ஸ்ரீசக்ர மஹாமேரு பீடாதிபதி பிலாஸ்பூர் ஸ்வாமிகள் வருகைதந்தார்கள்

இன்று (28.7.18) மாலை ஸ்ரீசக்ர மஹாமேரு பீடாதிபதி பிலாஸ்பூர் ஸ்வாமிகள் சாதுர்மாஸ்ய விரதம் அனுஷ்டிக்கும் ஆதம்பாக்கம் இந்துசமயமன்றம் கிளை ஸ்ரீவெங்கட்ராமன் அவர்கள் இல்லத்தில் ஸ்வாமிகளை தரிசனம் செய்துகொண்டு நமது சமய மன்ற பணிகளுக்கு ஆசீர்வாதம் பெற்றேன். அவ்வமயம் ப்ரம்மஸ்ரீ.கிருஷ்ணமூர்த்தி ஸாஸ்திரிகள் வருகைதந்தார்கள்.

ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடம் ஆஸ்தான வித்வான் திருச்சி கல்யாணராமன் அவர்கள் ஸ்ரீராமாயண உபன்யாசம்

26.07.18 அன்று மாலை மாடம்பாக்கம் ஸ்ரீபெரியவா இல்லத்தில் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடம் ஆஸ்தான வித்வான் திருச்சி கல்யாணராமன் அவர்கள் ஸ்ரீராமாயண உபன்யாசம். அடியேனும் தேசிய இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ஸ்ரீராமும் ஸ்ரீபிரகாஷ் அண்ணா அழைப்பின்பேரில் கலந்துகொண்டோம். நமது சமய மன்றம் சார்பில் அவருக்கு பொன்னாடை போர்த்தி சமய மன்ற வெளியீடான சுந்தர காண்டம் கைப்பிரதி அனைவருக்கும் விநியோகித்தோம். உபன்யாசம் மிகச்சிறப்பாக இருந்தது.

ஸ்ரீகாஞ்சி மாமுனிவர் கைங்கர்யத்தில் தங்களை வாழ்நாள் முழுவதும் ஈடுபடுத்திக்கொண்ட அணுக்கத்தொண்டர்களுக்கு மூன்றாவது நாளில் ஸ்ரீமஹாபெரியவர் மஹோத்சவத்தில் சிறப்பு செய்யப்பட்டது. ஸ்ரீவேதபுரி சாஸ்திரிகள், ஸ்ரீ சிவராமக்ருஷ்ண சாஸ்திரிகள், ஸ்ரீகுமரேச சாஸ்திரிகள், ஸ்ரீபட்டாபி அவர்கள், ஸ்ரீதியாகு தாத்தா என பலரையும் கௌரவித்து பணிந்து மகிழ்ந்தோம். ஸ்ரீவேதபுரி சாஸ்திரிகள் மற்றும் ஸ்ரீகாமாக்ஷி அம்மன் திருக்கோவில் ஸ்ரீசெல்லா விஸ்வநாத சாஸ்திரிகள் ஸ்ரீஆசார்யாள் மஹிமைகளைசொல்லக்கேட்டது பரமானந்தம்.

 

ஆடி செவ்வாய் ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாம பாராயணம்

நமது இந்துசமயமன்றம் சார்பில் ஊரப்பாக்கம் எம்ஜி நகர் 1 ஸ்ரீசக்தி வினாயகர் திருக்கோவிலில் அருள்மிகு சர்வமங்களா துர்காம்பிகா சந்நிதியில் நேற்று மாலை (24.07.18) ஆடி செவ்வாய் ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாம பாராயணம், அம்பாளுக்கு த்ரிசதி அர்ச்சனை ஸ்ரீஆசார்யாள் அனுக்ரஹத்துடன் நடைபெற்றது. இந்துசமயமன்றத்தின் நோக்கங்களை அடியேன் விளக்கினேன். தேசிய இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ஸ்ரீராம் கலந்துகொண்டார். ஊரப்பாக்கம் இந்துசமயமன்றம் கிளை தலைவர் திருமதி.பார்வதிமோகன் அவர்களும் திருமதி சுதா கண்ணன் அவர்களும் நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். திருக்கோவில் நிர்வாகத்தினர் திரு.வேணுகோபால் அவர்கள் மற்றும் திரு.முத்துசாமி அவர்கள் மற்றும் அங்கத்தினர்கள் மிகவும் சிறப்பாக ஒத்துழைப்பு நல்கினர். ஸ்ரீசர்வமங்களா பஜன் மண்டலி திருமதி.சாந்தா பாலசுப்பிரமணியம் அவர்கள் குழுவினர் பக்திப்பாடல்கள் பாடினர்.ஸ்ரீமடத்தில் இருந்து ஸ்ரீஆசார்யாள் அனுக்ரஹத்துடன் வழங்கிய ஸ்ரீகாமாக்ஷி அம்பாள் படம், குங்குமப்பிரசாதம், மற்றும் அன்னப்ரசாதம் அனைவருக்கும் வழங்கப்பட்டது. இனிவரும் காலங்களில் இந்த திருக்கோவிலில் இந்துசமயமன்றம் நிகழ்ச்சிகள் நடத்தவும் திருக்கோவில் நிர்வாகத்திடம் அனுமதி கேட்டுள்ளோம்.

