ஸ்ரீமஹாபெரியவர் திருவுருவப்படத்தினில் எழுந்தருளி நகர்வலம்

09.04.23 ஞாயிற்றுக்கிழமை செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் ஸ்ரீதர்மசாஸ்தா ஜெயந்தியையொட்டி நடைபெற்ற பஞ்சபூத மஹாயக்ஞம் மற்றும் ஆன்மீகப்பேரணியில் இந்துசமயமன்றமும் பங்கேற்றது. அலங்கரிக்கப்பட்ட வேனில் ஸ்ரீமஹாபெரியவர் திருவுருவப்படத்தினில் எழுந்தருளி நகர்வலம் வந்தார். அகிலபாரத அய்யப்ப சேவா சங்கம் மிகச்சிறப்பாக இந்த நிகழ்ச்சியை பிரம்மாண்டமான முறையில் நடத்தினார்கள்.இஸ்கான, அனுஷ அமிர்தம், பிரம்மா குமாரிகள் சங்கம் ஆகியோர் ஊர்வலமாக வர திருக்கயிலாய வாத்தியம் மற்றும் செண்டை வாத்தியம், மங்கள வாத்தியம் முழங்க, ஸ்ரீமுனீஸ்வரஸ்வாமி, ஸ்ரீதர்மஸாஸ்தா, ஸ்ரீமஹாபெரியவர், ஸ்ரீசிவலிங்கேஸ்வரர் தனித்தனி ரதத்தில் நகர்வலம் வந்து அருள்பாலித்தனர்.

யுகாதி நல்வாழ்த்துக்கள்!

அனைத்து அன்பர்களுக்கும் இனிய யுகாதி நல்வாழ்த்துக்கள்!

புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன் முனைவர்.கலை இராம.வெங்கடேசன் ஸ்ரீமதி.கௌரி வெங்கட்ராமன் மாநில அமைப்பாளர்கள், இந்துசமயமன்றம் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய,கலாச்சார, பண்பாட்டு,சேவை அமைப்பு

அனுஷ அமிர்தம்

அனுஷ அமிர்தம் சார்பில் மாதந்தோறும் ஸ்ரீகாஞ்சிப்பெரியவர் அவதரித்த அனுஷத்திருநாளில் பழங்குடியினர், சாலையோர மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தமாதம் (13.03.23) மாசி திங்கட்கிழமை அனுஷ நக்ஷத்திரத்தை முன்னிட்டு அன்னதானம் (ஜாங்கிரி, வடை, இட்லி, வெண்பொங்கல், சட்னி, சாம்பாருடன், மினரல்வாட்டர் பாட்டில்) சிறப்பாக வழங்கப்பட்டது.

ஸ்ரீஸ்ரீஸ்ரீஜயேந்த்ர சரஸ்வதி ஸ்வாமிகள் ஆராதனை

ஸ்ரீகாஞ்சி ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீஜயேந்த்ர சரஸ்வதி ஸ்வாமிகள் ஆராதனையையொட்டி பழங்குடி மக்கள் பகுதியில் இந்துசமயமன்றம் சார்பில் அன்னதானம் (பாதூஷா, வடை, இட்லி, நெய்பொங்கல், தேங்காய் சட்னி, கதம்ப சாம்பார்) வழங்கப்பட்டது. ஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்வாமிகளை தியானித்து மலரஞ்சலி செய்யப்பட்டது.

ஜகத்குரு ஸ்ரீஜயேந்த்ர சரஸ்வதி ஸ்வாமிகள் 5வது ஆராதனை!

