காஞ்சி ஸ்ரீமடத்தின் ஏனாத்தூர் சங்கரா கல்லூரி முதல்வரும், இந்துசமயமன்ற அமைப்பாளரும் என் அன்பு சகோதரருமான முனைவர் கலைராம.வெங்கடேசன் – சௌ.கிருஷ்ணவேணி தம்பதியரின் மணிவிழா இன்று காஞ்சி ஸ்ரீசங்கர மடத்தில் வேதோக்தமாக சிறப்பாக நடந்தது. இந்துசமயமன்றம் சார்பில் வாழ்த்துக்களை மாநில அமைப்பாளர் புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன் தெரிவித்ததோடு மணிவிழா வாழ்த்துக்கவிதையையும் அனுப்பினார். வாழ்க மணிவிழா தம்பதியினர்!
மணிவிழா வாழ்த்து மடல்
அன்பின் ஆளுமை! பண்பின் செழுமை! பழக இனிமை! பதவியில் நேர்மை! உதவியில் தாய்மை! உள்ளத்தில் தூய்மை! உயர்ந்தோர் கேண்மை! பாவலர் வாய்மை! அறிவின் வளமை! அனுபவச்செம்மை! உழைப்பில் இளமை! உன்னதத் தலைமை! தமிழில் புலமை! சமயச்சீர்மை! பார்வையில் எளிமை! சங்கராகல்லூரி பெருமை! அருமைச்சகோதரர் முனைவர்.கலைராம.வெங்கடேசன் தம்பதியர் ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகளின் பூரண அருளாசியுடன் சீரோடும் சிறப்போடும் பல்லாண்டு வாழ்வாங்கு வாழ இந்துசமயமன்றம் சார்பில் மணிவிழா நல்வாழ்த்துக்கள்! புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன், அமைப்பாளர், இந்துசமயமன்றம், ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய,கலாச்சார, பண்பாட்டு, சேவை அமைப்பு தலைவர், ஸ்ரீநந்திசித்தர் பீடம், திருநந்திகேச்சுரம்.
அனைவருக்கும் நமஸ்காரங்கள்! ஸ்ரீகுருவாயூரப்பா சரணம்!
வருடந்தோறும் நடைபெறும் ஸ்ரீமந்நாராயணீய பாராயண யக்ஞ வைபவமானது இந்த வருடமும் மகோன்னதமாக ஸ்ரீகுருவாயூரப்பன் திருவருளாலும், குருவருளாலும் நடைபெற உள்ளது. அதன் பூர்வாங்கமாக வழக்கம்போல், இடரெலாம் களையும் ஸ்ரீமஹாகணபதி ஹோமம், செல்வ வளம் சேர்க்கும் ஸ்ரீஸூக்த மஹாலக்ஷ்மி ஹோமம், நோய் தீர்த்து நலம் நல்கும் ஸ்ரீஆரோக்யலக்ஷ்மீ ஸமேத ஸ்ரீமஹாதன்வந்த்ரீ ஹோமம், சௌபாக்யம் அருளும் ஸுவாஸினி பூஜை மிகவிமரிசையாக நடைபெற உள்ளது. அதிவிசேஷமாக அச்சமயம், மிகப்புராதனமானதும், அற்புதமான பலனளிக்கக்கூடியதான ஸ்ரீமந்நாராயணீய ஸஹஸ்ரநாம அர்ச்சனை ஸ்ரீகுருவாயூரப்பனுக்கு செய்விக்கப்பட உள்ளது. வருகின்ற விஸுவாவஸு வருடம் வைகாசி மாதம் 16ந்தேதி (30.05.2025), வெள்ளிக்கிழமை காலை 7.30 மணி முதல் 11 மணிவரை சென்னை அருகில் மறைமலைநகர் இணைவு 2, ஐயப்பன் திருக்கோவில் வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த ஹோம பூஜைகளுக்கு உதவிகள் பணமாகவோ, பொருளாகவோ வரவேற்கப்படுகிறது. Gpay no.9789007401 (raghavathreya) அல்லது கீழ்க்கண்ட ஸ்ரீசங்கர சனாதன சேவா சம்ஸ்தானத்தின் வங்கிக்கணக்கு அல்லது QR CODEலும் செலுத்தலாம். தங்கள் கோத்ரம், நக்ஷத்ரம், பெயர் , மொபைல் நம்பர்விவரம் மற்றும் பணம் அனுப்பியதன் காப்பியோடு 9789007401 வாட்ஸ்ஆப் நம்பரில் அனுப்பிவிடவும். குறிப்பு: ஸ்ரீமந்நாராயணீய பாராயண யக்ஞம் 2025 இடம், தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
Namaskaram to all!
Pls send the Donations to the bank account given below.
Donations are eligible u/s 80 G
SRI SANKARA SANATHANA SEVA SAMSTHANAM
KARUR VYSYA BANK CURRENT ACCOUNT NO. 1657115000005138 IFSC CODE: KVBL0001657 BRANCH. GUDUVANCHERI
இன்று 02.05.25 வெள்ளிக்கிழமை ஸ்ரீசங்கர- ஸ்ரீராமானுஜ ஜயந்தி மஹோத்ஸவம் வெகு விமரிசையாக மறைமலைநகர் அய்யப்பன் திருக்கோவிலில் நடைபெற்றது. இந்துசமயமன்றம் மற்றும் மறைமலைநகர் பிராமணர்சங்கம் இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சியில் திரளான ஆஸ்தீக அன்பர்கள் கலந்துகொண்டனர். மஹாகணபதி பூஜை, ஸ்ரீமஹாலக்ஷ்மி பூஜை, ஸ்ரீஆசார்யர்களுக்கு பூஜை மற்றும் ஸ்தோத்ர பாராயணங்கள், குருவந்தனத்துடன் நிறைவுற்ற இந்நிகழ்ச்சியில் இரவு சிற்றுண்டி, ப்ரசாதம் அனைவருக்கும் வழங்கப்பட்டது.