பழம்பெரும் சைவ ஆதீனங்களில் ஒன்றும், தொண்டைமண்டல சைவ ஞானபீடமுமாகிய தொண்டைமண்டல ஆதீனத்தின் 232வது ஆதீனகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ திருவம்பல தேசிக ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய ஸ்வாமிகள் அவர்கள் முக்தி அடைந்தார்கள். தமிழிலும் சைவத்திலும் மிகுந்த புலமையும் ஞானமும் பெற்ற ஞானாசிரியராக விளங்கிய ஸ்ரீஸ்வாமிகளின் தொண்டு போற்றி வணங்குதற்குரியது. ஸ்ரீஸ்வாமிகளின் திருவடிமலர்களில் இந்துசமயமன்றம் சார்பில் அஞ்சலிகளை சமர்ப்பணம் செய்கிறோம். இவண், மாநில அமைப்பாளர்கள் மற்றும் சமயமன்ற அன்பர்கள். இந்துசமயமன்றம், ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமயச்சேவை அமைப்பு.
நந்தி மலையில் திருக்கார்த்திகை அகண்ட தீபம் இன்று 29.11.2020 ஏற்றப்பட்டது. இந்துசமயமன்றம் சார்பில் கந்தசஷ்டி கவசம் பாராயணம் நடைபெற்றது.இனிப்பு வழங்கப்பட்டது.
13.11.2020 வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் ஸ்ரீபெரும்புதூர் தாலுகா ஒரத்தூர் கிராமத்தில் இருளர் பகுதியில் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமயச்சேவை அமைப்பான இந்துசமயமன்றம் சார்பில் மாடம்பாக்கம் ஜனகல்யாண் மற்றும் சவுதி ஸ்ரீகாஞ்சி கைங்கர்யசபா உதவியுடன் தீபாவளிப்பண்டிகைக்காக இனிப்பு மற்றும் கார பலகாரங்கள் வழங்கப்பட்டது. தீபாவளிக்கு இனிப்பு மற்றும் பொங்கலுக்கு புத்தாடையுடன் அறுசுவை உணவு கடந்த மூன்று வருடங்களாக ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள் அருளாசியுடன் இந்த பகுதியில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த வருட நிகழ்ச்சியில் ஒரத்தூர் ஊராட்சி முன்னாள் தலைவர் திருமதி.கற்பகம் சுந்தர், திரு.N.D.சுந்தர், திரு.சுபாஷ், மற்றும் ஊராட்சி செயலாளர் திரு.பார்த்தசாரதி, இந்துசமயமன்ற மாநில அமைப்பாளர் புலவர் க ஆத்ரேய சுந்தரராமன், சமயமன்ற அன்பர்கள் திரு. சாயிராம், திரு.சந்த்ரநாத் மிஸ்ரா, ஸ்ரீநந்தி சித்தர் பீடம் திரு.க.இராமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தை அடுத்த ஓரிக்கையில் அமைந்துள்ள மகா பெரியவர் அதிஷ்டானத்தில், கேரள மாநிலம் எடநீர் மடத்தின் தலைவராக சச்சிதானந்த பாரதி சுவாமிகள் அண்மையில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
கேரள மாநிலம், எடநீர் மடாதிபதியாக இருந்த கேசவானந்த பாரதி சுவாமிகள் கடந்த செப்டம்பர் 6-ஆம் தேதி சித்தி அடைந்தார். இளமைக் காலத்திலிருந்தே அவர் காஞ்சிபுரம் சங்கர மடத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்.
