இந்துசமய பண்பாட்டு பயிற்சி வகுப்பு

இந்துசமய பண்பாட்டு பயிற்சி வகுப்பு சான்றிதழ் வழங்கும் விழா 03.07.2022 ஞாயிற்றுக்கிழமை மதுராந்தகம் அருகில் வேதவாக்கம் கிராமத்தில் நடைபெற்றது. நாற்பது குழந்தைகள் பத்துநாள் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டனர். அவர்களுக்கு சான்றிதழ், நோட்டு, எழுது கருவிகள், ஆன்மீக புத்தகம் இந்துசமயமன்றம் சார்பில் வழங்கப்பட்டது. இதற்காக பெருமுயற்சி எடுத்த செங்கை தெற்கு மாவட்ட இந்துமுன்னணி தலைவர் ஸ்ரீ.ஏழுமலை அவர்கள் மற்றும் பயிற்சி அளித்த ஆசிரியர்களை பாராட்டி சால்வை போர்த்தி நினைவு புத்தகப்பரிசு இந்துசமயமன்றம் சார்பில் வழங்கப்பட்டது. பரிசுகளை பேராசிரியர் டாக்டர்.சிவசிதம்பரநாதன் மற்றும் அனுஷ அமிர்தம் ஸ்ரீ.ராமச்சந்திரன் ஆகியோர் வழங்கினர். இந்துசமயமன்ற மாநில அமைப்பாளர் புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன் வாழ்த்துரை வழங்கினார்.

ஸ்ரீசந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதி மஹாஸ்வாமிகளின் ஜயந்தி

அனுஷத்தின் நாயகருக்கு அனந்தகோடி நமஸ்காரங்கள்!

ஸ்ரீசங்கர பகவத்பாதாசார்ய பரம்பராகத மூலாம்னாய ஸர்வக்ஞபீடம் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் 68வது சங்கராச்சார்ய முனிவரரும் கண்கண்ட தெய்வமாய் இன்றளவும் பல லீலாவினோதங்களை நிகழ்த்திவருபவரும் இந்துசமயமன்றத்தை தோற்றுவித்தவருமான ஜகத்குரு ஸ்ரீசந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதி மஹாஸ்வாமிகளின் ஜயந்தி நன்னாளாம் இன்றைய வைகாசி அனுஷ நன்னாளில் இந்துசமயமன்றம் தன் பக்திபூர்வமான ஹ்ருதயபூர்வமான கோடி கோடி நமஸ்காரங்களை ஸ்ரீசரணர்களின் அருட்கமல மலரடிகளில் சமர்ப்பிக்கிறோம்.
இவண்
புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன்
முனைவர்.கலைராம.வெங்கடேசன்
கௌரி வெங்கட்ராமன்
அமைப்பாளர்கள் மற்றும் கிளை மன்ற அன்பர்கள்.

அனுஷம்
தந்த
அருட்கொடை.!
💐🙏🏻💐
*
அனுஷம் தந்த
அருட் கொடை ..!
அமானுஷ்யம்
அவர் நடை…!
உலகம் எல்லாம்
பார்த்தது..!
மானுடத்தை
ஈர்த்தது.!
அவரைப்போல
யாருங்க.?
மகான் இருந்தா
கூறுங்க.!
💐
நமது மனதில்
உள்ளதை
அவரே அறிந்து
கூறுவார்..!
ஏழையிவன்
என்றதும்
வள்ளலாக
மாறுவார்..!
கருணைக்கடல்
இவருங்க..!
இவருக் கீடு
எவருங்க..?
💐
நடமாடும்
தெய்வங்க..!
நாளும்வணங்கி
உய்வங்க.!
இந்தியாமுழுக்க
நடந்தவர்..!
சிவமேன்னு
கிடந்தவர்..!
பார்வை பட்டா
போதுமே..!
குறையிலை எப்
போதுமே.!
💐
கையைஉயர்த்தி
எப்போதும்..!
ஆசி வழங்கு
வாருங்க..!
அஃது ஒன்றே
ஐஸ்வர்யம்..!
வீடு வந்து
சேருங்க..!
காஞ்சி மகான்
பிறர்க் குதவும்
கலங்கரை
விளக்கமே..!
பல்லுயிரும்
அன்புடனே
வாழ படி
அளக்குமே..!
💐
சூட்சும மாய்க்
காஞ்சி மகான்
உலகை வலம்
வருகிறார்..!
அவரவர் செய்
தவத்துக் கேற்ப
அருட் காட்சி
தருகிறார்…!
காஞ்சிமகான்
உலகு புகழ்
காமாட்சியின்
அம்சமே..!
பெரியவரை
வணங்கி வந்தா தழைக்கும் நமது
வம்சமே…!
💐
மங்காப் புகழ்
மாதவமே.!
மகாப்பெரியவா
வருகவே..!
நினது அருட்
பாத மலர்..
பணிவம்.!அருள்
தருகவே..!
💐🙏🏻💐
விசூர்மாணிக்கம்
13.06.2022.
கவிதை.1374.
🦚

