இந்துசமயமன்றம் சார்பில் திருக்கார்த்திகை தீபவிழா

பழங்குடி மக்கள் பகுதியில் அவர்களின் முழு ஈடுபாட்டோடு இந்துசமயமன்றம் சார்பில் திருக்கார்த்திகை தீபவிழா. இல்லந்தோறும் இனிய தீபத்திருவிழா.

குருவருள் வேண்டி ப்ரார்த்தனை

ஸ்ரீமந்நாராயணீய பாராயண வைபவத்திற்காக அன்பர்கள் மனமுவந்தளித்த திருமாங்கல்யங்கள் மற்றும் வஸ்த்ரங்கள் ஸ்ரீகாஞ்சிமஹாபெரியவர் மற்றும் ஸ்ரீஜயேந்த்ர சரஸ்வதி ஸ்வாமிகள் அதிஷ்டானங்களில் இன்று (7.12.2022) பௌர்ணமி நன்னாளில் சமர்ப்பிக்கப்பட்டு குருவருள் வேண்டி ப்ரார்த்தனை செய்யப்பட்டது.

தீபத்திருநாளை முன்னிட்டு

இந்துசமயமன்றம் சார்பில் கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு பழங்குடி மக்கள் தீபமேற்ற ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள் அருளாசியுடன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா அரை லிட்டர் சுத்தமான நல்லெண்ணெய்,திரிநூல் கண்டு, அகல் விளக்குகள் மாநில அமைப்பாளர் புலவர் ஆத்ரேய சுந்தரராமன் மூலம் வழங்கப்பட்டது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் தீபத்திருவிழா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் தீபத்திருவிழாவிற்கு தேசிய இந்து திருக்கோவில் கூட்டமைப்பு சார்பில் திருக்குடைகள் சமர்ப்பிக்கும் யாத்திரையில் வண்டலூர் இரணியம்மன் கோவில், ஊரப்பாக்கம் ஸ்ரீசங்கர வித்யாலயா, நந்திவரம் நந்தீஸ்வரர் திருக்கோவில் ஆகிய இடங்களில் இந்துசமயமன்ற மாநில அமைப்பாளரும் தேசீய இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் தேசீய செயற்குழு உறுப்பினருமான புலவர் க. ஆத்ரேய சுந்தரராமன், தேசீய இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் தேசீய செயலாளர் ஸ்ரீ.ஸ்ரீராம்ஜீ,வேதபாரதி ஸ்ரீ.வெங்கட்ராமன்ஜீ, பாஜக ஆலயம் ஆன்மீக மேம்பாட்டுப்பிரிவு மாநில செயலாளர் ஸ்ரீ.வா.கோ.ரங்கசாமிஜீ, வண்டலூர் வழித்துணை பாபா திருக்கோவில் ஸ்ரீ.சாயிராமலிங்கம்ஜீ, மண்டல் தலைவர் ஸ்ரீராமச்சந்திரன்ஜீ, மற்றும் கூட்டமைப்பு, சமயமன்றம் மற்றும் பாஜக நிர்வாகிகள்,அன்பர்கள் வரவேற்ற காட்சிகள்.
நாள். 27.11.2022, ஞாயிறு

ஸ்ரீ தன்வந்த்ரி ஹோமம்

இந்துசமயமன்ற பொன்விழாவை முன்னிட்டு உலகநலன் கருதி ஸ்ரீ தன்வந்த்ரி ஹோமம் இன்று (24.11.22, வியாழக்கிழமை)வெகு சிறப்பாக மறைமலைநகரில் சித்தா டாக்டர் ஸ்ரீமதி அகிலா ராம்குமார் அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது.வழக்கம்போல் அனுஷ பூஜையும் நடைபெற்றது.

தித்திக்கும் தீபாவளி!

இன்று (23.10.22) ஞாயிற்றுக்கிழமை பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதியில் தீபாவளிப்பண்டிகையையொட்டி ஸ்ரீகாஞ்சி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் அருளாசியுடன் இந்துசமயமன்றம் சார்பில் மாடம்பாக்கம் ஜனகல்யாண் மற்றும் மறைமலைநகர் அன்பர்கள் ஒத்துழைப்புடன் இனிப்புகள், காரவகைகள், காலை சிற்றுண்டி (ஸ்பெஷல் இட்லி, வடை, சாம்பார், சட்னி) வழங்கப்பட்டதுடன் நமது சமயமன்ற அன்பர்களும் அவர்களுடனே உணவருந்தி மகிழ்ந்தனர்.

50 பேருக்கு புத்தாடை மற்றும் இனிப்புகள் மாடம்பாக்கம் ஜனகல்யாண் அமைப்பின் ஆதரவுடன் வழங்கப்பட்டது

இந்துசமயமன்றத்தின் பொன்விழா ஆண்டையொட்டி (1972 – 2022) தீபாவளிப்பண்டிகையை முன்னிட்டு ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள் அருளாசியுடன் திருக்கோவில் அர்ச்சகர்கள், பணியாளர்கள் 50 பேருக்கு புத்தாடை மற்றும் இனிப்புகள் மாடம்பாக்கம் ஜனகல்யாண் அமைப்பின் ஆதரவுடன் வழங்கப்பட்டது.பேராதரவு நல்கிய மாடம்பாக்கம் ஜனகல்யாண் ஸ்ரீ.ராம்ராம் சகோதரர்களுக்கும், புத்தாடைகள் வழங்கி உதவிய அனைத்து நல்இதயங்களுக்கும் மனமார்ந்த நன்றியினை இந்துசமயமன்றம் சார்பில் சமர்ப்பிக்கிறோம்.