ஸ்ரீசங்கர ஜயந்தி

ஸ்ருதி ஸ்மிருதி புராணானாம் ஆலயம் கருணாலயம் I நமாமி பகவத்பாத சங்கரம் லோகசங்கரம்II ஸ்ரீசங்கர ஜயந்தி நன்னாளில் ஜகத்குருவின் மலரடிகளில் இந்துசமயமன்றம் தன் ஹ்ருதயபூர்வமான நமஸ்காரங்களை சமர்ப்பிக்கிறது.

ஸ்ரீசங்கர ஸ்ரீராமானுஜ ஜயந்தி விழா

இன்று 6.5.22 வெள்ளிக்கிழமை மறைமலைநகரில் பிராமணர்கள் சங்கமும் இந்துசமயமன்றமும் இணைந்து ஐயப்பன் கோவிலில் நடத்திய ஸ்ரீசங்கர ஸ்ரீராமானுஜ ஜயந்தி விழா. மகளிர் மண்டலி சார்பில் ஸ்ரீவிஷ்ணு-ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாம பாராயணம், தோடகாஷ்டகம், மற்றும் புலவர் க.ஆத்ரேய சுந்தரராமனின் சிறிய சொற்பொழிவு, ஸ்ரீசங்கரருக்கும் ஸ்ரீராமானுஜருக்கும் அஷ்டோத்ர பூஜை, மஹா ஹாரத்தி, ப்ரசாத விநியோகம் சிறப்பாக நடைபெற்றது. பிராமணர் சங்க மற்றும் சமயமன்ற அன்பர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

ஸ்ரீசங்கர – ஸ்ரீராமானுஜ ஜயந்தி விழா

இந்துசமயமன்றம் மற்றும் மறைமலைநகர் பிராமணர்கள்சங்கம் இணைந்து நடத்தும்
ஸ்ரீசங்கர – ஸ்ரீராமானுஜ ஜயந்தி விழா
நாள் : 06.05.2022 வெள்ளிக்கிழமை
நேரம்: மாலை. 5.00 மணி
இடம்: ஸ்ரீஐயப்பன் திருக்கோவில், மறைமலைநகர்.
நிகழ்ச்சி நிரல்
மாலை.5.மணி.
ஸ்ரீகாஞ்சி மஹாபெரியவர் பளிங்குத்திருமேனி ஸ்வரூபமாக ஐயப்பன் கோவிலுக்கு எழுந்தருளல்.
மாலை.5.05.வினாயகர் வணக்கம்
மாலை.5.10. ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம்
ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாம பாராயணம்
மாலை.6.10. ஸ்ரீசங்கரர் மற்றும் ஸ்ரீராமானுஜரின் மஹிமைகள்
மாலை.6.30.ஸ்ரீசங்கர- ஸ்ரீராமானுஜ அஷ்டோத்ர பூஜை.
தோடகாஷ்டகம்.
மாலை.7.00 மணி மஹா தீப ஹாரத்தி, உபசார பூஜை
மாலை.7.15. ப்ரசாத விநியோகம்.
அனைவரும் வருக!
ஆசார்யர்களின் அருளைப்பெறுக!

ஸ்ரீசங்கர – ஸ்ரீராமானுஜ ஜயந்தி திருவிழா

மறைமலை நகர் பிராமணர்கள் சங்கம், இந்துசமயமன்றம் இணைந்து நடத்தும் ஸ்ரீசங்கர – ஸ்ரீராமானுஜ ஜயந்தி திருவிழா மே ஆறாம் தேதி மாலை மறைமலைநகர் ஐயப்பன் கோவிலில் நடைபெற உள்ளது. ஸ்ரீமஹாபெரியவர் பளிங்குத்திருமேனி ஸ்வரூபமாக எழுந்தருளி அருள்பாலிக்க உள்ளார்.கலைநிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.

மறைமலைநகரில் அனுஷ பூஜை!