“அனுஷ அமிர்தம்”

ஸ்ரீமஹாபெரியவர் ஜயந்தியையொட்டி (13.06.2022 திங்கட்கிழமை) வழக்கம்போல் அனுஷ அமிர்தம் சார்பில் இருளர் பகுதியில் அன்னப்ரசாதம் (திருப்பதி லட்டு, வடை, தக்காளி சாதம்,வாட்டர் பாட்டில்) வழங்கப்பட்டது.

மறைமலைநகரில் இந்துசமயமன்றம் மற்றும் மறைமலைநகர் பிராமணர்சங்கம் சார்பில் காஞ்சிப்பெரியவர் ஜயந்தி ருத்ராபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள்
நாள்:13.06.2022 திங்கட்கிழமை மாலை

ஸ்ரீகாஞ்சி மஹாபெரியவர் ஜயந்தி பூஜை

இந்துசமயமன்றம்

ஸ்ரீகாஞ்சி மஹாபெரியவர் ஜயந்தி பூஜை
நாள்: 13.06.2022, திங்கட்கிழமை
இடம்: மறைமலைநகர்
டாக்டர்.அகிலா ராம்குமார் அவர்கள் இல்ல வளாகம்
வள்ளியம்மையார் தெரு,NH2
நேரம்: மாலை 4 மணியளவில்
நிகழ்ச்சிகள்:
மாலை.4.00 மணிஸ்ரீகணேச வந்தனம்
ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாம பாராயணம்
ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம்
மாலை.5.00 மணி
ஸ்ரீமஹாபெரியவாளுக்கு விசேஷ ருத்ராபிஷேகம்.
வேதபாராயணம்
6.30 மணி: நாம பஜனை,
சத்சங்கம்
7.30 மணி: மஹா ஹாரத்தி
அன்னப்ரசாதம்
குறிப்பு: 13.06.22 அன்று காலை வழக்கம்போல் அனுஷ அமிர்தம் சார்பில் இருளர் பகுதியில் சிறப்பு அன்னதானம் நடைபெறும்.
அனைவரும் வருக! ஆசார்யர்களின் அருள் பெறுக!

