வேதபாடசாலை வளாகத்தில் கோபூஜை

ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடம் ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் 55வது ஜயந்தி விழாவை முன்னிட்டு ஸ்வாமிகள் அவதரித்த திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த தண்டலத்தில் வேதபாடசாலை வளாகத்தில் கோபூஜை இந்துசமயமன்றம் சார்பில் வெகு விமரிசையாக இன்று 15.02.23 புதன் கிழமை நடைபெற்றது.

திருப்பாவை திருவெம்பாவை போட்டிகள் பரிசளிப்பு விழா

12.02.2023 ஞாயிற்றுக்கிழமை மறைமலைநகரில் பள்ளி மாணவ மாணவியருக்கான வருடாந்திர திருப்பாவை திருவெம்பாவை போட்டிகள் பரிசளிப்பு விழா நடைபெற்றது. மறைமலைநகர் NH2 அருள்மிகு முத்துக்குமாரசாமி ஆலய வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவை மறைமலைநகர் பிராமணர்சங்கம் மற்றும் வேதபாரதி அமைப்புடன் இந்துசமயமன்றம் இணைந்து நடத்தியது. இந்த விழாவில் ஸ்ரீமஹாபெரியவர் உற்சவத்திருமேனியாக எழுந்தருளினார். வேதபாரதி அமைப்பின் ஸ்ரீகிருஷ்ண ஜகந்நாதன்ஜி சிறப்புரை ஆற்றினார். வேதபாரதி ஸ்ரீவெங்கட்ராமன்ஜி, பிராமணர்சங்கத்தலைவர் ஸ்ரீ.ப்ரகாஷ், இந்துசமயமன்ற மாநில அமைப்பாளர்.புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன் மற்றும் நிர்வாகிகள், தோழமை அமைப்பு நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர். போட்டிகளில் பங்கேற்ற குழந்தைகளுக்கு சான்றிதழ், புத்தகங்கள், அழகிய நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.

இந்துசமயமன்றம் சார்பில் நடைபெற்ற திருப்பாவை திருவெம்பாவை போட்டிகள்

இந்துசமயமன்றம் சார்பில் நடைபெற்ற திருப்பாவை திருவெம்பாவை போட்டிகள் தஞ்சாவூர் பாபநாசம் அருகில் உமையாள்புரம் உயர்நிலைப்பள்ளில் நடைபெற்றது. வெற்றிபெற்ற குழந்தைகளுக்கு மிகச்சிறந்த சமயச்சொற்பொழிவாளரும், அப்பகுதி இந்துசமயமன்ற அமைப்பாளருமான ஸ்ரீமதி.லலிதா வெங்கடேசன் அவர்கள் வாழ்த்தி சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கினார்கள். இந்துசமயமன்றம் சார்பில் மாணவ , மாணவியருக்கு வாழ்த்துக்களையும், பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியப்பெருமக்களுக்கு நன்றிகளையும் தெரிவிக்கிறோம். இந்த சத்கைங்கர்யத்திற்கு முயற்சி எடுத்த அன்பு ஸஹோதரி.ஸ்ரீமதி லலிதா வெங்கடேசன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!

ஸ்ரீகாஞ்சி மஹாபெரியவர் பஞ்சலோகவிக்ரஹஸ்வரூப மூர்த்தியை சென்னை பள்ளிக்கரணை காமகோடிநகர் வேதபாடசாலைக்கு சமர்ப்பணம்

ஸ்ரீகுருப்யோ நம!


இந்துசமயமன்றத்தின் பொன்விழாவையொட்டி ஸ்ரீகாஞ்சி மஹாபெரியவர் பஞ்சலோகவிக்ரஹஸ்வரூப மூர்த்தியை சென்னை பள்ளிக்கரணை காமகோடிநகர் வேதபாடசாலைக்கு சமர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி 03.02.23 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்துசமயமன்ற வியாசர்பாடி அமைப்பாளர் ஸ்ரீஹரிஹரன்ஜி அவர்கள் இல்லத்திலிருந்து வேதபாடசாலைக்கு ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு வேதமந்திரங்கள் முழங்க அபிஷேக, ஆராதனைகள் ஸ்ரீமஹாபெரியவாளுக்கு சிறப்பாக நடைபெற்றது. சாக்தஸ்ரீ.காசி ஸாஸ்த்ரிகள் விழாவிற்கு வருகைதந்து சிறப்பித்தார்.பக்தி ச்ரத்தையுடன் செய்யப்பெற்ற இந்த சமர்ப்பண நிகழ்விற்கு இந்துசமயமன்ற மாநில அமைப்பாளர்.புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன், ஸ்ரீ.ஜெயராமன்ஜி மற்றும் பாடசாலை டிரஸ்டிகள் வந்திருந்தனர். திவ்ய விக்ரஹ ஸ்வரூப மஹாபெரியவர் இனி காமகோடிநகர் வேதபாடசாலையில் வீற்றிருந்து அருள்பாலிப்பார். அனுஷந்தோறும் விசேஷ பூஜைகள் நடைபெறும். ஏற்கனவே ஸ்ரீபுதுப்பெரியவர் விக்ரஹ மூர்த்தி சாக்தஸ்ரீ.காசி ஸாஸ்த்ரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டதையும் நினைவுகூர்கிறோம். மிகவும் உத்தமமான இடங்களில் இரண்டு பெரியவாளும் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க இருப்பதை மிகுந்த மனமகிழ்ச்சியுடன் அன்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

