கோவிந்த பட்டாபிஷேகத்தில் 88 வகையான இனிப்புகள் ஸ்ரீக்ருஷ்ணனுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. அவ்வளவு கோபிகைகள் ஸ்ரீபெரும்புதூருக்கு வந்து சமர்ப்பித்தது பெரும்பாக்கியம். இந்த யக்ஞத்தில் 18 வகையான பழங்கள், நூற்றியோரு நைவேத்யம், சித்ரான்னங்கள் என துவாரகையின் மஹாராஜாவிற்கு சமர்ப்பிக்கப்பட்டது. உங்கள் அனைவரின் தூய பக்தியே இத்தனையையும் ஸாத்யமாக்கி இருக்கிறது.

ஸ்ரீமந்நாராயணீய பாராயண யக்ஞம் 2024, ஸ்ரீபெரும்புதூர்.


சுமார் 550க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர் இந்த யக்ஞத்தில்.
நமது சூளைமேடு இந்துசமயமன்ற அமைப்பாளர் ஸ்ரீமதி.ஜெயலலிதா ஸ்ரீனிவாசன் மற்றும் மறைமலைநகர் இந்துசமயமன்றம் ஸ்ரீமதி.சத்யபாமா கோபாலன் வழிநடத்தினர். இந்துசமயமன்ற அன்பர்.ஸ்ரீமதி.சாந்தா பாலசுப்ரமண்யன் அவர்கள் குழுவினர் ஸ்ரீருக்மிணீ கல்யாண வைபவத்தை நடந்தினார்கள்.

திருவிளக்கு பூஜை

திருவண்ணாமலை மாவட்டம் பர்வதமலை அடிவாரகிராமமான கடலாடியில் இந்துசமயமன்றம் கடலாடி கிளை சார்பாக ஆடி மூன்றாவது வெள்ளிக்கிழமை திருவிளக்கு பூஜை ஸ்ரீகாஞ்சி மஹாபெரியவர் விஜயம் செய்த ஸ்ரீலக்ஷ்மிநாராயணர் திருக்கோவில் வளாகத்தில் நடைபெற்றது. இந்துசமயமன்ற மாநில அமைப்பாளர் புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன் தலைமையேற்று பூஜையை நடத்திவைத்தார். அகிலபாரத இந்து மக்கள் அமைப்பின் நிறுவனத்தலைவர் ஸ்ரீ.வி.எம். சிவகுமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் நிர்வாகத்தினர், கிராம முக்யஸ்தர்கள் வந்திருந்தனர். கடலாடி இந்துசமயமன்ற கிளை அமைப்பாளர்.ஸ்ரீ.ஜெயவேலு சிறப்பாக ஏற்பாடுகளை செய்திருந்தார்.

அனுஷ ஆவஹந்தீ ஹோமம்

இன்றைய (20.06.24) வியாழனன்று அனுஷ ஆவஹந்தீ ஹோமம் ரேடியல் சாலை சோபா வின்செஸ்டரில் ஸ்ரீ.ஸுப்ரமண்யன் – சித்ரா ஸுப்ரமண்யன் அவர்கள் இல்லத்தில் வெகு விமரிசையாக நடந்தது. ப்ரம்மஸ்ரீ.செல்வகுமார் ஸாஸ்த்ரிகள் ஹோமத்தை வேதோக்தமாக நடத்திவைத்தார். ஸ்ரீவிஷ்ணு, ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாம பாராயணங்கள், ஸ்ரீமஹாபெரியவா பூஜை, அஷ்டோத்ரமுடன் தோடகாஷ்டகம் நமஸ்காரம் மற்றும் சிறப்பு அன்னப்ரசாதத்துடன் ஸ்ரீசரணர்கள் அருளாசியுடன் வெகுசிறப்பாக நடந்தேறியது.

ஸ்ரீகுருப்யோ நமஹ!

