ஸ்ரீகுருப்யோ நம!

ஸ்ரீகாஞ்சி மாமுனிவர் அருளாசியோடு அவரால் தோற்றுவிக்கப்பட்ட இந்துசமயமன்றம் ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள் அருளாசியுடன் மறுமலர்ச்சியுடன் தற்போது பல ஆன்மீக சமுதாய நற் பணிகளை செய்து வருகிறது. நமது சமயமன்ற செயல்பாடுகளுக்கு ஊக்கமளிக்கும்விதமாக சுதேசி பத்திரிகை நிர்வாகக்குழு திருமதி.பத்மினி ரவிச்சந்திரன் அவர்கள் தலைமையில் கூடி நமக்கு “தர்ம ரத்னா” என்கிற விருதினை வழங்கிட அறிவித்துள்ளார்கள். வருகிற 19.10.19 சனிக்கிழமை மாலை சென்னையில் பல மனிதநேய ஆர்வலர்கள் மற்றும் சென்னை முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்ளும் விழாவில் சமயமன்ற மாநில அமைப்பாளர்கள் அடியேன் புலவர் க ஆத்ரேய சுந்தரராமன் மற்றும் திருமதி கௌரி வெங்கட்ராமன் ஆகியோர் இந்த விருதினை இந்துசமயமன்ற அன்பர்கள் சார்பில் பெற்றுக்கொள்கிறோம்.இந்த விருது பற்றி ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள் திருமுன்னிலையில் கூறியபோது மிக மகிழ்ச்சியுடன் வாழ்த்தி அருளாசி வழங்கினார்கள். சமயமன்றப்பணிகளுக்கு கிடைத்த மகத்தான அங்கீகாரம் இது.

இந்துசமயமன்றம் சார்பில் வல்லீபுரத்தில் நடைபெற்ற 108 சுமங்கலி பூஜை மற்றும் கன்யா பூஜை.

(08.10.19) செவ்வாய்கிழமை விஜயதசமி நன்னாளை முன்னிட்டு திருக்கழுக்குன்றம் வட்டம் வல்லீபுரம் கிராமத்தில் ஸ்ரீத்ரிபுரசுந்தரி சமேத ஸ்ரீகண்டேஸ்வரர் திருக்கோவில் வளாகத்தில் இந்துசமயமன்றம் சார்பில் 108 சுமங்கலி பூஜை மற்றும் 18 கன்யா பூஜை நடைபெற்றது. ஸ்ரீகாஞ்சி கைங்கர்ய சபா அன்பர்கள் ஆதரவில் சுமங்கலிப்பெண்களுக்கு சௌபாக்கிய திரவியங்கள் வழங்கப்பட்டது. ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள் அனுக்ரஹித்த குங்குமப்ரசாதம் அனைவருக்கும் வழங்கப்பட்டது. புலவர் க. ஆத்ரேய சுந்தரராமன் அவர்களின் நவராத்திரி விளக்க சிறு சொற்பொழிவும் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் ரீச் பவுண்டேஷன் ஸ்ரீகண்ணன்ஜி மற்றும் தேசீய இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ஸ்ரீராம் ஆகியோர் கலந்துகொண்டனர். வல்லீபுரம் சிவஸ்ரீ.காந்திராஜ சிவாச்சாரியார் ஸ்ரீத்ரிபுரசுந்தரி அம்பாளுக்கு விசேஷ ஹோமங்கள், பூஜைகளை நடத்திவைத்தார்.இத்திருக்கோவிலில் பல வருடங்களுக்கு முன்னர் ஸ்ரீகாஞ்சி மஹாபெரியவர் வந்து தங்கி பூஜைகள் செய்தார் என்பது விசேஷம்.

“இந்துசமயமன்றத்தின் ‘வித்யஜோதி’ திருவிழா”