1.07.22 திங்கட்கிழமை சோமப்ரதோஷ நன்னாளில் வேதோக்தமாக

மிகப்பழைமை வாய்ந்த சோழநாட்டு சைவத்திருத்தலங்களில் ஒன்றும், வருணபகவானால் பூஜிக்கப்பட்ட பெருமை வாய்ந்ததும், அதிசயமான நடராஜர் வீற்றிருக்கும் கோனேரிராஜபுரத்திற்கு மிக அருகாமை சிவத்தலமும், ஸ்ரீகாஞ்சி மஹாபெரியவர் மற்றும் ஸ்ரீபுதுப்பெரியவரால் பூஜிக்கப்பட்ட திருத்தலமும் ஆன சிவனார் அகரம் ஸ்ரீஜலமுகளாம்பிகை சமேத ஸ்ரீவாருணீச்வரஸ்வாமி திருக்கோவிலில் ஏகாதச ருத்ராபிஷேகம் ஸ்ரீகாஞ்சி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் அருளாசியுடன் வருகிற 11.07.22 திங்கட்கிழமை சோமப்ரதோஷ நன்னாளில் வேதோக்தமாக நடைபெற உள்ளது. கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு சென்னையில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டபோது ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதீச்வரரான ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளை இந்துசமயமன்றம் சார்பில் ப்ரார்த்திக்க ஸ்ரீஸ்வாமிகள் ஏகாதச ருத்ராபிஷேகம் விசேஷ ஸ்தலமான சிவனார்அகரத்தில் செய்ய பணித்தருள அதன்படியே மிக விமரிசையாக நடந்த அந்த அபிஷேகம் பூர்த்தியானதும் அன்று மாலையே மழை வருஷித்தது. தண்ணீர் பஞ்சம் தீர்ந்தது. அடுத்த வருஷமும் அபிஷேகம் வெகுசிறப்பாக நடைபெற்று மாலை மழை பெய்தது கண்கூடு.கொரானோவினால் தடைபட்ட அபிஷேகம் இந்த வருடம் சிறப்பாக ஈசனருளால் நடைபெற இந்துசமயமன்றம் சார்பில் முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.இந்த புனித கைங்கர்யத்திற்கு அனைவரையும் பங்கு கொள்ள அழைக்கிறோம்.
இந்துசமயமன்றம்
மற்றும் சிவனார் அகரம் கிராமப்பொதுமக்கள்.

அரிசித் திட்ட சேகரிப்புக்காக 25பக்கெட் மற்றும் உண்டியல் வழங்கப் பட்டது

சேவா பாரதி, தாம்பரம் மாவட்டம் மூலம் கூடுவாஞ்சேரி இந்து சமய மன்றத் துக்காக, காஞ்சி மகாஸ்வாமிகள் அறிவுறுத்திய பிடி அரிசித் திட்ட சேகரிப்புக்காக 25பக்கெட் மற்றும் உண்டியல் வழங்கப் பட்டது. காஞ்சி மகாஸ்வாமிகளின் வைகாசி அனுஷ நட்சத்திரத் தன்று (17/05/2022, செவ்வாய்) நடைபெற்ற இந்நிகழ்வில் இந்து சமய மன்றம் முதல் கிளை நிறுவனரான ராம் ராம் ஶ்ரீ சுந்தர ராமன் ஜி கலந்து கொண்டு மன்றம் சார்பாக மேற்படி பொருட்களை பெற்றுக் கொண்டார். உடன் சேவா பாரதி மாவட்ட பொருளாளர் ஶ்ரீ சங்கர் ஜி, RSS மாவட்ட கோ சேவா பொறுப்பாளர் ஆடிட்டர் ஶ்ரீகாந்த் ஜி, ராம் சேவா இயக்க மாவட்டத் தலைவர் சசிகுமார், காமதேனு சாரிடீஸ் நிறுவன அறங்காவலர் சங்கர கிருஷ்ணன் ஜி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

அனுஷ பூஜை

இன்றைய 17.5.22 செவ்வாய்கிழமை மறைமலைநகரில் இந்துசமயமன்றம் மற்றும் மறைமலைநகர் பிராமணர்சங்கம் சார்பில் நடைபெற்ற அனுஷ பூஜை.

மாத அனுஷத்தின் அன்னதானம்

அனுஷ அமிர்தம் சார்பில் வழக்கம்போல் இந்த மாதமும் வைகாசி மாத அனுஷத்தின் அன்னதானம் (பாதூஷா,புளியோதரை,உருளைக்கிழங்கு பொரியல்,வடை,வாழைப்பழம்,தண்ணீர் பாட்டில்) இருளர் பகுதியில் நடைபெற்றது. நமது சமயமன்ற திருக்கோவில் எண்ணெய் பொறுப்பாளர் ஸ்ரீ.க.இராமச்சந்திரனும், யஉபயதாரர் ஸ்ரீ.சாய்ராமும் ஸ்ரீகாஞ்சிப்பெரியவர் திருவடிகளில் உலகநன்மை வேண்டி ப்ரார்த்தனை செய்து அமுதளித்தனர்.