அனுஷஅமிர்தம்

அனுஷஅமிர்தம் சார்பில் இரண்டாவது ஆண்டு துவக்க அன்னதானம் இன்று பழங்குடியினர் பகுதியில் ஸ்ரீமஹாபெரியவர் அருளாசியுடன் நடைபெற்றது. இட்லி, வெண்பொங்கல், வடை, சட்னி, சாம்பாருடன், ஜாங்கிரியுடன் பரிமாறப்பட்டது.ஸ்ரீமஹாபெரியவர் அருளாசியுடன் இந்தாண்டு பெருங்களத்தூர் கோசாலையில் பசுவிற்கு தீவனம் வழங்கிட தீர்மானித்து வழங்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம். ஸ்ரீகாஞ்சிப்பெரியவரின் திருவடிகளே சரணம்!

இருளர் மக்கள் பகுதியில் இனிய பொங்கல் திருவிழா

செங்கல்பட்டு மாவட்டம் களிவந்தப்பட்டு கிராம பழங்குடி மக்கள் (இருளர் மக்கள்) பகுதியில் இனிய பொங்கல் திருவிழா இன்று (08.01.2023, ஞாயிறு) இந்துசமயமன்றம் சார்பில் மிகச்சிறப்பாக வழக்கம்போல் இந்தாண்டும் ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகளின் பரிபூரண அருளாசியுடன் நடைபெற்றது. இந்துசமயமன்ற பொன்விழாவையொட்டி சுற்றுப்புறப்பகுதிகளில் வசிக்கும் அந்த மக்களின் சொந்தபந்தங்கள் அனைவரையும் அழைத்துவரச்செய்து அனைவருக்கும் புத்தாடைகள் வழங்கப்பட்டது. இதுதவிர அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கல் பண்டிகை கொண்டாட ஏதுவாக பச்சரிசி, பாகுவெல்லம்,பாசிப்பருப்பு, முந்திரி, ஏலக்காய், திராக்ஷை ஆகியவை அடங்கிய பை வழங்கப்பட்டது. பழங்குடி மக்களின் வாழ்வாதாரம், படிப்பு ஆகியவற்றிற்காக மன்றம் எடுத்துவரும் முயற்சிகளையும், விழிப்புணர்வு ஏற்படுத்தியும் இந்துசமயமன்ற மாநில அமைப்பாளர் புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன் உரையாற்றினார்.அனைவருக்கும் சுவையான மதிய உணவு (சர்க்கரை பொங்கல், வெஜிடபிள் பிரிஞ்சி சாதம், கத்தரிக்காய் பச்சடி,சாம்பார் சாதம், வடை) பரிமாறப்பட்டது. மிகச்சிறப்பாக நடந்தேறிய இந்த விழாவில் இந்துசமயமன்ற மாநில அமைப்பாளர்.ஸ்ரீமதி.கௌரி வெங்கட்ராமன்,களிவந்தப்பட்டு ஊர்பிரமுகர் ஸ்ரீ.சங்கர், ஸ்ரீகிருஷ்ண பவனம் டிரஸ்ட் ஸ்ரீ.ப்ரகாஷ், ஸ்ரீகாஞ்சி கைங்கர்ய சபா,ஸ்ரீ.சுப்ரமணியம், ஸ்ரீ.ஸ்ரீராம், தேசிய இந்து திருக்கோவில் கூட்டமைப்பு ஸ்ரீ.ஸ்ரீராம், ஆர்எஸ்எஸ் ஸ்ரீ.ஸ்ரீனிவாசன், அனுஷ அமிர்தம் ஸ்ரீ.இராமச்சந்திரன்,பிஜேபி.ஸ்ரீ.மன்ராஜ், இந்துசமயமன்றம் டாக்டர்.ஸ்ரீ.சிவசிதம்பரநாதன் மற்றும் மன்ற அன்பர்கள் கலந்துகொண்டனர்.

