ஓம் சாந்தி!
ப்ரம்மஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி ஸாஸ்த்ரிகள் – ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் எழுபதாவது ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சாரிய மஹாஸ்வாமிகளின் பூர்வாச்ரம தகப்பனார். அன்னார் இன்று காலை ஸ்வர்கீயபதவியடைந்தார்.சிறந்த வேதவிற்பன்னர். ஆசார சீலர். நமக்கு ஜகத்குருவைத்தந்த உத்தம புருஷர். அவர்களின் ஆன்மா சாந்தியடைய ஸ்ரீமஹாத்ரிபுரசுந்தரி சமேத ஸ்ரீசந்த்ரமௌளீச்வர ஸ்வாமி திருவடிகளில் ப்ரார்த்திக்கிறோம். அன்னாரின் மறைவு என்கிற தாங்கமுடியாத துக்கத்தில் ஆழ்ந்திருக்கும் அவர்கள் குடும்பத்தினருடன் இந்துசமயமன்றத்தினர் அனைவரும் பங்கேற்கிறோம்.
புலவர் க ஆத்ரேய சுந்தரராமன்,
கௌரி வெங்கட்ராமன் மற்றும் சமயமன்ற அன்பர்கள்.
Category: News
சென்னை மேற்கு மாம்பலம் ஸ்ரீராம் சமாஜம்
ஸ்ரீகுருப்யோ நம! இன்று 27.09.19 வெள்ளிக்கிழமை சென்னை மேற்கு மாம்பலம் ஸ்ரீராம் சமாஜத்தில் ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகளை தரிசித்து, கிழக்கு தாம்பரம் ஸ்ரீசங்கர வித்யாலயா பள்ளி வளாகத்தில் ஸ்ரீஆசார்யாள் நவராத்திரி விழாவில் சுவாசினிகளுக்கு தருவதற்காக ஸ்ரீகாஞ்சி கைங்கர்ய சபா அன்பர்கள் ஆதரவில் வாங்கப்பட்டுள்ள மங்கலப்பொருட்களை சமர்ப்பணம் செய்து ஆசி பெற்றோம். அதேபோல ஸ்ரீகாஞ்சி கைங்கர்ய சபா ஆதரவில் வல்லீபுரம் கிராமத்தில் இந்துசமயமன்றம் சார்பில் நடைபெற உள்ள 108 சுமங்கலி பூஜைக்கான மங்கல பொருட்களையும் சமர்ப்பணம் செய்து ஆசி பெற்றோம். அடியேனுடன் அருமைச்சகோதரிகள் திருமதி கௌரி வெங்கட்ராமன், திருமதி.ராதிகா மற்றும் திருமதி உஷா ஆகியோர் ஸ்ரீமடத்தின் முகாமிற்கு வந்து ஆசார்யாளை தரிசனம் செய்துஆசி பெற்றனர். ஸ்ரீசரணர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் சவுதியில் நடைபெற உள்ள ஸ்ரீகாஞ்சி கைங்கர்ய சபா நவராத்திரி விழாவிற்கு ஆசி கூறி சபா அன்பர்கள் அனைவருக்கும் ப்ரசாதம் தந்தருளினார்கள்.
ஒரத்தூர் பஞ்சாயத்து நீலமங்கலம் கண் பரிசோதனை
இன்று (22.09.19) ஞாயிற்றுக்கிழமை காலை 9. மணி முதல் 12 மணி வரை காஞ்சி மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டம் ஒரத்தூர் பஞ்சாயத்து நீலமங்கலம் கிராம சேவை மையத்தில் நமது இந்து சமய மன்றத்தின் சார்பில் ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள் அருளாசியுடன் நடைபெற்ற கண் சிகிச்சை முகாமில் பம்மல் ஸ்ரீசங்கரா கண் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்துகொணடு சிறப்பாக கிராம மக்களுக்கு கண் பரிசோதனை செய்தனர். ஒரத்தூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் திருமதி. கற்பகம் ND சுந்தர் அவர்கள் மற்றும் இந்துசமயமன்ற மாநில அமைப்பாளர் திருமதி.கௌரி வெங்கட்ராமன் அவர்கள் ஆகியோர் முகாமை துவக்கி வைத்து திருவிளக்கு ஏற்றிவைத்தார்கள். ஊராட்சி செயலாளர் திரு.பார்த்தசாரதி அவர்கள் முகாமில் கூட இருந்து உதவினார். தேசிய இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் ஸ்ரீராம், அக்ஷயா ஸ்ரீராம், ரீச் பவுண்டேஷன் ஸ்ரீ.கண்ணன், சமயமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீ.சாயிராம், ஸ்ரீதர், இந்து திருக்கோவில் கூட்டமைப்பு செங்கல்பட்டு மாவட்டத்தலைவர். ஸ்ரீ.ராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர். ஸ்ரீ.மணிவண்ணன், உழவாரப்பணி ஸ்ரீ.லோகநாதன் மற்றும் படப்பை, கரசங்கால் மன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு வருகைபுரிந்த மக்களுக்கு உதவிசெய்தனர்.