 

 

 

ஸ்ரீகாஞ்சி மாமுனிவர் மஹோத்சவ நிகழ்ச்சியின் மூன்றாவது நாள்

நங்கநல்லூர் ஸ்ரீராமமந்திரத்தில் ஸ்ரீகாஞ்சி கைங்கர்ய சபா மற்றும் இந்துசமயமன்றம் சார்பில் நடைபெற்ற ஸ்ரீகாஞ்சி மாமுனிவர் மஹோத்சவ நிகழ்ச்சியின் மூன்றாவது நாள் காலை (22.07.18) ஞாயிறு அன்று ஒன்பது கன்னிகைகளுக்கு நவதுர்கைகளாக, நவசக்திகளாக வரித்து நவ கன்யா பூஜை நடைபெற்றது. ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம் மற்றும் காக்கும் கடவுளாக நம்மை ரக்ஷிக்கும் நம் குருநாதர் ஸ்ரீகாஞ்சி மாமுனிவர் கமலமலரடிகளில் ஷோடசோபசார பூஜை நடைபெற்றது.

டாக்டர் கணேஷ் இன்னிசை முதல்நாள், ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள் ஸ்ரீபாலப்பெரியவாளின் அற்புதமான திட்டம்” சம்ப்ரதாயா” திருப்பதி குழந்தைகளின் இன்னிசை ஸ்ரீமதி.லக்ஷ்மி மாந்தாதா அவர்கள் மேற்பார்வையில் இரண்டாம் நாள்.

இந்துசமயமன்றம் சார்பில் திருக்கோவில் தீபமேற்ற எண்ணெய் வழங்கப்பட்டது

இந்துசமயமன்றம் சார்பில் திருக்கோவில் தீபமேற்ற எண்ணெய் வழங்கும் திட்டத்தின்கீழ் ஸ்ரீமஹாபெரியவர் மஹோத்ஸவத்தில் ஸ்ரீகாஞ்சி கைங்கர்ய சபா அன்பர்கள், மஹோத்ஸவத்திற்கு வந்திருந்த அன்பர்கள் மனமுவந்து அளித்த எண்ணெய் தென்எலப்பாக்கம் ஸ்ரீதேனுபுரீஸ்வரர் திருக்கோவில், நாகை மாவட்டம் சிவனாகரம் ஸ்ரீவாருணீஸ்வரஸ்வாமி திருக்கோவிலில், ஒத்திவாக்கம் ஒத்தீஸ்வரர் திருக்கோவில், திருவண்ணாமலை மாவட்டம் நெற்குணம் ஈஸ்வரர் கோவில், காஞ்சிபுரம் மாவட்டம் நந்திவரம் ஸ்ரீமல்லீஸ்வரர் திருக்கோவில், திருவள்ளுர் மாவட்டம் மாடம்பாக்கம் ஸ்ரீகயிலாசநாதர் திருக்கோவில், கீழ்பசார் ஸ்ரீசிவனார் திருக்கோவில் ஆகியவற்றிற்கு அத்திருக்கோவில் பொறுப்பாளர்களிடம் நேரிடையாக வழங்கப்பட்டது. மற்ற கோவில்களுக்கு நேரில் சென்று திட்ட பொறுப்பாளர் வழங்குவார்.

ஸ்ரீகாஞ்சி மாமுனிவர் மஹோத்சவ நிகழ்ச்சியின் இரண்டாம் நாள்

நங்கநல்லூர் ஸ்ரீராமமந்திரத்தில் ஸ்ரீகாஞ்சி கைங்கர்ய சபா மற்றும் இந்துசமயமன்றம் சார்பில் நடைபெற்ற ஸ்ரீகாஞ்சி மாமுனிவர் மஹோத்சவ நிகழ்ச்சியின் இரண்டாம் நாள் காலை பரமேஸ்வர ஸ்வரூபமான நம் பரமாச்சாரிய ஸ்வாமிகளுக்கு மஹாருத்ர ஜப பாராயணம் மற்றும் அபிஷேகம் வேதோக்தமாக நடைபெற்றது. நூற்று இருபத்தியோருபேர் ஜபிக்க வேண்டிய ஸ்ரீருத்ர ஜபம் இருமடங்கு அன்பர்களால் பக்தியுடன் அந்த வேதநாயகனுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. ஆசார்யர்களை நினைத்து நாம் செய்யும் நல்ல செயல்கள் இருமடங்கு பலனை நமக்கு தரும் என்பது நிதரிசனமானது.ஸ்ரீபெரியவா சரணம். அதன்பிறகு ஸ்ரீமஹாபெரியவருக்கு ஸ்ரீருத்ர த்ரிசதி அர்ச்சனை, ஸ்ரீஷோடசோபசார பூஜை நடைபெற்றது. ஸ்ரீபெரியவா சரணம்!