ஸ்ரீகுருப்யோ நம!
நமது இந்துசமயமன்றம் சார்பில் ஸ்ரீகாஞ்சி கைங்கர்யசபா ஆதரவுடன் சமயமன்ற அன்பர்கள் உதவியுடன் மிகப்பழங்குடியின மக்களாகிய இருளர் மக்களின் நல்வாழ்விற்காக பல உதவிகளை செய்து வருகிறோம். அவ்வகையில் தற்போதைய நவராத்திரி விழாவில் விஜயதசமியை முன்னிட்டு இருளர் குழந்தைகளின் கல்வியை ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன் ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள் அருளாசியுடன் ‘வித்யஜோதி’ என்னும் பெயரில் 06.10.19 ஞாயிற்றுக்கிழமை அன்று நோட்டுபுத்தகம், எழுதுகோல், வண்ணப்பென்சில்கள், வண்ண பேனாக்கள், ஸ்கேல், ரப்பர், ஷார்ப்னர், இரண்டு பிஸ்கட் பேக்கட்டுகள் முதலியவை ஒரத்தூர் பகுதி இருளர் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ஒரத்தூர் முதல்நிலை ஊராட்சி முன்னாள் தலைவர் திரு.கற்பகம்ND.சுந்தர் அவர்கள் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமயச்சேவை அமைப்பான இந்துசமயமன்றத்தின் இந்த சமுதாயப்பணிகளை வெகுவாக பாராட்டி தானும் இப்பணியில் பங்குகொள்வதை பெருமையாகக்கருதுவதாகக்கூறினார்.இந்துசமயமன்ற மாநில அமைப்பாளர் புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன், ஊராட்சி செயலர் திரு .பார்த்தசாரதி அவர்கள் மற்றும் இதற்கு உதவிய இந்துசமயமன்ற அன்பர்கள் தேசீய இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் மாவட்டத்தலைவர் கே.இராமச்சந்திரன், காட்டாங்குளத்தூர் ஒன்றியச்செயலாளர்சிவத்திரு.மணிவண்ணன், கூடுவாஞ்சேரி நகரத்தலைவர் திரு.சாயிராம், காஞ்சிடைம்ஸ் ஸ்ரீ.கருணாகரன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். திரளாக இருளர்மக்கள் கலந்துகொண்டனர்.

இந்துசமயமன்றம் சார்பில் இலவச கண் கண்ணாடி வழங்கும் விழா.

ஸ்ரீகுருப்யோ நம!
நமது இந்துசமயமன்றம் சார்பில் கடந்த 22.09.19 அன்று பம்மல் ஸ்ரீசங்கரா கண் மருத்துவமனையுடன் இணைந்து காஞ்சி மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாலுகா நீலமங்கலம் கிராமத்தில் நடைபெற்ற கண் சிகிச்சை முகாமில் பரிந்துரைக்கப்பட்ட நபர்களுக்கு கண் கண்ணாடி வழங்கும் விழா இன்று (02.10.19) புதனன்று நீலமங்கலம் கிராமத்தில் ஊராட்சி சேவை மையத்தில் நடைபெற்றது. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அதில் இந்துசமயமன்றம் சார்பில் புலவர் க. ஆத்ரேய சுந்தரராமன் , மன்ற அன்பர்கள் திரு.க.ராமச்சந்திரன், திரு. நா.சாயிராம் ஆகியோர் மற்றும் கண் மருத்துவமனை சார்பில் திரு.சங்கர் ஆகியோர் பங்கேற்றோம்.ஒரத்தூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் திரு.கற்பகம் ND சுந்தர் அவர்கள், பஞ்சாயத்து செயலர். திரு.பார்த்தசாரதி அவர்கள், நீலமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் திரு.நந்தகோபால் அவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோருடன் திரளான ஊர்மக்கள் கலந்துகொண்டனர். இவ்விழாவில் பயனாளிகளுக்கு முன்னாள் தலைவர் திரு.கற்பகம் ND சுந்தர் அவர்கள் இலவச கண் கண்ணாடிகளை வழங்கினார். பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது பற்றி அடியேன் உரை நிகழ்த்தினேன்.

ப்ரம்மஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி ஸாஸ்த்ரிகளுக்கு – அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஸ்ரீகுருப்யோ நம! இந்துசமயமன்றம் மற்றும் தேசீய இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் சார்பில் இன்று காலை ஸ்ரீஆசார்ய ஸ்வாமிகளின் பூர்வாச்ரம தகப்பனார் மறைந்த ப்ரம்மஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி ஸாஸ்த்ரிகளுக்கு அவரின் பூர்வீக கிராமமான தண்டலத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. புலவர் க ஆத்ரேய சுந்தரராமன், ஸ்ரீராம், ஸ்ரீ.கண்ணன்ஜி, சமயப்பரச்சாரகர் ஸ்ரீ.குமாரஸ்வாமிஜி, திண்டிவனம் ஸ்ரீ.நாகராஜன்ஜி, போளூர் ஸ்ரீசங்கர மடம் ஸ்ரீமஹாபலேஷ்வர்பட்ஜி ஆகியோர் இறுதியாத்திரையில் கலந்துகொண்டு ஜகத்குருவை நமக்களித்த அந்த உத்தமரின் ஆத்மா சாந்தியடைய ப்ரார்த்தித்தோம். ஓம் சாந்தி!