கண்புரை அறுவை சிகிச்சை
இந்துசமயமன்றத்தின் சார்பில் நடத்தப்பெறும் கண்புரை அறுவை சிகிச்சை தேர்வு முகாமிற்கு வருகைதந்து இலவச கண் சிகிச்சை பெற அழைக்கிறோம்.
இந்துசமய மன்ற பிக்ஷாவந்தனம்
ஸ்ரீகுருப்யோ நம ! 14.09.19 சனிக்கிழமை அன்று காஞ்சி ஸ்ரீமடத்தின் ஆழ்வார்பேட்டை முகாமில் இந்துசமய மன்ற பிக்ஷாவந்தனம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்துசமயமன்றத்தின் மலரை ஸ்ரீபெரியவா வெளியிட இந்துசமய மன்றத்தின் மிகமூத்த அமைப்பாளர் ஸ்ரீ.ராம்ராம் சுந்தரராமன் பெற்றுகொண்டார். தேசீய இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ஸ்ரீராமிற்கு கயிலாயச்செல்வர் விருது ஸ்ரீஸ்வாமிகள் அருட்கரங்களால் வழங்கப்பட்டது. வியாசர்பாடி சமயமன்ற கிளை ஸ்ரீஹரிஹரன்ஜி, சமயமன்ற பிரச்சாரகர் ஸ்ரீ.குமாரஸ்வாமிஜி, மாடம்பாக்கம் ஜனகல்யாண் ஸ்ரீ.சுந்தரராமன்ஜி, வளசரவாக்கம் சமயமன்ற கிளை.ஸ்ரீரகுராமன்ஜி, ஊரப்பாக்கம் கிளை ஸ்ரீமதி.பார்வதிமோகன், வண்டலூர் கிளை.ஸ்ரீமதி.அக்ஷயா ஸ்ரீராம், திண்டிவனம் கிளை அன்பர்கள், வியாசர்பாடி கிளை அன்பர்கள், பெருங்களத்தூர் கிளை. ஷ்யாம் மற்றும் பல அன்பர்கள் கலந்துகொண்டார்கள். தேசீய இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் துணைத்தலைவர் சிவஸ்ரீ.சீத்தாராம சிவாச்சாரியார், சமயமன்ற மாநில அமைப்பாளர் ஸ்ரீமதி.கௌரி வெங்கட்ராமன், மற்றும் பலர் கலந்துகொள்ள விழா இனிதே நடந்தேறியது.
பிக்ஷாவந்தனம் மற்றும் புஸ்தகம் வெளியீடு
இன்று ஸ்ரீகாஞ்சி ஸ்ரீமட ஆழ்வார்பேட்டை முகாமில் இந்துசமயமன்றத்தின் பிக்ஷாவந்தனம் மற்றும் புஸ்தகம் வெளியீடு விஷயமாக ஸ்ரீஆசார்யாள் சந்நிதியில் ப்ரார்த்தித்து ஸ்ரீசரணர்களின் அனுக்ரஹப்ரசாதம் பெற்றோம். நமது சமயமன்ற அன்பரும் மிகச்சிறந்த ஆன்மீக எழுத்தாளருமான ஸ்ரீ.ஜே.கே.சிவன் அவர்களின் சதாபிஷேக பத்திரிகையை சமர்ப்பித்து ஸ்ரீபெரியவா அருட்ப்ரசாதத்தை பெற்றோம். அடியேனும், சகோதரி ஸ்ரீமதி.கௌரி வெங்கட்ராமன் மற்றும் தேசீய இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் ஸ்ரீராம், ஸ்ரீ.ஜே.கே.சிவன் அவர்களும் சாந்தம் ராம்மோகன் அவர்களும் சென்றிருந்தோம்.