டாக்டர் கணேஷ் இன்னிசை முதல்நாள், ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள் ஸ்ரீபாலப்பெரியவாளின் அற்புதமான திட்டம்” சம்ப்ரதாயா” திருப்பதி குழந்தைகளின் இன்னிசை ஸ்ரீமதி.லக்ஷ்மி மாந்தாதா அவர்கள் மேற்பார்வையில் இரண்டாம் நாள்.

ஸ்ரீகாஞ்சி மாமுனிவர் மஹோத்சவ நிகழ்ச்சி

நங்கநல்லூர் ஸ்ரீராமமந்திரத்தில் ஸ்ரீகாஞ்சி கைங்கர்ய சபா மற்றும் இந்துசமயமன்றம் சார்பில் நடைபெற்ற ஸ்ரீகாஞ்சி மாமுனிவர் மஹோத்சவ நிகழ்ச்சியின் முதல்நாள் (20.07.18) வெள்ளிக்கிழமை ( ஆஷாட நவராத்திரியில் அஷ்டமி சேர்ந்து வந்த ஆடி வெள்ளிக்கிழமை விசேஷம் அம்பாளுக்கு ) ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாம பாராயணம், அர்ச்சனை, ஸ்ரீமஹாபெரியவாளை அம்பாளாக வரித்து ஷோடசோபசார பூஜை, ஸுவாஸினி பூஜை (16 பேறு என்று அபிராமி பட்டர் சொல்வதை நினைவுகூறும் வகையில் பதினாறு வயதான ஸூமங்கலிகளை அமர்த்தி சாஸ்த்ரோக்தமாக 16 தம்பதிகள் பூஜித்தல், ஸ்ரீபார்வதீ பரமேச்வர அம்சமாக, ஸ்ரீலக்ஷ்மீ நாராயண அம்சமாகவும் வரித்து தம்பதி பூஜை, வடுக பூஜை ( அஷ்டமி வடுக பைரவருக்கு விசேஷ நாள்) என அனைத்து நிகழ்ச்சிகளும் ஸ்ரீகாஞ்சி மாமுனிவர் கருணையால், ஸ்ரீஆசார்யாள் ஸ்ரீ பாலபெரியவர் அனுக்ரஹித்தபடி மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

 

இந்துசமயமன்றம் அறிமுகக்கையேட்டினை ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள் படித்து ஆசீர்வதித்தார்கள்

அடியேன் ஸ்ரீஆசார்யாள் அருளால் தொகுத்த இந்துசமயமன்றம் அறிமுகக்கையேட்டினை ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள் படித்து ஆசீர்வதித்தார்கள். ஸ்ரீகுருப்யோ நம!

 

ஆசிரியர்களுக்கான புத்தாக்க பயிற்சி முகாம்

கடந்த 24.06.18 ஞாயிறு அன்று காஞ்சிபுரம் ஸ்ரீசங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இந்துசமயமன்றம் சார்பில் நடைபெற்ற ஆசிரியர்களுக்கான புத்தாக்க பயிற்சி முகாம். கல்லூரி முதல்வரும் சென்னை பல்கலைக்கழக ஆட்சிமன்றக்குழு உறுப்பினருமான முனைவர் ஸ்ரீகே.ஆர்.வெங்கடேசன் அவர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த இந்த ஆசிரியர்களுக்கான புத்தாக்க பயிற்சி முகாமில் தமிழகம் முழுவதிலும் இருந்து நூற்று இருபது ஆசிரிய ஆசிரியைகள் பங்கேற்றனர். இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் ஸ்ரீ.எஸ்.திருமகன் அவர்கள், காந்தி கிராம் பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் ஸ்ரீ.சேதுராமன் அவர்கள், திரைப்பட நடிகர் ஸ்ரீ அருள்மணி அவர்கள், தாமல் ஸ்ரீ.சரவணன் அவர்கள், சொல்லின்செல்வர் ஸ்ரீபி. என்.பரசுராமன் அவர்கள் மற்றும் அமித் பல்கலைக்கழக துணைவேந்தர் ஸ்ரீ.ஜி.திருவாசகம் அவர்கள் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இரண்டு நாள் பயிற்சி முகாம் நிறைவுவிழா ஸ்ரீகாஞ்சி சங்கர மடத்தில் மாலை ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சாரிய மஹாஸ்வாமிகள் அருளுரை மற்றும் ஆசீர்வாதங்களுடன் நிறைவுபெற்றது. கலந்துகொண்ட ஆசிரியப்பெருமக்களுக்கு நினைவுப்பரிசு, சான்றிதழ், நினைவுக்கோப்பை வழங்கப்பட்டது. அடியேன் மற்றும் ஸ்ரீகுமார் அவர்கள் இந்துசமய மன்றம் சார்பில் பங்கேற்றோம்.