ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமயச்சேவை அமைப்பான இந்துசமயமன்றம், தர்மரக்ஷணசமிதி மற்றும் திருவான்மியூர் குப்பம் பகுதி பொதுமக்கள், ஊர் பஞ்சாயத்தார்களின் ஒத்துழைப்புடன் 20.10.21 புதன்கிழமையன்று மாலை கடற்கரையில் ஸமுத்ரராஜருக்கு பௌர்ணமிதோறும் மஹா ஹாரத்தி காண்பிக்கும் நிகழ்ச்சி ஸ்ரீகாஞ்சி ஜகத்குரு சங்கராச்சார்ய ஸ்வாமிகளின் அருளாசியுடன் சிறப்பாக துவங்கியது. இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீசங்கரா பள்ளிகளின் தாளாளர் ஸ்ரீ.ஆ.ம.ராமகிருஷ்ணன் அவர்கள்,வேதபாரதி ஸ்ரீ.வெங்கட்ராமன்ஜீ,தர்மரக்ஷண சமிதி ஸ்ரீ.பாலசுப்பிரமணியன்ஜீ,ஸத்வித்யா ஸ்தானம் ஸ்ரீ.முனீச்வர ஸாஸ்த்ரிகள், விஸ்வ ஹிந்து பரிஷத்.ஸ்ரீ.ஸ்ரீராம்ஜீ,ஸ்ரீகாஞ்சி கைங்கர்ய சபா ஸ்ரீ.வெங்கட்ராமன்ஜீ மற்றும் அவர் நண்பர்கள்,வியார்பாடி இந்துசமயமன்றம் ஸ்ரீஹரிஹரன்ஜீ,இந்துசமயமன்றம் புலவர் ஆத்ரேய சுந்தரராமன்,ஸ்ரீபாலா கோவில் ஸ்ரீ.ராதாகிருஷ்ணன்,இந்துசமயமன்றம் ஸ்ரீமதி.கௌரி வெங்கட்ராமன் மற்றும் சமயமன்ற அன்பர்கள் பலரும் கலந்துகொண்டனர். ஸ்ரீ.ஆ.ம.ராமகிருஷ்ணன் அவர்கள் இயற்றிய அழகான ஹாரத்தி பாடலை பாடி ஸ்ரீவேம்படியம்மன் திருக்கோவில் வளாகம் எதிரில் ஸமுத்ரராஜருக்கு ஹாரத்தி காண்பிக்கப்பட்டது.வியாசர்பாடி ஸ்ரீ.ஹரிஹரன்ஜீ அவர்கள் செய்துள்ள ஆதிசங்கரர் விக்ரஹமும் இங்கே இன்று எழுந்தருளியது மிகவும் விசேஷம். இந்த ஹாரத்தி பிரதி பௌர்ணமிதோறும் திருவான்மியூர் குப்பம் கடற்கரையில் நடைமடற உள்ளது.
Author: admin
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமயச்சேவை அமைப்பான இந்துசமயமன்றம் மற்றும் தர்மரக்ஷண சமிதி இணைந்து
ப்ரம்மஸ்ரீ.கணேச பாகவதர் தலைமையில் திருமலை பாதயாத்திரை
இன்று 16.10.21 புரட்டாசி சனிக்கிழமை, ஏகாதசி நன்னாளில் நன்மங்கலம் ப்ரம்மஸ்ரீ.கணேச பாகவதர் தலைமையில் திருமலை பாதயாத்திரை செல்லும் குழுவினரை வாழ்த்தி வழியனுப்பும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இந்துசமயமன்ற மாநில அமைப்பாளர் புலவர் க.ஆத்ரேய சுந்தரராமன் கலந்து கொண்டார்.திருவள்ளூர் மாவட்டம் காரணோடையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் ஆந்திரப்ரதேசம் அப்ளாயகுண்டா ஸ்ரீ.ப்ரதாப் ஸ்வாமிகள் மற்றும் கல்பாக்கம் பெரியவாபுரம் ஸ்ரீபாலா கோவில் & பாலா ரதம் நிர்வாகி ஸ்ரீ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஸ்ரீநரேந்திர தாமோதரதாஸ் மோதிஜி பிறந்தநாள்
