கோபூஜை

ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதீச்வரரான ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சார்ய மஹாஸ்வாமிகளின் 57வது ஜயந்தி மஹோத்சவத்தின் ஒரு நிகழ்வாக ஸ்ரீஸ்வாமிகள் அவதரித்த புனித க்ஷேத்ரமான திருவள்ளூர் மாவட்டம் தண்டலம் கிராமத்தில் 19.02.25 புதன்கிழமை இந்துசமயமன்றம் சார்பில் நடைபெற்ற மூன்றாவது ஆண்டு கோபூஜை.

இந்துசமயமன்றத்தின் ஏழாம் ஆண்டு பொங்கல் திருவிழா!

நாள் 05.02.25 ஞாயிறு
இடம்: கலிவந்தப்பட்டு பழங்குடி மக்கள் பகுதி
செங்கல்பட்டு மாவட்டம்

ஸ்ரீகாஞ்சி சங்கராச்சார்ய ஸ்வாமிகளின் அருளாசியுடன், ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய,கலாச்சார, பண்பாட்டு,சேவை அமைப்பான இந்துசமயமன்றம் சார்பில் கடந்த ஆறு ஆண்டுகளாக பல்வேறு பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளில் அவர்களின் வாழ்க்கைத்தரம் உயர பாடுபட்டு வருகிறது. குறிப்பாக பெண்கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துச்சொல்லி படிக்க உதவிவருகிறது. தமிழரின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் திருவிழா அப்பகுதிகளில் மிகச்சிறப்பாக நடைபெற்றுவருகிறது.
அந்த வகையில் இந்த 2025 ஆண்டு ஏழாம் ஆண்டாக கடந்த 5.1.2025 ஞாயிற்றுக்கிழமை செங்கை மாவட்டம் கலிவந்தப்பட்டு பழங்குடி மக்கள் பகுதியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கோலாகலமாக தெரு முழுக்க கோலங்களுடன் களைகட்டிய நிகழ்வில் மக்களுக்கு வழக்கம்போல் புத்தாடையுடன் பொங்கல் பரிசாக பச்சரிசி, பாகுவெல்லம்,பாசிப்பருப்பு, பசுநெய், திராட்சை,முந்திரி,ஏலக்காய் அடங்கிய பை வழங்கப்பட்டது. சமயமன்ற அன்பர்கள் உட்பட அனைவருக்கும் அருமையான மதிய உணவு (கேசரி,,வெஜிடபிள் பிரிஞ்சி சாதம், கத்தரிக்காய் பச்சடி) பரிமாறப்பட்டது. இதற்கு மனமுவந்து உதவிய ஸ்ரீகாஞ்சி கைங்கர்ய சபா அன்பர்கள், இந்துசமயமன்ற அன்பர்கள்,மறைமலைநகர் ஸ்ரீக்ருஷ்ணபவனம் டிரஸ்ட், அனுஷஅமிர்தம் அன்பர்கள், பிடிஅரிசிதிட்ட அன்பர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை காணிக்கையாக்குகிறோம். அனைவருக்கும் ஸ்ரீகாஞ்சி மஹாபெரியவரின் அருளாசிகளை ப்ரார்த்திக்கிறோம்.
குருசேவையில்,
புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன்
கௌரி வெங்கட்ராமன்
அமைப்பாளர்கள்,
இந்துசமயமன்றம்.

ஹனுமத் ஜெயந்தி!

அஸாத்ய ஸாதக ஸ்வாமியான ஹனுமன் நமது அனைத்து நற்செயல்களிலும் துணை நிற்க ப்ரார்த்திப்போம்.
இந்துசமயமன்றம்
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய,கலாச்சார, பண்பாட்டு,சேவை அமைப்பு

அனுஷ ஆவஹந்தீ

இன்றைய (28.12.24, சனிக்கிழமை) அனுஷ ஆவஹந்தீ ஹோமம், ஸ்ரீகாஞ்சிப்பெரியவருக்கு விசேஷ அபிஷேகம் சென்னை,சாலிக்கிராமத்தில் ஸ்ரீ.ரவிச்சந்திரன்- ஸ்ரீவித்யா தம்பதிகளின் இல்லத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. ப்ரம்மஸ்ரீ.கைலாஷ் கனபாடிகள் பூஜையை நடத்திவைத்தார்.

இந்துசமயமன்றம் மற்றும் மறைமலைநகர் பிராமணர்கள் சங்கம் இணைந்து நடத்திய
ஸ்ரீமஹாபெரியவர் ஆராதனை (27.12.24, வெள்ளிக்கிழமை மாலை) – மறைமலைநகர் ஸ்ரீஐயப்பன் கோவிலில்
வேதபாராயணத்துடன் மஹா அபிஷேகம் மற்றும் ஸ்ரீஸௌந்தர்யலஹரி பாராயணம், வேதோக்த அஷ்டோத்ர பூஜை, தோடகாஷ்டக நமஸ்காரம், மஹா தீபஹாரத்தி, அருட்ப்ரசாதம் (சர்க்கரைப்பொங்கல், கேசரி வெண்பொங்கல், தேங்காய் சட்னி)