ஆழ்ந்த இரங்கல்கள்!

பாரதப்பிரதமர் மதிப்பிற்குரிய ஸ்ரீமோதிஜியின் தாயார் ஸ்ரீமதி.ஹீராபென் அவர்களின் மறைவிற்கு இந்துசமயமன்றம் சார்பில் மனமார்ந்த அஞ்சலிகளை தெரிவிக்கிறது. ஆழ்ந்த இரங்கல்கள்!
அம்மையாரின் ஆத்மா இறைவனின் திருவடிகளில் இளைப்பாற ஸ்ரீமஹாபெரியவரின் திருவடிகளில் ப்ரார்த்திக்கிறோம்.
மாநில அமைப்பாளர்கள் மற்றும அன்பர்கள்
இந்துசமயமன்றம்
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய, கலாச்சார, பண்பாட்டு,சேவை அமைப்பு.

மஹாபெரியவர் ஆராதனை

இன்று (20.12.2022 , செவ்வாய் கிழமை) மஹாபெரியவர் ஆராதனை மறைமலைநகர் டாக்டர் அகிலாராம்குமார் அவர்கள் இல்லத்தில் வேதபாராயணம், ருத்ராபிஷேகம், புஷ்பாஞ்சலி என வெகுவிமரிசையாக இந்துசமயமன்றம் சார்பில் நடைபெற்றது. மறைமலைநகர் பிராமணர் சங்கம், நாராயணீய குழு என பலரும் கலந்துகொண்டனர்.

நமஸ்கரித்து புஷ்பாஞ்சலிகளை சமர்ப்பிக்கிறது

ஸ்ரீகுருப்போ நம!
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் 68வது ஆசார்யர் ‘ஸுக்ஷ்ம ஸ்வரூபமாக நடமாடும் தெய்வம்’ ‘காஞ்சி மஹாபெரியவர்’ ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீ சந்திரசேகரேந்த்ர ஸரஸ்வதி சங்கராச்சார்ய மஹாஸ்வாமிகளின் புண்ய ஆராதனை தினமான இன்றைக்கு ஸ்ரீஸ்ரீஸ்ரீமஹாபெரியவர் திருவடிக்கமலங்களில் அவர் தோற்றுவித்த ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய,கலாச்சார, பண்பாட்டு,சேவை அமைப்பான இந்துசமயமன்றம் ஹ்ருதயபூர்வமான பக்தியுடன் நமஸ்கரித்து புஷ்பாஞ்சலிகளை சமர்ப்பிக்கிறது.
மாநில அமைப்பாளர்கள் மற்றும் இந்துசமயமன்றக் கிளை
அமைப்பாளர்களும் அன்பர்களும்.

பர்வதமலை கிரிவல அன்பர்களுக்கு அன்னதானம்

இந்துசமயமன்றம் சார்பில் மார்கழி முதல்நாள்(16.12.2022 வெள்ளிக்கிழமை) பர்வதமலை கிரிவல அன்பர்களுக்கு அன்னதானம் ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள் அருளாசியுடன் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்துசமயமன்ற மாநில அமைப்பாளர் புலவர் ஆத்ரேய சுந்தரராமன் ஆலோசனையின் பேரில் பர்வதமலை அடிவார கிராமமான கடலாடி இந்துசமயமன்ற கிளை அமைப்பாளர் திரு.ஜெயவேல் அவர்கள் சிறப்பாக ஏற்பாடுகளை செய்தார். மாடம்பாக்கம் ஜனகல்யாண் ஸ்ரீ.ஸாயிராம் மற்றும் ஸ்ரீநந்தீஸ்வரர் உழவாரப்பணிமன்ற செயலாளர் ஸ்ரீ.மணிவண்ணன் மற்றும் நண்பர்கள் இந்த நிகழ்ச்சிக்கு பல உதவிகள் செய்தும் நேரில் வருகைதந்து சிறப்பித்தனர்.