கேசவானந்த பாரதி சுவாமிகள் எடநீர் மடத்துக்கும், தேசிய அளவில் மக்களுக்கு ஆற்றியுள்ள தொண்டுகளும், பங்களிப்புகளும் மகத்தானவை என விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூறினார். கேசவானந்த பாரதி சுவாமிகள் தனது வாழ்நாளின்போதே ஜயராம மஞ்சத்தாயாவை வாரிசாக நியமிக்க விரும்பியதையும், அவருக்கு சந்நியாச ஆஸ்ரம உபதேசம் வழங்குவதற்கான நாளைத் தேர்ந்தெடுத்துள்ளதையும் குறிப்பிட்டுள்ளார். தனது பக்தர்களிடமும், ஜயராம மஞ்சத்தாயாவிடமும் தனக்கு ஒருவேளை எதிர்பாராத சூழ்நிலை ஏற்படுமானால் காஞ்சி சங்கராச்சாரியார் சுவாமிகளை அணுகி, அவரது ஆசி மற்றும் வழிகாட்டுதலைப் பெற்று, சந்நியாஸ ஆஸ்ரம உபதேசம் வழங்க வைத்து, எடநீர் மடத்தின் வாரிசாக நியமிக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தைத் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, எடநீர் மடத்தின் நிர்வாகிகள், பக்தர்களுடன் ஜயராம மஞ்சத்தாயாவும் காஞ்சிபுரம் வந்து பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்தனர். எடநீர் மடத்தின் வாரிசாகவும், ஜயராம மஞ்சத்தாயாவுக்கு சந்நியாஸ ஆஸ்ரம உபதேசம் வழங்க வேண்டும் என்ற விருப்பக் கடிதங்களை வழங்கினர்.
ஸ்வர்ணஹள்ளி ஸ்வாமிகளுக்கு ஸந்யாசம் ஆஸ்ரம ஸ்வீகாரம். ஸ்ரீ பெரியவாள் மந்த்ரோபதேசம் செய்தபோது எடுத்த படம்.
எந்த ஒரு பாரம்பரிய மடங்களுக்கும் குருசிஷ்ய பரம்பரை விச்சின்னம் ஏற்பட்டால் புனருத்தாரணம் செய்து வைப்பது ஸ்ரீ ஆதிசங்கரரின் சிம்ஹாஸனமான காமகோடி பீடம் ஸ்ரீ பெரியவாள் தான். இவர்கள் ஆதிசங்கரரின் நேர் பரம்பரை பரம்பரையாக வருபவர்கள். அனைவருக்கும் குருபீடம்.
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.
காஞ்சி சங்கர காமாக்ஷி சங்கர
காலடி சங்கர காமகோடி சங்கர
பெண்களை சக்தி தெய்வமாக வழிபடுவது, அவர்களை உயர்வாக மதிப்பதுதான் இந்து கலாச்சாரம். அதன் வெளிப்பாடுதான் கல்விக்கு சரஸ்வதிதேவி, செல்வத்திற்கு மஹாலக்ஷ்மி, வீரத்திற்கு துர்காதேவி என ஆதிபராசக்திதேவியை உருவகப்படுத்தி நவராத்திரியில் பூஜிக்க இந்து சம்ப்ரதாயம் வழிப்படுத்தியுள்ளது. பெண்களே ஒரு இல்லத்தின் ஆக்கசக்தி. அதனாலேயே கன்யா பூஜை, சுமங்கலி பூஜை என பெண்களை பூஜிக்கிறோம். பெண்கள் கண்ணில் கண்ணீர் வழியாமல் காக்கவேண்டும் என மனுஸ்மிருதி கூறுகிறது. எனவே இந்த சரஸ்வதி பூஜை புனிதநாளில் மகளிரை மதிப்போம். மஹாசக்தியே மகளிர் என போற்றுவோம்!
வீரத்துறவி ஸ்ரீ ராமகோபாலன்ஜி அவர்கள் இந்துதர்மத்திற்காகவும் நமது இந்து கலாச்சார பண்பாட்டிற்காகவும் பெரிதும் பாடுபட்ட உன்னத மனிதர். அவர் மறைவு இந்து சமுதாயத்திற்கு மிகப்பெரிய இழப்பு ஆகும். இந்துசமுதாயத்தின் போர்வாளாகத்திகழ்ந்த அன்னாரை நாம் நன்றியுடன் என்றும் நினைவுகூரவேண்டும்.
ஸ்ரீராமகோபாலன்ஜி அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலிகளை இந்துசமயமன்றம் காணிக்கை ஆக்குகிறது. அன்னாரை இழந்து வாடும் இந்துமுன்னணியினருக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.
அமைப்பாளர்கள் மற்றும் சமயமன்ற அன்பர்கள்.
இந்துசமயமன்றம்.
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய கலாச்சார பண்பாட்டு சேவை அமைப்பு.