கடந்த 14.06.24 வெள்ளிக்கிழமை இந்துசமயமன்றத்தின் சார்பில் உருவாக்கப்பட்ட ஸ்ரீகாஞ்சி மஹாபெரியவரின் பஞ்சலோக திருமேனியை காஞ்சி ஸ்ரீமடத்தில் பூஜைக்காக கொண்டு சென்றோம். ஸ்ரீகாஞ்சி மஹாபெரியவரின் அணுக்கத்தொண்டர் ஸ்ரீ.குமரேச மாமாவே அங்கே இருந்தார். விக்ரஹஸ்வரூபியாய் அதியற்புதமாக தத்ரூபமாக ஸ்ரீமஹாபெரியவா வந்திருப்பதாக சிலாகித்து அதிஷ்டானத்தில் இருத்தி பூஜித்து அளித்தார். அடுத்து ஸ்ரீகாமாக்ஷி கோவில் மற்றும் ஸ்ரீஆதிசங்கரர் சந்நிதியில் தர்சனம் ஆயிற்று. திரும்பவும் ஸ்ரீமஹாபெரியவர் இரண்டு பக்தர்கள் இல்லங்களில் பூர்ணகும்ப மரியாதையுடன் பூஜிக்கப்பட்டார். திரும்ப ஸ்ரீமடத்திற்கு எழுந்தருளிய ஸ்ரீமஹாபெரியவரை மாலை ஸ்ரீஸ்ரீஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள் பார்த்து மிகுந்த சந்தோஷத்துடன் புஷ்பஹாரம் சாற்றினார். ஸ்ரீமஹாபெரியவாளுக்கு ஒரு பல்லக்கு தயார் பண்ணி எழுந்தருளச்செய்ய ஸ்ரீசரணர்கள் ஆக்ஞையிட்டார்கள். இந்துசமயமன்றத்தின் ஸ்ரீமந்நாராயணீய பாராயண யக்ஞ மேளா வருகிற ஆகஸ்டு பதினொன்றாம் தேதி ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீகுருவாயூரப்பன் கோவிலில் கோலாகலமாக நடக்கவிருப்பதை சொல்லி ஆசார்யஸ்வாமிகளின் அருளாசி வேண்டினோம். மற்ற மாதாந்திர சமயமன்ற பணிகளை கேட்டறிந்தார்கள். அமெரிக்காவில் இந்துசமயமன்றம் ஆசார்யஸ்வாமிகளின் அருளாணையின்வண்ணம் துவக்கப்பட்டு முதல் திருவிளக்கு பூஜை நடைபெறவுள்ளதை தெரிவித்து ஆசிபெற்றோம். ஜகத்குருவின் பரிபூரண அருளாசிகளுடன் விக்ரஹ ஸ்வரூப ஸ்ரீமஹாபெரியவருடன் இல்லம் திரும்பினோம்.
புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன்.
ஆடிட்டர் ஸ்ரீகாந்த்ஜி மற்றும் ஸாயிராம்.
இந்துசமயமன்றம்

முக்கிய அறிவிப்பு!

ஸ்ரீகுருப்யோ நமஹ!
குருவாயூரப்பா சரணம்!

நமது இந்துசமயமன்றத்தின் ஸ்ரீமந்நாராயணீய பாராயண யக்ஞ சமிதி சார்பில் ஸ்ரீமந்நாராயணீய பாராயணம் மற்றும் ஸ்ரீருக்மிணீ கல்யாண வைபவம் வருகிற ஆகஸ்டு 11ந்தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் க்ஷேத்ரோபாசனாவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீகுருவாயூரப்பன் திருக்கோவில் வளாகத்தில் ஸ்ரீஆசார்யாள் அனுக்ரஹத்துடனும், ஸ்ரீகுருவாதபுரீசனின் பரிபூரண க்ருபையுடனும், தங்கள் அனைவரின் ஆதரவுடனும் மிக கோலாகலமாக நடத்த தீர்மானிக்கப்பட்டு பூர்வாங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

நடைபாதை மக்கள் வசிக்கும் பகுதியில் அன்னதானம்

அனுஷ அமிர்தம் சார்பில் அனைவரின் ஒத்துழைப்புடன் இந்த மாத அனுஷ நக்ஷத்திர நன்னாளான இன்று 24.05.24
வெள்ளிக்கிழமை நடைபாதை மக்கள் வசிக்கும் பகுதியில் அன்னதானம் (புளி சாதம் , வடை, மற்றும் தண்ணீர் பாட்டில்) வழங்கப்பட்டது.
வேதபாடசாலையில் அரிசி மூடையும் கோசாலையில் பசுக்களுக்கு மாட்டுத்தீவனமும் வழங்கப்பட்டது.

ஸ்ரீகாஞ்சி மஹாபெரியவர் 131வது ஜயந்தி ஹோமம்

இந்துசமயமன்றம் மற்றும் ஸ்ரீகாஞ்சி கைங்கர்ய சபா இணைந்து ஆதம்பாக்கம் ஸ்ரீமதி. ப்ருந்தா மாமி இல்லத்தில் இன்று (24.05.24) வெள்ளிக்கிழமையன்று நடத்திய (மஹா அனுஷம்) ஸ்ரீகாஞ்சி மஹாபெரியவர் 131வது ஜயந்தி ஹோமம், பூஜைகளின் சில காட்சிகள்.

இந்துசமயமன்றம் மற்றும் ஸ்ரீகாஞ்சி கைங்கர்ய சபா சார்பில் இன்று (24.05.24) வெள்ளிக்கிழமை ஆவஹந்தீ ஹோமம் ஆதம்பாக்கத்தில் ஸ்ரீமதி.ப்ருந்தா அவர்கள் இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது. ப்ரும்மஸ்ரீ.செல்வகுமார் ஸாஸ்த்ரிகள், ப்ரம்மஸ்ரீ.கைலாச கனபாடிகள் வந்திருந்து நடத்திவைத்தனர்.