திருவிளக்கு பூஜை

திருச்சி மாவட்டம் தேனூரில் நமது இந்துசமயமன்ற மூத்த அமைப்பாளர் கல்பாக்கம் ஸ்ரீ.நாகராஜன் அவர்களின் பெருமுயற்சியில் மஹாபெரியவர் அனுஷ நக்ஷத்திரத்தன்று (30.09.2022) திருவிளக்கு பூஜை, சுவாசினி பூஜை மிக விமரிசையாக நடைபெற்றது. நவராத்திரியில் ஸ்ரீமஹா சம்பத் கௌரி எனும் திருநாமம் கொண்ட அம்பாளின் திருக்கோவிலில் இந்த வைபவம் நடந்தது மிக விசேஷம்.

திருவிளக்கு பூஜை

நவராத்திரி விழா!
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய, கலாச்சார, பண்பாட்டு, சேவை அமைப்பான இந்துசமயமன்றம் சார்பில் நவராத்திரி திருவிளக்கு பூஜை செங்கல்பட்டு மாவட்டம் களிவந்தப்பட்டு இருளர் பகுதியில் 2.10.22 ஞாயிறன்று ஸ்ரீகாஞ்சி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் அருளாசியுடன் சிறப்பாக நடைபெற்றது. இந்துசமயமன்ற மாநில அமைப்பாளர் புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன் பூஜையை நடத்தி வைத்தார். சிறப்பு விருந்தினராக டாக்டர்.இரா.அகிலா ராம்குமார் மற்றும் டாக்டர்.சிவ சிதம்பரநாதன், சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழக பேராசிரியர் மற்றும் ஸ்ரீ.ஸாயிராம், அனுஷ அமிர்தம் ஸ்ரீ.ராமச்சந்திரன் ஆகியோர் வருகைபுரிந்தனர். திருவிளக்கு , அனைத்து பூஜை பொருட்கள் மற்றும் மங்கலப்பொருட்கள், அன்னப்ரசாதம் (கேசரி, பருப்பு வடை, புளியோதரை, மினரல் வாட்டர்) அனைவருக்கும் வழங்கப்பட்டது.

இருளர் பகுதி பெண்குழந்தைகளுக்கு கன்யா பூஜை

ஸ்ரீகுருப்யோ நம!
அனுஷ அமிர்தம் சார்பில் நவராத்திரியை முன்னிட்டு அனுஷ நக்ஷத்திர நன்னாளில் (30.09.22, வெள்ளிக்கிழமை) களிவந்தப்பட்டு இருளர் பகுதி பெண்குழந்தைகளுக்கு கன்யா பூஜை (புது வஸ்த்ரம், மங்கலப்பொருட்கள்) மற்றும் வழக்கம்போல அன்னதானம்(ஜாங்கிரி, உளுந்து வடை, சாம்பார் சாதம், மினரல் வாட்டர் பாட்டில்) ஸ்ரீஆசார்ய ஸ்வாமிகள் அருளாசியுடன் சிறப்பாக நடைபெற்றது.

ஸ்ரீ.நரேந்திர தாமோதரதாஸ் மோதிஜி அவர்களின் பிறந்தநாளில்

சனாதன தர்மத்தின் பாதுகாவலரும், நவ பாரதத்தின் யுகசிற்பியும், பாரதத்தாயின் தலைமகனுமான பாரதப்பிரதமர் மாண்புமிகு ஸ்ரீ.நரேந்திர தாமோதரதாஸ் மோதிஜி அவர்களின் பிறந்தநாளில் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய, கலாச்சார, பண்பாட்டு,சேவை அமைப்பான இந்துசமயமன்றம் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கிறது. ஸ்ரீமோதிஜி அவர்கள் எல்லாவித நலன்களும் பெற்று பல்லாண்டுகாலம் பாரதத்தை வழிநடத்திட ஸ்ரீகாஞ்சி மஹாபெரியவர் திருவடிகளை ப்ரார்த்திக்கிறோம்.
இவண்
இந்துசமயமன்ற அமைப்பாளர்கள் மற்றும் அன்பர்கள்.

ஸரஸ்வதி மஹராஜ் அவர்கள் மஹாஸமாதி அடைந்தார்

ஸ்ரீசங்கர சம்ப்ரதாய பீடங்களில் த்வாரகா மற்றும் ஜோஷி மடத்தின் (த்வி)பீடாதீச்வரராக இருந்து அருளாட்சி நடத்திய ஜகத்குரு சங்கராசார்யார் பூஜ்ய ஸ்ரீ ஸ்வரூபானந்த ஸரஸ்வதி மஹராஜ் அவர்கள் மஹாஸமாதி அடைந்தார். நமது மூலாம்னாய ஸர்வக்ஞபீடமாகிய ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதீஸ்வரர்களிடம் மிகுந்த அன்பும் அபிமானமும் கொண்டவர்கள். ஸ்ரீஸ்வாமிகளிடம் மறைவிற்கு இந்துசமயமன்றம் சார்பில் அஞ்சலி நமஸ்காரங்களை சமர்ப்பிக்கிறோம்.

இருளர் பகுதியில் அன்னதானம்

சேவாபாரதி தமிழ்நாடு, தாம்பரம் சார்பில் கீர்த்திமஹான் அன்னதான யோஜனா திட்டத்தின் கீழ் 11.09.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை கூடுவாஞ்சேரி அருகில் வல்லாஞ்சேரி இருளர் பகுதியில் அன்னதானம் (லட்டு, புளியோதரை, உளுந்து வடை, ஆவின் பால் பாக்கெட், மினரல் வாட்டர் பாட்டில்) வழங்கப்பட்டது. அவ்வமயம் இந்துசமயமன்ற மாநில அமைப்பாளர் புலவர் க.ஆத்ரேய சுந்தரராமன் இருளர் மக்களுக்கு நமது இந்து தர்மம் பற்றியும் கொரானோ தடுப்பூசி போடுவதின் அவசியம் பற்றியும் விளக்கினார். அனுஷ அமிர்தம் ஸ்ரீ.க.இராமச்சந்திரன், இந்துசமயமன்ற அன்பர் ஸ்ரீ.சாயிராம், ஊர் அன்பர் ஸ்ரீ.அருள் ஆகியோர் வந்திருந்தனர்.