அனுஷஅமிர்தம்

அனுஷஅமிர்தம் சார்பில் இரண்டாவது ஆண்டு துவக்க அன்னதானம் இன்று பழங்குடியினர் பகுதியில் ஸ்ரீமஹாபெரியவர் அருளாசியுடன் நடைபெற்றது. இட்லி, வெண்பொங்கல், வடை, சட்னி, சாம்பாருடன், ஜாங்கிரியுடன் பரிமாறப்பட்டது.ஸ்ரீமஹாபெரியவர் அருளாசியுடன் இந்தாண்டு பெருங்களத்தூர் கோசாலையில் பசுவிற்கு தீவனம் வழங்கிட தீர்மானித்து வழங்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம். ஸ்ரீகாஞ்சிப்பெரியவரின் திருவடிகளே சரணம்!

இருளர் மக்கள் பகுதியில் இனிய பொங்கல் திருவிழா

செங்கல்பட்டு மாவட்டம் களிவந்தப்பட்டு கிராம பழங்குடி மக்கள் (இருளர் மக்கள்) பகுதியில் இனிய பொங்கல் திருவிழா இன்று (08.01.2023, ஞாயிறு) இந்துசமயமன்றம் சார்பில் மிகச்சிறப்பாக வழக்கம்போல் இந்தாண்டும் ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகளின் பரிபூரண அருளாசியுடன் நடைபெற்றது. இந்துசமயமன்ற பொன்விழாவையொட்டி சுற்றுப்புறப்பகுதிகளில் வசிக்கும் அந்த மக்களின் சொந்தபந்தங்கள் அனைவரையும் அழைத்துவரச்செய்து அனைவருக்கும் புத்தாடைகள் வழங்கப்பட்டது. இதுதவிர அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கல் பண்டிகை கொண்டாட ஏதுவாக பச்சரிசி, பாகுவெல்லம்,பாசிப்பருப்பு, முந்திரி, ஏலக்காய், திராக்ஷை ஆகியவை அடங்கிய பை வழங்கப்பட்டது. பழங்குடி மக்களின் வாழ்வாதாரம், படிப்பு ஆகியவற்றிற்காக மன்றம் எடுத்துவரும் முயற்சிகளையும், விழிப்புணர்வு ஏற்படுத்தியும் இந்துசமயமன்ற மாநில அமைப்பாளர் புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன் உரையாற்றினார்.அனைவருக்கும் சுவையான மதிய உணவு (சர்க்கரை பொங்கல், வெஜிடபிள் பிரிஞ்சி சாதம், கத்தரிக்காய் பச்சடி,சாம்பார் சாதம், வடை) பரிமாறப்பட்டது. மிகச்சிறப்பாக நடந்தேறிய இந்த விழாவில் இந்துசமயமன்ற மாநில அமைப்பாளர்.ஸ்ரீமதி.கௌரி வெங்கட்ராமன்,களிவந்தப்பட்டு ஊர்பிரமுகர் ஸ்ரீ.சங்கர், ஸ்ரீகிருஷ்ண பவனம் டிரஸ்ட் ஸ்ரீ.ப்ரகாஷ், ஸ்ரீகாஞ்சி கைங்கர்ய சபா,ஸ்ரீ.சுப்ரமணியம், ஸ்ரீ.ஸ்ரீராம், தேசிய இந்து திருக்கோவில் கூட்டமைப்பு ஸ்ரீ.ஸ்ரீராம், ஆர்எஸ்எஸ் ஸ்ரீ.ஸ்ரீனிவாசன், அனுஷ அமிர்தம் ஸ்ரீ.இராமச்சந்திரன்,பிஜேபி.ஸ்ரீ.மன்ராஜ், இந்துசமயமன்றம் டாக்டர்.ஸ்ரீ.சிவசிதம்பரநாதன் மற்றும் மன்ற அன்பர்கள் கலந்துகொண்டனர்.

ஆழ்ந்த இரங்கல்கள்!

பாரதப்பிரதமர் மதிப்பிற்குரிய ஸ்ரீமோதிஜியின் தாயார் ஸ்ரீமதி.ஹீராபென் அவர்களின் மறைவிற்கு இந்துசமயமன்றம் சார்பில் மனமார்ந்த அஞ்சலிகளை தெரிவிக்கிறது. ஆழ்ந்த இரங்கல்கள்!
அம்மையாரின் ஆத்மா இறைவனின் திருவடிகளில் இளைப்பாற ஸ்ரீமஹாபெரியவரின் திருவடிகளில் ப்ரார்த்திக்கிறோம்.
மாநில அமைப்பாளர்கள் மற்றும அன்பர்கள்
இந்துசமயமன்றம்
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய, கலாச்சார, பண்பாட்டு,சேவை அமைப்பு.