ஶ்ரீ திரிபுரசுந்தரி சமேத ஶ்ரீகண்டீஸ்வரர் ஆலயத்தில் விளக்கு பூஜை
ஆடி பூரத்தை முன்னிட்டு வல்லீபுரம் ஶ்ரீ திரிபுரசுந்தரி சமேத ஶ்ரீகண்டீஸ்வரர் ஆலயத்தில் விளக்கு பூஜை இந்து சமய மன்றத்தின் சார்பில் வெகு சிறப்பாக நடை பெற்றது
இந்துசமயமன்றம் பக்தியுடன் அனந்தகோடி நமஸ்காரங்களை சமர்ப்பிக்கிறது
ஸ்ரீகுருப்யோ நம!
“ஸதாஸிவ ஸமாரம்பாம் சங்கராச்சாரிய மத்யமாம்
அஸ்மத் ஆசார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம்!
ஸ்ரீசங்கர பகவத்பாதாசார்ய பரம்பராகத மூலாம்னாய ஸர்வக்ஞ பீடம் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் 70வது ஆசார்ய ஸ்வாமிகள் ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசங்கர விஜயேந்த்ர சரஸ்வதி சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் சன்யாஸ ஸ்வீகரண தினத்தில் ஸ்வாமிகளின் பொற்பதங்களில் இந்துசமயமன்றம் பக்தியுடன் அனந்தகோடி நமஸ்காரங்களை சமர்ப்பிக்கிறது.
அமைப்பாளர்கள் மற்றும் சமயமன்ற அன்பர்கள்.
இந்துசமயமன்றம்
ஸ்ரீகாஞ்சி சங்கர மடத்தின் சமய கலாச்சார பண்பாட்டு சேவை அமைப்பு.
பாரத் மாதா கீ ஜெய்!
பாரதத்தின் பிரதம மந்திரியாக மானனீய ஸ்ரீ.நரேந்திர தாமோதர தாஸ் ஸ்ரீமோதிஜி இரண்டாவது தடவையாக மிகப்பெரிய அளவில் மக்களின் பேராதரவுடன் வெற்றிபெற்று பொறுப்பேற்க உள்ளார். தேச பக்தி, தெய்வ பக்தி, சனாதன ஹிந்து தர்மத்தின்பால் மிகுந்த ஈடுபாடு, பொதுவாழ்வில் நேர்மை,நல்ல திட்டங்களை செயல்படுத்துவதில் உறுதி என பன்முகத்தன்மை கொண்டவர் ஸ்ரீமோதிஜி. பெருமைமிகு ஸ்வயம் சேவக் அவர். அவருடைய தலைமையில் அமையும் அரசு தேசத்தின் நலனில் அதிக அக்கறையோடு மக்களுக்கான நலத்திட்டங்களை முன்னெடுக்கும், உலக அரங்கில் பாரதத்தின் பெருமை பேசப்படும் என எதிர்பார்க்கலாம்.
ஸ்ரீமோதிஜி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை இந்துசமயமன்றம் தெரிவிக்கிறது.
பிரமாண்டமான திருவிளக்கு பூஜை
நேற்று 21.05.2019 செவ்வாய் கிழமை மாலை சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம் கண்ணகி நகர் அருள்மிகு மத்யகாசிஸ்ரீவிஸ்வநாதர் ஆலயத்தில் 1008 மகளிர் பங்கேற்ற பிரமாண்டமான திருவிளக்கு பூஜைக்கு ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீ.சங்கரவிஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் வருகை புரிந்து அருளாசி வழங்கினார். இந்துசமயமன்றம், ஜனகல்யாண் மாடம்பாக்கம், திருக்கோவில் வழிபாட்டுக்குழு, தேசீய இந்து திருக்கோவில் கூட்டமைப்பு, சேவாபாரதி, ஸ்ரீஸ்கந்த சேவா சங்கம், ஸ்ரீசங்கரா கல்வி அறக்கட்டளை மற்றும் ஸ்ரீவாகீசர் அடியார் திருக்கூட்டம் இணைந்து நடத்திய இந்த விழாவிற்கு சுமார் இரண்டாயிரம்பேர் வரை மக்கள் வந்திருந்து பக்தியுடன் பூஜையில் பங்கேற்றனர். அனைவருக்கும் சுவையான அன்னப்ரசாதம் வழங்கப்பட்டது.