இந்துசமயமன்றம் சார்பில் அனந்தகோடி நமஸ்காரங்களை பக்தியுடன் சமர்ப்பிக்கிறோம்!

ஸ்ரீகாஞ்சி மஹாபெரியவர் திருவடித்தாமரைகளில் மஹா அனுஷ நன்னாளில் (03.06.23,சனிக்கிழமை) ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய,கலாச்சார, பண்பாட்டு,சேவை அமைப்பான, இந்துசமயமன்றம் சார்பில் அனந்தகோடி நமஸ்காரங்களை பக்தியுடன் சமர்ப்பிக்கிறோம்!

என்றும் குரு சேவையில்,
புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன்
முனைவர்.கலைஇராம வெங்கடேசன்
கௌரி வெங்கட்ராமன்
மற்றும் கிளை அமைப்பாளர்களும், சமயமன்ற அன்பர்களும்

ஸ்ரீமடம் முகாமில் நடந்த விழாவில் ஆசி வழங்கி சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கி அனுக்ரஹித்தருளினார்கள்

ஸ்ரீகுருப்யோ நம!
எனது இளைய மகன் சிரஞ்சீவி.K.R.ஷ்யாம் பிளஸ்2 அரசுத்தேர்வில் அதிகமதிப்பெண்கள் 591/600 பெற்றும் நான்கு முக்கிய பாடங்களிலும் 100/100 பெற்றும் தேர்ச்சியடைந்ததற்காக ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீஸ்ரீஸ்ரீஆசார்ய ஸ்வாமிகள் திருப்பதி ஸ்ரீமடம் முகாமில் நடந்த விழாவில் ஆசி வழங்கி சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கி அனுக்ரஹித்தருளினார்கள். ஸ்ரீசரணர்களின் பொன்னார் திருவடிக்கமலங்களில் அனந்தகோடி நமஸ்காரங்களை சமர்ப்பிக்கிறேன்.எனது மகனுக்கு நல்ல கல்வியைத்தந்த ஸ்ரீசங்கரா கல்விக்குழும நிர்வாகிகள்,தாளாளர், ஊரப்பாக்கம் ஸ்ரீசங்கர வித்யாலயா பள்ளி முதல்வர், ஆசிரியப்பெருமக்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்.
புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன்,
இந்துசமயமன்றம்.

ஸ்ரீசங்கர பகவத்பாதாசார்யரின் அவதார நன்னாள்

ஸ்ரீகுருப்யோ நம! ஜகத்குரு ஸ்ரீசங்கர பகவத்பாதாசார்யரின் அவதார நன்னாளில் ஸ்ரீசரணர்களின் பொற்பாத கமலங்களில் மூலாம்னாய ஸர்வக்ஞபீடமாகிய ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய,கலாச்சார, பண்பாட்டு,சேவை அமைப்பான இந்துசமயமன்றம் ஹ்ருதயபூர்வமான பக்தியுடன் அனந்தகோடி நமஸ்காரங்களை சமர்ப்பிக்கிறது. ஸ்ரீஆசார்யாளின் வேத தர்ம வழி நடப்போம்! சனாதன ஹிந்து தர்மம் காப்போம்!

இனிய தமிழ் புத்தாண்டு (சோபகிருது) நல்வாழ்த்துக்கள்!

இனிய தமிழ் புத்தாண்டு (சோபகிருது) நல்வாழ்த்துக்கள்! இந்துசமயமன்றம் (ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய, கலாச்சார, பண்பாட்டு,சேவை அமைப்பு)

ஸ்ரீமஹாபெரியவர் திருவுருவப்படத்தினில் எழுந்தருளி நகர்வலம்

09.04.23 ஞாயிற்றுக்கிழமை செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் ஸ்ரீதர்மசாஸ்தா ஜெயந்தியையொட்டி நடைபெற்ற பஞ்சபூத மஹாயக்ஞம் மற்றும் ஆன்மீகப்பேரணியில் இந்துசமயமன்றமும் பங்கேற்றது. அலங்கரிக்கப்பட்ட வேனில் ஸ்ரீமஹாபெரியவர் திருவுருவப்படத்தினில் எழுந்தருளி நகர்வலம் வந்தார். அகிலபாரத அய்யப்ப சேவா சங்கம் மிகச்சிறப்பாக இந்த நிகழ்ச்சியை பிரம்மாண்டமான முறையில் நடத்தினார்கள்.இஸ்கான, அனுஷ அமிர்தம், பிரம்மா குமாரிகள் சங்கம் ஆகியோர் ஊர்வலமாக வர திருக்கயிலாய வாத்தியம் மற்றும் செண்டை வாத்தியம், மங்கள வாத்தியம் முழங்க, ஸ்ரீமுனீஸ்வரஸ்வாமி, ஸ்ரீதர்மஸாஸ்தா, ஸ்ரீமஹாபெரியவர், ஸ்ரீசிவலிங்கேஸ்வரர் தனித்தனி ரதத்தில் நகர்வலம் வந்து அருள்பாலித்தனர்.

யுகாதி நல்வாழ்த்துக்கள்!

அனைத்து அன்பர்களுக்கும் இனிய யுகாதி நல்வாழ்த்துக்கள்!

புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன் முனைவர்.கலை இராம.வெங்கடேசன் ஸ்ரீமதி.கௌரி வெங்கட்ராமன் மாநில அமைப்பாளர்கள், இந்துசமயமன்றம் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய,கலாச்சார, பண்பாட்டு,சேவை அமைப்பு

அனுஷ அமிர்தம்

அனுஷ அமிர்தம் சார்பில் மாதந்தோறும் ஸ்ரீகாஞ்சிப்பெரியவர் அவதரித்த அனுஷத்திருநாளில் பழங்குடியினர், சாலையோர மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தமாதம் (13.03.23) மாசி திங்கட்கிழமை அனுஷ நக்ஷத்திரத்தை முன்னிட்டு அன்னதானம் (ஜாங்கிரி, வடை, இட்லி, வெண்பொங்கல், சட்னி, சாம்பாருடன், மினரல்வாட்டர் பாட்டில்) சிறப்பாக வழங்கப்பட்டது.