Author: admin
ஸ்ரீபுதுப்பெரியவா அதிஷ்டானம் மற்றும் திருவுருவம்
சிவபுராணம் மற்றும் அபிராமி அந்தாதி பாராயணம்
இன்று இந்துசமயமன்றம் மற்றும் ஸ்ரீநந்தி சித்தர் பீடம் சார்பில் சிவபுராணம் மற்றும் அபிராமி அந்தாதி பாராயணம் கூடுவாஞ்சேரி அருள்மிகு ஸ்ரீமாமர சுயம்பு சித்தி விநாயகர் ஆலயத்தில் உள்ள ஸ்ரீலலிதாம்பிகை சமேத ஸ்ரீமாமரத்து ஈஸ்வரர் சந்நிதியில் நடைபெற்றது. நமது குழுவினர் சார்பில் மேற்படி ஆலயத்தில் நடத்தப்பெற்ற முதல் நிகழ்ச்சி இது.
காஞ்சிபுரத்தில் ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளுக்கு நடந்த ஸ்ரத்தாஞ்சலி – நாள் 17.3.18
Balaperiyava’s birthday
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் 70வது பீடாதிபத்யத்தை அலங்கரிக்கும், “ஸ்ரீபாலப்பெரியவா” என்று பக்தர்களால் அன்புடன் பக்தியுடன் அழைக்கப்பெறும் ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சாரிய ஸ்வாமிகள் அவர்களுக்கு ஸ்வாமிகளின் அவதாரத்திருநாளில் இந்துசமயமன்றம் மற்றும் ஸ்ரீகாஞ்சி கைங்கர்ய சபா ஹ்ருதயபூர்வமான நமஸ்காரங்களை ஸ்வாமிகளின் பொன்னார் திருவடிகளில் சமர்ப்பிக்கிறது.
கூடுவாஞ்சேரி ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் ஸ்வாமிகளுக்கு ஸ்ரத்தாஞ்சலி
Bahrain Sradhangali
கிரோம்பேட்டை குமரன்குன்றத்தில் நமது சகோதர அமைப்பான திருக்கோவில் வழிபாட்டுக்குழு சார்பில் நடந்த ஸ்ரத்தாஞ்சலி நிகழ்ச்சி
சவுதியில் ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளுக்கு நடந்த ஸ்ரத்தாஞ்சலி நிகழ்ச்சி.
ஸ்ரத்தாஞ்சலி ப்ரார்த்தனைக்கூட்டம் நங்கநல்லூர்
இந்துசமயமன்றம் மற்றும் ஸ்ரீகாஞ்சி கைங்கர்ய சபா சார்பில் நேற்று (11.03.2018) ஞாயிறு அன்று நடந்த ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் 69வது பீடாதிபதி ஸ்ரீஸ்ரீஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் ஸ்வாமிகளுக்கு ஸ்ரத்தாஞ்சலி ப்ரார்த்தனைக்கூட்டம் நங்கநல்லூர் ஸ்ரீரமணி ஹாலில் நடைபெற்றது. ஸ்ரீயோகசந்தோஷபீடம் ஸ்ரீஜெயமாருதிதாசஸ்வாமிகள், ஸ்ரீ ஜே.கே.சிவன் ( கிரஷ்ணார்ப்பணம் சேவா சங்கம்) , ஸ்ரீசாணுபுத்திரன், அகில இந்திய ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாம கல்ச்சுரல் பெடரேஷன் ஸ்ரீகணேசன்ஜி, ஸ்ரீராம்ஜி, ஸ்ரீமதி விஜயலக்ஷ்மி, ஊரப்பாக்கம் மன்ற மகளிர் அமைப்பாளர் ஸ்ரீமதி. பார்வதி மோகன், ஸ்ரீமதி சுதாகண்ணன், ஸ்ரீமதி.சாந்தா பாலசுப்ரமண்யன் குழுவினர், ஸ்ரீயோக சந்தோஷபீடம் ஸ்ரீமதி.வாசுகி அமுதபூரணி, திருவாசகம் முற்றோதுதல் குழு ஸ்ரீமதி புஷ்பாதுரை, ஸ்ரீமணிவண்ணன், சிவாய நம ஸ்ரீலக்ஷ்மிநாராயணன், தேசிய இந்து திருக்கோவில் கூட்டமைப்பு ஸ்ரீஸ்ரீராம்ஜி, மாடம்பாக்கம் ஜனகல்யாண் மற்றும் இந்துசமயமன்றம் ராம்ராம் சுந்தரராமன் மற்றும் சாயிராம் குழுவினர், ஸ்ரீரமணி ஹால் அனுஷம் ஸ்ரீமகேஷ், ஸ்ரீகாஞ்சி கைங்கர்ய சபா ஸ்ரீசர்மாஜி , நங்கநல்லூர் சீதாராம சேவா சமாஜம் ஸ்ரீநாராயணசாமி மற்றும் ஸ்ரீஸ்வாமிநாதன் மற்றும் பல அன்பர்கள் மற்றும் ஸ்ரீமடத்தின் பக்தர்கள் கலந்துகொண்டனர். தேவார வழிபாடு, ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம், சத்சங்கம், நங்கநல்லூர் பால சத்சங்கம் குழுவினர் திவ்யநாம பஜனையுடன் ஸ்ரத்தாஞ்சலி சிறப்பாக நடைபெற்றது. இந்துசமயமன்றம் அமைப்பாளர் ஸ்ரீமதி.கௌரி வெங்கட்ராமன் அனைவரையும் வரவேற்க, நந்திவரம் புலவர் க.ஆத்ரேய சுந்தரராமன் விழா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். ஸ்ரீபெரியவா ப்ரசாதத்துடன் விழா பக்திபூர்வமாக நடந்தேறியது. ஜயஜய சங்கர! ஹரஹர சங்கர!