ப்ரம்மஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி ஸாஸ்த்ரிகள் ஸ்வர்கீயபதவியடைந்தார்

ஓம் சாந்தி!
ப்ரம்மஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி ஸாஸ்த்ரிகள் – ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் எழுபதாவது ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சாரிய மஹாஸ்வாமிகளின் பூர்வாச்ரம தகப்பனார். அன்னார் இன்று காலை ஸ்வர்கீயபதவியடைந்தார்.சிறந்த வேதவிற்பன்னர். ஆசார சீலர். நமக்கு ஜகத்குருவைத்தந்த உத்தம புருஷர். அவர்களின் ஆன்மா சாந்தியடைய ஸ்ரீமஹாத்ரிபுரசுந்தரி சமேத ஸ்ரீசந்த்ரமௌளீச்வர ஸ்வாமி திருவடிகளில் ப்ரார்த்திக்கிறோம். அன்னாரின் மறைவு என்கிற தாங்கமுடியாத துக்கத்தில் ஆழ்ந்திருக்கும் அவர்கள் குடும்பத்தினருடன் இந்துசமயமன்றத்தினர் அனைவரும் பங்கேற்கிறோம்.
புலவர் க ஆத்ரேய சுந்தரராமன்,
கௌரி வெங்கட்ராமன் மற்றும் சமயமன்ற அன்பர்கள்.

சென்னை மேற்கு மாம்பலம் ஸ்ரீராம் சமாஜம்

ஸ்ரீகுருப்யோ நம! இன்று 27.09.19 வெள்ளிக்கிழமை சென்னை மேற்கு மாம்பலம் ஸ்ரீராம் சமாஜத்தில் ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகளை தரிசித்து, கிழக்கு தாம்பரம் ஸ்ரீசங்கர வித்யாலயா பள்ளி வளாகத்தில் ஸ்ரீஆசார்யாள் நவராத்திரி விழாவில் சுவாசினிகளுக்கு தருவதற்காக ஸ்ரீகாஞ்சி கைங்கர்ய சபா அன்பர்கள் ஆதரவில் வாங்கப்பட்டுள்ள மங்கலப்பொருட்களை சமர்ப்பணம் செய்து ஆசி பெற்றோம். அதேபோல ஸ்ரீகாஞ்சி கைங்கர்ய சபா ஆதரவில் வல்லீபுரம் கிராமத்தில் இந்துசமயமன்றம் சார்பில் நடைபெற உள்ள 108 சுமங்கலி பூஜைக்கான மங்கல பொருட்களையும் சமர்ப்பணம் செய்து ஆசி பெற்றோம். அடியேனுடன் அருமைச்சகோதரிகள் திருமதி கௌரி வெங்கட்ராமன், திருமதி.ராதிகா மற்றும் திருமதி உஷா ஆகியோர் ஸ்ரீமடத்தின் முகாமிற்கு வந்து ஆசார்யாளை தரிசனம் செய்துஆசி பெற்றனர். ஸ்ரீசரணர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் சவுதியில் நடைபெற உள்ள ஸ்ரீகாஞ்சி கைங்கர்ய சபா நவராத்திரி விழாவிற்கு ஆசி கூறி சபா அன்பர்கள் அனைவருக்கும் ப்ரசாதம் தந்தருளினார்கள்.

ஒரத்தூர் பஞ்சாயத்து நீலமங்கலம் கண் பரிசோதனை

இன்று (22.09.19) ஞாயிற்றுக்கிழமை காலை 9. மணி முதல் 12 மணி வரை காஞ்சி மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டம் ஒரத்தூர் பஞ்சாயத்து நீலமங்கலம் கிராம சேவை மையத்தில் நமது இந்து சமய மன்றத்தின் சார்பில் ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள் அருளாசியுடன் நடைபெற்ற கண் சிகிச்சை முகாமில் பம்மல் ஸ்ரீசங்கரா கண் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்துகொணடு சிறப்பாக கிராம மக்களுக்கு கண் பரிசோதனை செய்தனர். ஒரத்தூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் திருமதி. கற்பகம் ND சுந்தர் அவர்கள் மற்றும் இந்துசமயமன்ற மாநில அமைப்பாளர் திருமதி.கௌரி வெங்கட்ராமன் அவர்கள் ஆகியோர் முகாமை துவக்கி வைத்து திருவிளக்கு ஏற்றிவைத்தார்கள். ஊராட்சி செயலாளர் திரு.பார்த்தசாரதி அவர்கள் முகாமில் கூட இருந்து உதவினார். தேசிய இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் ஸ்ரீராம், அக்ஷயா ஸ்ரீராம், ரீச் பவுண்டேஷன் ஸ்ரீ.கண்ணன், சமயமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீ.சாயிராம், ஸ்ரீதர், இந்து திருக்கோவில் கூட்டமைப்பு செங்கல்பட்டு மாவட்டத்தலைவர். ஸ்ரீ.ராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர். ஸ்ரீ.மணிவண்ணன், உழவாரப்பணி ஸ்ரீ.லோகநாதன் மற்றும் படப்பை, கரசங்கால் மன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு வருகைபுரிந்த மக்களுக்கு உதவிசெய்தனர்.

கண்புரை அறுவை சிகிச்சை

இந்துசமயமன்றத்தின் சார்பில் நடத்தப்பெறும் கண்புரை அறுவை சிகிச்சை தேர்வு முகாமிற்கு வருகைதந்து இலவச கண் சிகிச்சை பெற அழைக்கிறோம்.