28.08.21 சனிக்கிழமை காஞ்சீபுரம் அருகில் ஓரிருக்கையில் ஸ்ரீகாஞ்சி மஹாஸ்வாமிகள் மணிமண்டபத்தில் சாதுர்மாஸ்ய வ்ருதம்
🙏🏻பிக்ஷாவந்தனம்🙏🏻
28.08.21 சனிக்கிழமை காஞ்சீபுரம் அருகில் ஓரிருக்கையில் ஸ்ரீகாஞ்சி மஹாஸ்வாமிகள் மணிமண்டபத்தில் சாதுர்மாஸ்ய வ்ருதம் மேற்கொண்டிருக்கும் மூலாம்னாய ஸர்வக்ஞபீடம் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் 70வது பீடாதிபதிகள் ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகளுக்கு ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய,கலாச்சார, பண்பாட்டு,சேவை அமைப்பான இந்துசமயமன்றம் மற்றும் சவுதி வாழ் ஸ்ரீகாஞ்சி மடத்தின் பக்தர்கள் அமைப்பான ஸ்ரீகாஞ்சி கைங்கர்ய சபா இணைந்து பிக்ஷாவந்தனம் சிறப்பான முறையில் செய்யப்பட்டது. ஸ்ரீஆசார்யஸ்வாமிகள் அனைவருக்கும் ஆசிவழங்கியருளினார்கள்.
பக்தர்கள் ஸ்ரீசங்கர பாதுகா பூஜை செய்து தங்கள் குருமூர்த்திக்கு பக்தியுடன் வந்தனம் செய்தனர்.
காலை சிற்றுண்டி, மதியம் அறுசுவை உணவு பக்தர்களுக்கு மணிமண்டபம் போஜனசாலையில் ஸ்ரீமடம் மற்றும் மணிமண்டபம் சார்பில் வழங்கப்பட்டது.
சங்கராச்சார்ய ஸ்வாமிகளுக்கு சாதுர்மாஸ்ய விசேஷ விரத காலத்தில் பிக்ஷாவந்தனம்
இந்துசமயமன்றம் மற்றும் ஸ்ரீகாஞ்சிகைங்கர்யசபா சார்பில் ஸ்ரீகாஞ்சி சங்கராச்சார்ய ஸ்வாமிகளுக்கு சாதுர்மாஸ்ய விசேஷ விரத காலத்தில் பிக்ஷாவந்தனம் செய்ய உத்தேசித்து வருகிற 28.08.2021 சனிக்கிழமை காலை காஞ்சீபுரம் ஓரிருக்கை ஸ்ரீமஹாஸ்வாமிகள் மணிமண்டபத்தில் சிறப்பாக நடைபெற உள்ளது. சமயமன்ற அன்பர்கள் வாய்ப்பு இருப்பவர்கள், அருகாமை பகுதிகளில் இருப்பவர்கள் கலந்துகொள்ளலாம். கொரானோ தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே தவறாமல் முககவசம் மற்றும் சானிடைசருடன் வந்து கலந்துகொள்ள வேண்டுகிறோம். இயலாதவர்கள் அவரவர்கள் இல்லங்களிலேயே உலகநன்மையைக்கருதி ‘ஹரஹர சங்கர! ஜயஜய சங்கர!’ என்று பாராயணம் செய்து ஸ்ரீசரணாளை ப்ரார்த்திக்க வேண்டுகிறோம். கலந்துகொள்ள வாய்ப்புள்ளவர்கள் ஸ்ரீஆசார்யாளுக்கு மற்றும் ஸ்ரீசந்திரமௌளீச்வர பூஜைக்கு மற்றும் அன்னதானத்திற்கு தங்களாலியன்ற புஷ்பம், காய்கனி, மளிகைப் பொருட்கள் மற்றும் பாதகாணிக்கை கொணர்ந்து சமர்ப்பிக்கலாம்.
இவண்,
அமைப்பாளர்கள்.
இந்துசமயமன்றம் &
ஸ்ரீகாஞ்சி கைங்கர்யசபா



































