் ஜயந்தி நன்னாளில் இந்துசமயமன்றம் மலரஞ்சலிகளை பக்தியுடன் ஸ்ரீஸ்வாமிகளின் கமல மலரடிகளில் சமர்ப்பிக்கிறது.
இவண்,
மாநில அமைப்பாளர்கள் மற்றும் அன்பர்கள்.

ஸ்ரீமந்நாராயணீய பாராயணம் (02.08.23, புதன்கிழமை)


ஸ்ரீபாங்கேபிகாரி கிருஷ்ணன் திருக்கோவில்,
வஞ்சுவாஞ்சேரி, படப்பை.

ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் 69வது ஆசார்ய ஸ்வாமிகளான ஸ்ரீஸ்ரீஸ்ரீஜயேந்த்ர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் ஜயந்தி தினத்தையொட்டி உலகநலன் வேண்டி, மேற்படி ஸ்ரீகிருஷ்ணன் கோவிலில் இந்துசமயமன்றம் சார்பில் ஸ்ரீமந்நாராயணீய பாராயணம் சிறப்பாக நடைபெற்றது. திருக்கோவில் டிரஸ்டு சார்பில் உணவு மற்றும் அருமையான ஒத்துழைப்பை நல்கினர். 75அன்பர்கள் பங்கு கொண்டனர். வடக்கத்திய பாணியிலான இத்திருக்கோவிலில் ஸ்ரீகிருஷ்ணர், ஸ்ரீவெங்கடாசலபதி, ஸ்ரீராதா கிருஷ்ணர் சந்நிதிகளும், ஸ்ரீகாஞ்சி மஹாபெரியவர் திருப்பாதுகைகளும் உள்ளது. ஒருமுறை சென்று தரிசியுங்கள். ஒயிலாக கிருஷ்ணனின் திருக்கோலம் தரிசித்தால் வெளியே வரவே மனம் வராது.

திருவிளக்கு பூஜை

தாம்பரம் இரும்புலியூர் அருள்மிகு வேம்புலியம்மன் திருக்கோவிலில் ஆடிமாத பௌர்ணமியை முன்னிட்டு 01.08.23 செவ்வாய் கிழமையன்று திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது. கோவில் நிர்வாகிகளுடன் அர்ச்சகர் ஸ்ரீ.சுதேசி.முரளி அருமையாக ஏற்பாடு செய்திருந்தார். இந்துசமயமன்ற மாநில அமைப்பாளர் புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன் பூஜையை நடத்திவைத்தார். தேசீய இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் தேசீய செயலாளர் ஸ்ரீராம் மற்றும் விஎச்பி ஸ்ரீ.கணேஷ்ஜி ஆகியோர் கலந்துகொண்டு சொற்பொழிவாற்றினர்.