ஸ்ரீமந்நாராயணீய பாராயணம் (02.08.23, புதன்கிழமை)


ஸ்ரீபாங்கேபிகாரி கிருஷ்ணன் திருக்கோவில்,
வஞ்சுவாஞ்சேரி, படப்பை.

ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் 69வது ஆசார்ய ஸ்வாமிகளான ஸ்ரீஸ்ரீஸ்ரீஜயேந்த்ர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் ஜயந்தி தினத்தையொட்டி உலகநலன் வேண்டி, மேற்படி ஸ்ரீகிருஷ்ணன் கோவிலில் இந்துசமயமன்றம் சார்பில் ஸ்ரீமந்நாராயணீய பாராயணம் சிறப்பாக நடைபெற்றது. திருக்கோவில் டிரஸ்டு சார்பில் உணவு மற்றும் அருமையான ஒத்துழைப்பை நல்கினர். 75அன்பர்கள் பங்கு கொண்டனர். வடக்கத்திய பாணியிலான இத்திருக்கோவிலில் ஸ்ரீகிருஷ்ணர், ஸ்ரீவெங்கடாசலபதி, ஸ்ரீராதா கிருஷ்ணர் சந்நிதிகளும், ஸ்ரீகாஞ்சி மஹாபெரியவர் திருப்பாதுகைகளும் உள்ளது. ஒருமுறை சென்று தரிசியுங்கள். ஒயிலாக கிருஷ்ணனின் திருக்கோலம் தரிசித்தால் வெளியே வரவே மனம் வராது.

திருவிளக்கு பூஜை

தாம்பரம் இரும்புலியூர் அருள்மிகு வேம்புலியம்மன் திருக்கோவிலில் ஆடிமாத பௌர்ணமியை முன்னிட்டு 01.08.23 செவ்வாய் கிழமையன்று திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது. கோவில் நிர்வாகிகளுடன் அர்ச்சகர் ஸ்ரீ.சுதேசி.முரளி அருமையாக ஏற்பாடு செய்திருந்தார். இந்துசமயமன்ற மாநில அமைப்பாளர் புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன் பூஜையை நடத்திவைத்தார். தேசீய இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் தேசீய செயலாளர் ஸ்ரீராம் மற்றும் விஎச்பி ஸ்ரீ.கணேஷ்ஜி ஆகியோர் கலந்துகொண்டு சொற்பொழிவாற்றினர்.

ஸ்ரீமந்நாராயணீய பாராயணம்

நாள்: 02.08.2023, புதன்கிழமை காலை.7.30 மணி.
இடம்: ஸ்ரீபாங்கே பிஹாரி லீலா ஸ்ரீகிருஷ்ணர் திருக்கோவில், வஞ்சுவாஞ்சேரி.
படப்பை – வாலாஜாபாத் வழித்தடத்தில் 3 கிமீ.

ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய,கலாச்சார, பண்பாட்டு,சேவை அமைப்பான இந்துசமய மன்றத்தின் சார்பில் காஞ்சி ஸ்ரீமடத்தில் அதிஷ்டானவாஸியாய் அருள்பாலிக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீஜயேந்த்ர ஸரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் ஜயந்தி தினத்தையொட்டி உலகநலனை வேண்டி காஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள் அருளாசியுடன் ஸ்ரீமந்நாராயணீய பாராயணம் மேற்படி ஸ்ரீகிருஷ்ணன் கோவிலில் நடைபெறுகிறது.
காலை சிற்றுண்டி, மதியம் ஸ்ரீக்ருஷ்ணப்ரசாதம் திருக்கோவில் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கலந்துகொள்ள விருப்பமுள்ள அன்பர்கள் வருகிற 31.07.23க்குள் கீழ்க்கண்ட எண்ணில் வாட்ஸ்ஆப்பில் பெயர், ஊர் தெரிவிக்க வேண்டும்.
வாகன வசதி அவரவர் சொந்த ஏற்பாட்டில் செய்துகொள்ள வேண்டும்.
படப்பை பேருர்து நிலைய ஆட்டோ ஸ்டாண்டில் இருந்து கோவில் செல்ல கட்டணம் ரூ.100 ஆகும். நான்கு நபர்கள் ஷேர் செய்யலாம். படப்பை தாம்பரம் வழித்தடத்தில் நிறைய பேருந்துகள் உள்ளது.
அன்பர்கள் திருக்கோவிலுக்கு, பூஜைக்கு தேவையான பூஜா பொருட்களை (புஷ்பம், பழங்கள், நெய், எண்ணெய், பூஜா திரவியங்கள், நைவேத்யங்கள்) கொண்டுவந்து தருவது புண்ணியம்.
மேலும் விவரங்களுக்கு கீழ்க்கண்ட மொபைல் எண்களை தொடர்பு கொள்ளவும்.
9789007401ஸ்ரீ.ஆத்ரேய சுந்தரராமன், 9940101074 ஸ்ரீமதி.ஜெயலலிதா,
6383474595 ஸ்ரீமதி.மஹாலக்ஷ்மி

