ஸ்ரீபெரியவா சாதுர்மாஸ்ய பூர்த்தி

ஸ்ரீபெரியவா சாதுர்மாஸ்ய பூர்த்தி விஜயயாத்திரையில் கோலாட்டம் ஆடிய மகளிர் குழுவினருக்கு ஸ்ரீபெரியவா ஆசீர்வதித்தளித்த நினைவுப்பரிசு மறைமலைநகர் பிராமணர்சங்கம், வேதபாரதி, ஸ்ரீபாஞ்சஜன்யம் பாராயணக்குழு, ஸ்ரீசரணாகதி பாராயணக்குழு, அகிலபாரத அய்யப்ப சேவாசங்கம் நிர்வாகிகளுக்கு இந்துசமயமன்ற மாநில அமைப்பாளர் புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன் அவர்களால் வழங்கப்பட்டது.

நவராத்ரி விழா

மறைமலைநகர் பிராமணர்சங்கம், இந்துசமயமன்றம், வேதபாரதி இணைந்து நடத்திய நவராத்ரி விழா மிகபிரம்மாண்டமாக சிறப்பாக 06.10.24 ஞாயிறன்று நடைபெற்றது. 16 கன்யா பூஜை, 16 ஸுவாஸினி பூஜை, 12 வடுக பூஜை, 27 தம்பதி பூஜை என மிகச்சிறப்பாக நடைபெற்ற வைபவத்தில் சில காட்சிகள். அடியேனுக்கு இந்த வைபவத்தை நடத்தித்தர பெரும்பாக்கியம் கிடைத்தது ஸ்ரீபெரியவாளோட அனுக்ரஹம்.

நினைவுப்பரிசு வழங்கும் நமது ஸ்ரீஸ்ரீஸ்ரீஜகத்குருநாதர்

இந்துசமயமன்றத்தின் சார்பில் ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள் சாதுர்மாஸ்ய பூர்த்தி விஸ்வரூப யாத்திரையில் கலந்துகொண்ட குழுக்களை ஆசீர்வதித்து தமது அருட்கரங்களால் நினைவுப்பரிசு வழங்கும் நமது ஸ்ரீஸ்ரீஸ்ரீஜகத்குருநாதர்.
மேலும் இந்துசமயமன்ற பிடி அரிசித்திட்டம் விரிவாக்கம், நலிவுற்ற திருக்கோவில் மூல மூர்த்திகள் மற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு தீபாவளி வஸ்த்ரம், வேதபாடசாலைகளுக்கு புது வஸ்த்ரம் ஆகியவற்றை ஆசீர்வதித்தார்கள் நமது ஸ்ரீசரணர்கள்.
மறைமலைநகரில் நடைபெறவுள்ள நவராத்ரி பூஜைக்கு ஆசி வழங்கினார்கள். இந்துசமயமன்ற மாநில அமைப்பாளர் புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன், ஸ்ரீசங்கர சனாதன சேவா சம்ஸ்தானம் டிரஸ்டி ஆடிட்டர் ஸ்ரீகாந்த்ஜி ஆகியோர் இந்நிகழ்வில் ஸ்ரீஆசார்ய ஸ்வாமிகளிடம் ஆசி, ப்ரசாதம் இந்துசமயமன்றம் சார்பில் பெற்றுக்கொண்டார்கள்.

இந்துசமயமன்ற கோலாட்டத்தை பார்த்து விஸ்வரூப யாத்திரையில் ஸ்ரீபெரியவா அனுக்ரஹித்த காக்ஷி

சாதுர்மாஸ்ய பிக்ஷாவந்தனத்தில் இந்துசமயமன்ற அன்பர்கள்

11.09.24 புதனன்று காஞ்சி ஓரிக்கையில் சாதுர்மாஸ்ய பிக்ஷாவந்தனத்தில் இந்துசமயமன்ற அன்பர்கள், மறைமலைநகர் பிராமணர்சங்க அன்பர்களுக்கு அனுக்ரஹிக்கும் ஸ்ரீஜகத்குரு.