இருளர் பழங்குடியினர் பகுதியில் அன்னதானம்

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இந்துசமயமன்றம் சார்பில் இருளர் பழங்குடியினர் பகுதியில் அன்னதானம். (பாதூஷா, தக்காளி சாதம், உருளைக்கிழங்கு பொரியல்)

ராதா மாதவஸ்வாமி, நமசங்கீர்த்தனத்துடன் நகர்வலக்காட்சிகள்.

02.04.22 சனிக்கிழமை யுகாதி பண்டிகை மறைமலைநகரில் ஸ்ரீமஹாபெரியவர், ராதா மாதவஸ்வாமி, நமசங்கீர்த்தனத்துடன் நகர்வலக்காட்சிகள்.

இருளர் பகுதியில் அன்னதானம்

இன்று (23.3.22, புதன் கிழமை காலை)அனுஷ அமிர்தம் சார்பில் களிவந்தப்பட்டு இருளர் பகுதியில் அன்னதானம் (லட்டு, வடை, வெஜிடபுள் புலாவ், ரெய்தா) ஸ்ரீமஹாபெரியவர் அருளாசியுடன் நடைபெற்றது.

அனுஷநக்ஷத்ர சிறப்பு பூஜை

இன்று மாலை (23.03.22, புதன்கிழமை மாலை) மறைமலைநகர் இந்துசமயமன்றம் சார்பில் அமைப்பாளர் ஸ்ரீ.ப்ரகாஷ் அவர்கள் இல்லத்தில் ஸ்ரீமஹாபெரியவரின் அவதாரத்திருநக்ஷத்ரமாகிய அனுஷநக்ஷத்ர சிறப்பு பூஜை, வேதபாராயணம், ஸ்ரீலலிதா, ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம், மகளிர் கும்மிப்பாட்டு, அஷ்டோத்ர பூஜை என மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இரவு சுவையான சிற்றுண்டி வழங்கப்பட்டது.

சங்கராச்சார்ய மஹாஸ்வாமிகளின் நான்காவது வருஷ ஆராதனை

ஸ்ரீசங்கர பகவத்பாதாசார்ய பரம்பராகத மூலாம்னாய ஸர்வக்ஞபீடம் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் 69வது பீடாதீச்வரர் ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீஜயேந்த்ர சரஸ்வதி சங்கராச்சார்ய மஹாஸ்வாமிகளின் நான்காவது வருஷ ஆராதனை நாளில் (15.03.22, செவ்வாய்கிழமை) ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய,கலாச்சார, பண்பாட்டு,சேவை அமைப்பான இந்துசமயமன்றம் சார்பில் ஸ்ரீஸ்வாமிகளின் திருவடிக்கமலங்களில் ஹ்ருதயபூர்வமான பக்தியுடன் அனேக கோடி வந்தனங்களுடன் நமஸ்கரிக்கிறோம்.
புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன்
முனைவர்.கலைராம.வெங்கடேசன்,
ஸ்ரீமதி.கௌரி வெங்கட்ராமன்,
மற்றும் கிளைஅமைப்பாளர்கள்,அன்பர்கள்.

நான்காவது வருஷ ஆராதனையை

இந்துசமயமன்றம் சார்பில் ஸ்ரீகாஞ்சி காமகோடிபீடம் ஸ்ரீபுதுப்பெரியவர் ஸ்ரீஜயேந்த்ர சரஸ்வதி ஸ்வாமிகள் நான்காவது வருஷ ஆராதனையை முன்னிட்டு களிவந்தப்பட்டு இருளர் பகுதியில் அன்னதானம் (ஜாங்கிரி, கீரை வடை, வெஜிடபிள் பிரிஞ்சி சாதம்) வழங்கப்பட்டது. இன்றைய நிகழ்ச்சியில் அன்பு சகோதரர் ஸ்ரீ.ஸ்ரீராம்ஜி (செங்கை மாவட்ட செயலாளர்,விஸ்வ ஹிந்து பரிஷத்)அவர்கள் கலந்துகொண்டு அன்னதானம் உபயமாக வழங்கினார்.

ஸ்ரீஸ்ரீஸ்ரீசங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகளின் ஜெயந்தி

ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதீச்வரர் ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகளின் ஜெயந்தி திருவிழாவை முன்னிட்டு இந்துசமயமன்றம் சார்பில் இன்று 27.02.2022 ஞாயிற்றுக்கிழமை செங்கல்பட்டு மாவட்டம் களிவந்தப்பட்டு இருளர் பகுதியில் அன்னதானம் நடைபெற்றது. ரவாகேசரி,ஜாங்கிரி,கீரைவடை,சாம்பார் சாதம், உருளைபட்டாணி பொரியல், தண்ணீர் பாட்டில் ஆகியவை ஸ்ரீகாஞ்சி கைங்கர்ய சபா ஆதரவில் அளிக்கப்பட்டது.