ஸ்ரீவிடோபா ஸ்வாமிகள் சமாதி திருக்கோவிலில் அம்பாளுக்கு சிறப்பு யாக வேள்வி

திருவண்ணாமலை மாவட்டம் கடலாடி (பருவதமலை அடிவார கிராமம்) ஸ்ரீவிடோபா ஸ்வாமிகள் சமாதி திருக்கோவிலில் அம்பாளுக்கு சிறப்பு யாக வேள்வி, அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. அவ்வமயம் பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. இந்துசமயமன்ற கிளை அமைப்பாளர் திரு. ஜெயவேலு அவர்கள் முயற்சியில் பாலபிஷேகத்திற்கு சமயமன்றம் சார்பிலும் மாடம்பாக்கம் ஜனகல்யாண் சார்பிலும் பால் வழங்கப்பட்டது.

ஸ்ரீகாஞ்சி மஹாபெரியவர் 130வது ஜெயந்தி

ஸ்ரீகாஞ்சி மஹாபெரியவர் 130வது ஜெயந்தி பூஜையில் இந்துசமயமன்றம் ஸ்ரீமஹாபெரியவர் உற்சவ விக்ரஹ ஸ்வரூபமாக எழுந்தருளிய காட்சி. ஊரப்பாக்கம் ஸ்ரீசங்கர வித்யாலயா பள்ளி.

அனுஷத்தின்அருட் கொடை

🙏🏻
அனுஷத்தின்
அருட் கொடை.!
(காஞ்சிமகான்)
ஜெயந்தி.!
03.06.2023.
💐🙏🏻💐

உலகு புகழ்
” விழுப்புரம் “
உயர்ந்த அன்பு
நகரமே.!
கருணைக்கடல்
காஞ்சி மகான்
ஆன்மிகத்தின
சிகரமே..!
💐
விழுப்புரம்எனும்
நகரமே
வீறுபுகழ்
மிக்கது.!
காஞ்சி மகான்
பிறந்த தால
உலகம்
போற்றத்
தக்கது..!
💐
ஆயிரத்தி
எண்ணூத்தி
தொண்ணூத்தி
நான்காம்
ஆண்டிலே…!
ஆன்மிகச்சுடர்
காஞ்சி மகான்
அவதரித்த
நாளுங்க..!
அவருடைய
தரிசனம்
பெற்றோர்
ஆயுட் காலம்
நீளுங்க..!
💐
தமிழ் தெலுங்கு
மலையாளம்
ஆங்கிலம் இந்தி
மராட்டி
சமஸ்கிருதம்
எனப்பல
பதினான்கு
மொழிகள்
தெரியுமே.!
இந்தியாமுழுக்க
நடந்தவர்க்கு
மக்கள் மனம்
புரியுமே..!
💐
காஞ்சி மகாப்
பெரியவா..!
காமாட்சியின்
அம்சமே.!
காஞ்சி மகான்
காலடியை
வணங்கத்
தழைக்கும்
வம்சமே.!
💐
நடமாடும்
தெய்வமாக
நாட்டு மக்கள்
எண்ணுவர்..!
இவ்வாறாக
எண்ணி
அவர்க்குப்
பாத பூஜை
பண்ணுவர்..!
💐
எண்பத்தேழு
ஆண்டுகள்
காம கோடி
பீடத்தின்…!
பீடாதிபதியாய்
இருந்தவர்.!
அகில உலகும்
போற்றி
வணங்கும்
ஆற்றல் மிகு
அருந்தவர்..!
💐
“அருட் கவிஞர் “
கண்ணதாசன்
அர்த்த முள்ள
இந்து மதம்..!
எழுது தற்குக்
காரணமே
காஞ்சிமகான்
தானுங்க..!
காஞ்சி மகான்
உபதேசங்கள்
கொல்லிமலைத்
தேனுங்க..!
💐
ஆயிரத்துத்
தொளாயிரத்து
எழுபத்தி
ரெண்டிலே..!
” இந்து சமய
மன்றம் “என்ற
ஓர்
அமைப்பைத்
தொடங்கினார்.!
💐
திருவிளக்குப்
பூஜை முதல்
தேவாரம் திரு
வாசகம்…!
“தமிழ் வழி
வழி பாடு”
என
மக்கள் கற்று
அடங்கினார்..!
💐
பூமாலை சூட்டி
வணங்கினாலே
பொழுதுக்குள்
வாடும் என..!
பாமாலை சூட்டி
மகிழ்கிறேன்..!
மனம் உருகி
நெகிழ்கிறேன்.!
நூறாண்டுகள்
வாழ்ந்த மகான்
வருக ! வருக !
வருகவே..!
நாடும் வீடும்
நலம்பெற்றுய்ய
நல்லாசி
தருகவே..!
💐🙏🏻💐
அடியேன்
விசூர்மாணிக்கம்
03.06.2023.
கவிதை:1739.
🦚
ஸ்ரீ
காஞ்சிமகான்
மலரடிகள்
போற்றி!போற்றி!
💐🙏🏻💐