19.04.22 செவ்வாய்க்கிழமை மாலை மறைமலைநகர் சித்தா டாக்டர் திருமதி.அகிலா ராம்குமார் அவர்கள் இல்லத்தில் இந்துசமயமன்றம் சார்பில் அனுஷபூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது. விசேஷமாக திருச்சூர் ஸ்ரீ.வாசுதேவன் நம்பூதிரி அவர்கள் வருகை புரிந்து சங்கடஹரசதுர்த்தி விநாயகர் பூஜையை நடத்திவைத்தார்கள்.புலவர்.க.ஆத்ரேய சுந்தர ராமன்,ப்ரம்மஸ்ரீ.ராமமூர்த்தி ஆகியோர் பூஜை செய்தனர். பூஜை நிறைவில் கொல்லிமலை கந்தகுருசித்தர் ஸ்வாமிகளும் காஞ்சிபுரம் பாலா ராஜேஸ்வரி பீடம் ஸ்வாமிகளும் வருகைபுரிந்து ஆசி வழங்கினர். அனைவருக்கும் அன்னப்ரசாதம் சிறப்பாக வழங்கப்பட்டது. மறைமலைநகர் பிராமணர்கள் சங்கம் டாக்டர்.அகிலா ராம்குமார், ஸ்ரீ.ப்ரகாஷ், ஸ்ரீமதி.மஹாலக்ஷ்மி மற்றும் அன்பர்கள் கலந்துகொண்டு பூஜை ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.

ரிஷப வாகனம்

நமது சமயமன்ற அன்பர் சிவஸ்ரீ.மணிவண்ணன் மற்றும் அவர் நண்பர்கள் கடம்பூர் கைலாசநாதஸ்வாமி திருக்கோவிலுக்கு இன்றைய ப்ரதோஷத்தில் அர்ப்பணித்த ரிஷப வாகனம்.

கடம்பூர் அருள்மிகு பாலாம்பிகா சமேத கைலாசநாதஸ்வாமி திருக்கோவில் (மறைமலைநகர் அருகில்)

கிருஷ்ணதேவராயர் காலத்திய கல்வெட்டு உள்ள கோவில். மிகப்பழமையானது.

ஸ்ரீஜீயர் ஸ்வாமிகள் அருளாசி வழங்கினார்கள்

இன்று 17.4.2022 ஞாயிற்றுக்கிழமை மன்னார்குடி ஜீயர் ஸ்வாமிகள் ஸ்ரீமத் பரமஹம்ஸ செண்டலங்கார செண்பகமன்னார் ஜீயர் ஸ்வாமிகளை சென்னையில் சமயமன்ற அன்பர்களுடன் தரிசித்து ஆசி பெற்றோம். ஸ்ரீஜீயர் ஸ்வாமிகள் நடைபெற்று வரும் இந்துசமயமன்ற பணிகள் பற்றி கேட்டு மிகவும் சந்தோஷித்து அருளாசி வழங்கினார்கள்.

திருவிளக்கு பூஜை 16.4.22 சனிக்கிழமை

இந்துசமயமன்றம் சார்பில் தண்டலத்தில் (ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடம் ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் அவதாரஸ்தலம்)திருவிளக்கு பூஜை 16.4.22 சனிக்கிழமை சித்ரா பௌர்ணமி நன்னாளில் ஊர் பொதுமக்களின் பேரதரவுடன் நடைபெற்றது. 180க்கும் மேற்பட்ட மகளிர் கலந்து கொண்டனர்.முன்னதாக தண்டலம் கிராம தேவதை அருள்மிகு பொன்னியம்மன் திருக்கோவிலிலிருந்து ஊர்வலமாக அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீபெரியவர் திருவுருவப்படம் பல்லக்கில் வைத்து விழா நடைபெறும் இடமான ஸ்ரீகாமாக்ஷி அம்மன் சமேத தருணீச்வரஸ்வாமி ஆலயத்திற்கு பாகவர்களின் நாமசங்கீர்த்தனத்துடன் கொண்டுவரப்பட்டது. நூற்றுக்கணக்கான மக்கள் ஊர்வலமாக வந்தனர். திருவிளக்கு பூஜையை இந்துசமயமன்ற அமைப்பாளர் புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன் நடத்தி வைத்தார்.ஸ்ரீசங்கரா கலைக்கல்லூரி மாணவ மாணவியர் கல்லூரி முதல்வர் முனைவர்.கலை.ராம வெங்கடேசன் தலைமையில் வந்து உதவினர்.ஆடிட்டர் ஸ்ரீகாந்த்ஜி, விஎச்பி பிரமுகர் ஸ்ரீ.ஸ்ரீராம்ஜி, ஸ்ரீகாஞ்சி கைங்கர்ய சபா ஸ்ரீ.வெங்கட்ராமன்ஜி, ஸ்ரீனிவாசன்ஜி, சென்னபுரி இந்துசமயமன்றம் ஸ்ரீ.ஹரிஹரன்ஜி,சமுதாயக்கல்லூரி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீ.M.K.ஸ்ரீதர்ஜி,கவுன்சிலர்.ஸ்ரீமதி.வித்யாலக்ஷ்மி மற்றும் கிராமப்பெரியோர்கள் கலந்துகொண்டனர்.