இந்துசமயமன்றம் சார்பில் வருடந்தோறும் பர்வதமலை அன்னதானம் (16.12.24) இடம்.கடலாடி கிராமம் கிரிவலப்பாதை 2024 வருடம் குரோதி வருஷ மார்கழி ஒன்றாம் நாள் ஸ்ரீகாஞ்சி மாமுனிவர் பர்வதமலையை கிரிவலம் செய்த நிகழ்வை போற்றும்வண்ணம் ஒவ்வொருவருஷமும் ஆயிரக்கணக்கான மக்கள் பர்வதமலையை பக்தியுடன், ச்ரத்தையுடன் கிரிவலம் வருகின்றனர். ஸ்ரீமடம் சார்பில் ஸ்ரீமஹாபெரியவர் உத்ஸவ விக்ரஹஸ்வரூபியாக கிரிவலத்தில் எழுந்தருளி கிரிவலம் நடக்கிறது. ஸ்ரீமடத்தின் சமய,கலாச்சார, பண்பாட்டு சேவை அமைப்பான இந்துசமயமன்றம் சார்பில் ஒவ்வொரு வருடமும் அன்னதானம் கிரிவலப்பாதையில் பர்வதமலை அடிவார கிராமமான கடலாடியில் சிறப்பாக நடக்கிறது. இந்த வருடம் கிரிவலப்பாதையெங்கும் இந்துசமயமன்றம் சார்பில் பக்தர்களை வரவேற்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. சுமார் 2000 பேருக்கு ரவாகிச்சடி, பாசுமதி அரிசி பிரிஞ்சி சாதம், கத்தரிக்காய் பச்சடி வழங்கப்பட்டது. இதற்கு பெருமளவில் உதவி செய்த மாடம்பாக்கம் ஜனகல்யாண் அமைப்பு, செம்பாக்கம் ஸ்ரீ.ராஜ்மோகன் (காரப்பட்டு) குடும்பத்தினர், கூடுவாஞ்சேரி மணிவண்ணன் குழுவினர், மறைமலைநகர் நாராயணீயம் குழு, ஸ்ரீமதி மஹாலக்ஷ்மிகண்ணன் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள்! கடலாடியில் ஏற்பாடுகள் சிறப்பாக செய்துதந்த கடலாடி இந்துசமயமன்ற கிளை அமைப்பாளர் திரு.ஜெயவேலு மற்றும் அவர் நண்பர்களுக்கு நமது பாராட்டுதல்களும், நன்றிகளும்! அன்னதானநிகழ்விற்கு உதவிய ஸ்ரீ.வெங்கட்ராமன், ஸ்ரீகாஞ்சிகைங்கர்யசபா, மற்றும் அனுஷஅமிர்தம் ஸ்ரீ.ராமச்சந்திரனுக்கு நன்றிகள்! அடுத்த வருடம் நமது இலக்கு ஐந்தாயிரம் பேருக்கு அன்னதானம் செய்ய தங்கள் அனைவரின் ஒத்துழைப்புடன் முயற்சிப்போம். குருவருள் துணை நிற்கட்டும்! புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன் மாநில அமைப்பாளர், இந்துசமயமன்றம்.
சிவனடியார்களுக்கு, சாதுக்களுக்கு, கிரிவலம் செய்யும் அடியார் பெருமக்களுக்கு அமுது படைத்திடுவோம் வாருங்கள்!