சனாதன ஹிந்து மதத்தின் ஒப்பற்ற மஹாஞானி, காஞ்சி காமகோடி பீடதின் 69வது பீடாதீச்வரர், பாரதம் முழுக்க பலமுறை வலம் வந்து அளப்பரிய தொண்டாற்றியவர், ஏழை மக்களுக்காக கல்விச்சேவை, மருத்துவச்சேவை என மக்கள்சேவையையே தன் குறிக்கோளாகக்கொண்டு செயல்பட்டவர்.
வேதபாடசாலைகள் அவரால் பல இடங்களில் துவக்கப்பட்டது. பல பழந்திருக்கோவில்கள் அவரால் பாரதம் முழுக்க புனருத்தாரணம் செய்யப்பெற்றது. அனேகமாக அவர் திருப்பாதம் படாத இடமே பாரதத்தில் இல்லை எனலாம். ஆதிசங்கரருக்குப்பிறகு கைலாயம் சென்ற ஜகத்குரு இவரே.
காஞ்சி மஹாபெரியவர் மூல மூர்த்தி என்றால் ஸ்ரீபுதுப்பெரியவர் உத்ஸவ மூர்த்தி எனவே கொள்ளலாம். அயோத்தி ராமர் கோவில் பிரச்சினையை தீர்க்க அவராற்றிய பங்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது.
நமது இந்துசமயமன்றம் மஹாபெரியவரால் தோற்றுவிக்கப்பெற்று ஸ்ரீபுதுப்பெரியவரால் வளர்க்கப்பட்டது. எப்போதும் இன்முகத்துடன் குங்குமம் கைநிறைய கொடுத்து அருளாசி வழங்குபவர். ஸ்ரீமஹாபெரியவரே, ஸ்ரீபுதுப்பெரியவர் லக்ஷ்மீ கடாக்ஷம் நிறைந்தவர் என சொல்வதுண்டு.
ஹிந்து மதத்தின் பாதுகாவலராக, உயர்ந்த ஸ்ரீகாஞ்சி மூலாம்னாய ஸர்வக்ஞபீடமாகிய ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சங்கராச்சார்யராக அருளாட்சி புரிந்தவர். ஜகத்குரு ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளை நமக்கு ஞானஒளி வழங்கிட அருளியவர்.
ஸ்ரீஜயேந்த்ர சரஸ்வதி ஸ்வாமிகளின் ஐந்தாவது ஆராதனை புனிதநாளில் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய,கலாச்சார, பண்பாட்டு, சேவை அமைப்பான இந்துசமயமன்றம் ஸ்ரீஸ்வாமிகளின் பொற்பதங்களில் ஹ்ருதயபூர்வமான மலரஞ்சலிகளை செலுத்துகிறது.
ஹிந்துதர்மம் பாரெங்கும் செழிக்க ஸ்ரீஸ்வாமிகளின் அருளாசிகளை வேண்டி ப்ரார்த்திக்கிறோம்.
இவண்,
புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன்,
முனைவர்.கலை இராம.வெங்கடேசன்,
கௌரி வெங்கட்ராமன்
அமைப்பாளர்கள், மற்றும் அன்பர்கள்.
இந்துசமயமன்றம்.

திருவாசக முற்றோதுதல்

மறைமலைநகரில் இன்று 25.02.23 சனிக்கிழமை மறைமலைநகர் பிராமணர்சங்கம் சார்பில் வெகுவிமரிசையாக ஏற்பாடு செய்யப்பட்ட திருவாசக முற்றோதுதல் நிகழ்ச்சியில் இந்துசமயமன்ற அன்பர்கள் கலந்துகொண்டு முற்றோதுதலை சிறப்பாக நடத்திவைத்தனர். அடியார்களுக்கு அமுது செய்விக்கப்பட்டு தாம்பூலப்பை வழங்கப்பட்டது.

மஹாசிவராத்திரியை யொட்டி விசேஷ பக்திபாடல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது

மறைமலைநகரில் இந்துசமயமன்றம் சார்பில் இன்று (18.02.23 சனிக்கிழமை) ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் ஜயந்தி மற்றும் மஹாசிவராத்திரியை யொட்டி விசேஷ பக்திபாடல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. ஸ்ருதிலயா இசைப்பள்ளியைச்சேர்ந்த நாற்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆசிரியை ஸ்ரீமதி.மஹாலட்சுமி அவர்களுடன் கலந்துகொண்டு அற்புதமாக பாடினர். அனைத்து குழந்தைகளுக்கும் சான்றிதழ் மற்றும் பரிசுகள், புத்தகங்கள் வழங்கப்பட்டது. இரவு ப்ரசாதம் (சர்க்கரை பொங்கல், வடை, சுண்டல், அரிசி உப்புமா வழங்கப்பட்டது.