உண்ணாமுலை உமையாளுடன் அண்ணாமலை அண்ணலை வணங்கி, இனிய திருக்கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம்! சகல நலன்களும் அனைவருக்கும் உண்டாகட்டும்! இந்துசமயமன்றம் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய, கலாச்சார, பண்பாட்டு,சேவை அமைப்பு
நமஸ்காரங்கள்! கடந்த மாதத்தில் கிடைத்த பிடி அரிசி மற்றும் பருப்பு வகைகள் பாடசாலை தவிர புயலால், பெருமழையால் பாதிக்கப்பட்ட திருவண்ணாமலை மாவட்டத்திற்கும் வழங்கப்பட்டது. ஸ்ரீ.சதீஷ்ஜீ மூலம் சேவாபாரதி கேம்ப்பில் சேர்க்கப்பட்டது. உணவிற்கு தவித்த மக்களுக்கு உதவிய தங்களனைவருக்கும் மிக்க நன்றிகளை உரித்தாக்குகிறேன். க.ஆத்ரேய சுந்தரராமன்
கும்பகோணம் அருகில் சிவனாரகரம் கிராமத்தில் அருள்மிகு ஜலமுகளாம்பிகை உடனுறை ஸ்ரீவாருணீச்வரஸ்வாமிக்கு ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள் அருளாசியுடன் கார்த்திகை சோமவார 108 சங்காபிஷேகம் இந்துசமயமன்றம் சார்பில் 02.12.24 அன்று வேதோக்தமாக, வெகுவிமரிசையாக நடைபெற்றது. விழாவிற்கு கும்பகோணம் ப்ரம்மஸ்ரீ.தினகர சர்மா அவர்கள் வருகைபுரிந்தது நாங்கள் செய்த பெரும்பாக்கியமாகக்கருதுகிறோம். சாக்ஷாத் அம்பாளே, பரதேவதையான ஸ்ரீகாமாக்ஷியே அந்த மஹனீயரை வரவழைத்தாக கருதி அவர் திருப்பாதங்களை நமஸ்கரிக்கிறோம். வழக்கம்போல அவருடைய சிஷ்யர் ஸ்ரீ.ப்ரபு சர்மா குழுவினர் பூஜைகள், ஹோமங்களை நடத்திவைத்தும், நந்திவரம் சிவஸ்ரீ.நடராஜ சிவாச்சார்யார் அவர்கள் அபிஷேக பூஜைகளை நடத்திவைத்தும் விழாவை நடத்தித்தந்தனர். ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமயச்சேவை அமைப்பான இந்துசமயமன்றம் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்விழாவில் சமயமன்ற அன்பர்கள், கிராமத்து பொதுமக்கள் கலந்துகொண்டனர். இதற்கான டெல்லி ப்ரம்மஸ்ரீ.வெங்கட்ராமய்யர் அவர்களின் பணி மகத்தானது.
நேற்று 24.11.24 ஞாயிறன்று திருவண்ணாமலையில் நமது தேசிய இந்து திருக்கோவில் கூட்டமைப்பு சார்பில் மிகபிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பெற்ற தீபத்திருவிழா திருக்குடைகள் சமர்ப்பிக்கும் பவனி நிகழ்ச்சியில் இந்துசமயமன்ற மாநில அமைப்பாளரும், தேசிய இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் தேசீய செயற்குழு உறுப்பினருமான புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன் கலந்துகொண்டார்.
இன்று (08.11.24) வெள்ளிக்கிழமை கலியுக கண்கண்ட தெய்வம் ஸ்ரீஐயப்பன் அவதரித்த பந்தள அரண்மனை மன்னர் ராஜா ஸ்ரீராஜவர்மா அவர்களை சந்தித்து உரையாட வாய்ப்பை நமக்கு ஸ்ரீவிஷ்ணுசித்தர் ரங்கஸ்வாமி ஐயா நல்கினார். நமது இந்துசமயமன்ற நிகழ்ச்சிகளையும் நமது ஸ்ரீமந்நாராயணீய பாராயண யக்ஞ மேளா பற்றியும் ஆர்வத்துடன் கேட்டறிந்த பந்தள மன்னர் அவர்கள் அவசியம் குருவாயூரில் வரும் 2025 மார்ச் மாதத்தில் நாம் நடத்தவுள்ள ஸ்ரீமந்நாராயணீய பாராயண யக்ஞத்தில் கலந்துகொள்வதாக கூறியுள்ளார். புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன், இந்துசமயமன்றம்.