பிக்ஷாவந்தனம் மற்றும் புஸ்தகம் வெளியீடு

இன்று ஸ்ரீகாஞ்சி ஸ்ரீமட ஆழ்வார்பேட்டை முகாமில் இந்துசமயமன்றத்தின் பிக்ஷாவந்தனம் மற்றும் புஸ்தகம் வெளியீடு விஷயமாக ஸ்ரீஆசார்யாள் சந்நிதியில் ப்ரார்த்தித்து ஸ்ரீசரணர்களின் அனுக்ரஹப்ரசாதம் பெற்றோம். நமது சமயமன்ற அன்பரும் மிகச்சிறந்த ஆன்மீக எழுத்தாளருமான ஸ்ரீ.ஜே.கே.சிவன் அவர்களின் சதாபிஷேக பத்திரிகையை சமர்ப்பித்து ஸ்ரீபெரியவா அருட்ப்ரசாதத்தை பெற்றோம். அடியேனும், சகோதரி ஸ்ரீமதி.கௌரி வெங்கட்ராமன் மற்றும் தேசீய இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் ஸ்ரீராம், ஸ்ரீ.ஜே.கே.சிவன் அவர்களும் சாந்தம் ராம்மோகன் அவர்களும் சென்றிருந்தோம்.

ஶ்ரீ திரிபுரசுந்தரி சமேத ஶ்ரீகண்டீஸ்வரர் ஆலயத்தில் விளக்கு பூஜை

ஆடி பூரத்தை முன்னிட்டு வல்லீபுரம் ஶ்ரீ திரிபுரசுந்தரி சமேத ஶ்ரீகண்டீஸ்வரர் ஆலயத்தில் விளக்கு பூஜை இந்து சமய மன்றத்தின் சார்பில் வெகு சிறப்பாக நடை பெற்றது

இந்துசமயமன்றம் பக்தியுடன் அனந்தகோடி நமஸ்காரங்களை சமர்ப்பிக்கிறது

ஸ்ரீகுருப்யோ நம!
“ஸதாஸிவ ஸமாரம்பாம் சங்கராச்சாரிய மத்யமாம்
அஸ்மத் ஆசார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம்!

ஸ்ரீசங்கர பகவத்பாதாசார்ய பரம்பராகத மூலாம்னாய ஸர்வக்ஞ பீடம் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் 70வது ஆசார்ய ஸ்வாமிகள் ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசங்கர விஜயேந்த்ர சரஸ்வதி சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் சன்யாஸ ஸ்வீகரண தினத்தில் ஸ்வாமிகளின் பொற்பதங்களில் இந்துசமயமன்றம் பக்தியுடன் அனந்தகோடி நமஸ்காரங்களை சமர்ப்பிக்கிறது.
அமைப்பாளர்கள் மற்றும் சமயமன்ற அன்பர்கள்.
இந்துசமயமன்றம்
ஸ்ரீகாஞ்சி சங்கர மடத்தின் சமய கலாச்சார பண்பாட்டு சேவை அமைப்பு.

பாரத் மாதா கீ ஜெய்!

பாரதத்தின் பிரதம மந்திரியாக மானனீய ஸ்ரீ.நரேந்திர தாமோதர தாஸ் ஸ்ரீமோதிஜி இரண்டாவது தடவையாக மிகப்பெரிய அளவில் மக்களின் பேராதரவுடன் வெற்றிபெற்று பொறுப்பேற்க உள்ளார். தேச பக்தி, தெய்வ பக்தி, சனாதன ஹிந்து தர்மத்தின்பால் மிகுந்த ஈடுபாடு, பொதுவாழ்வில் நேர்மை,நல்ல திட்டங்களை செயல்படுத்துவதில் உறுதி என பன்முகத்தன்மை கொண்டவர் ஸ்ரீமோதிஜி. பெருமைமிகு ஸ்வயம் சேவக் அவர். அவருடைய தலைமையில் அமையும் அரசு தேசத்தின் நலனில் அதிக அக்கறையோடு மக்களுக்கான நலத்திட்டங்களை முன்னெடுக்கும், உலக அரங்கில் பாரதத்தின் பெருமை பேசப்படும் என எதிர்பார்க்கலாம்.
ஸ்ரீமோதிஜி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை இந்துசமயமன்றம் தெரிவிக்கிறது.

பிரமாண்டமான திருவிளக்கு பூஜை

நேற்று 21.05.2019 செவ்வாய் கிழமை மாலை சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம் கண்ணகி நகர் அருள்மிகு மத்யகாசிஸ்ரீவிஸ்வநாதர் ஆலயத்தில் 1008 மகளிர் பங்கேற்ற பிரமாண்டமான திருவிளக்கு பூஜைக்கு ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீ.சங்கரவிஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் வருகை புரிந்து அருளாசி வழங்கினார். இந்துசமயமன்றம், ஜனகல்யாண் மாடம்பாக்கம், திருக்கோவில் வழிபாட்டுக்குழு, தேசீய இந்து திருக்கோவில் கூட்டமைப்பு, சேவாபாரதி, ஸ்ரீஸ்கந்த சேவா சங்கம், ஸ்ரீசங்கரா கல்வி அறக்கட்டளை மற்றும் ஸ்ரீவாகீசர் அடியார் திருக்கூட்டம் இணைந்து நடத்திய இந்த விழாவிற்கு சுமார் இரண்டாயிரம்பேர் வரை மக்கள் வந்திருந்து பக்தியுடன் பூஜையில் பங்கேற்றனர். அனைவருக்கும் சுவையான அன்னப்ரசாதம் வழங்கப்பட்டது.

சங்கராச்சாரியார் சுவாமிகள் அருள் ஆசியுடன் சென்னை கண்ணகி நகரில் நடைபெற்ற 1008 குத்துவிளக்கு பூஜை

21.5.2019 காஞ்சி காமகோட்டி பீடத்தின் 70 ஆவது சங்கராச்சாரியார் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அருள் ஆசியுடன் சென்னை துரைப்பாக்கம் அடுத்துள்ளது கண்ணகி நகரில் உள்ள மத்திய காசி விஸ்வநாதர் ஆலயத்தில் 1008 பெண்கள் கலந்துகொண்ட குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது

ஏகதின கோடி காயத்ரி ஜபம்

ஸ்ரீகுருப்யோ நம! இன்று 01.05.19 புதன்கிழமை அன்று தாம்பரம் வள்ளுவர் குருகுலம் பள்ளியில் ஏகதின கோடி காயத்ரி ஜபம் பஞ்சமி சேவா டிரஸ்ட், ஸ்ரீசங்கரா டிவி மற்றும் பல தன்னார்வலர்கள், ஸ்ரீமடத்தின் பக்தர்கள் சேர்ந்து மிக விசேஷமாக நடந்தேறியது. நெரூர் ஸ்ரீவித்யா சங்கர ஸ்வாமிகள் விஜயம் செய்து அனுக்ரஹ பாஷணம் செய்தார். இரண்டாயிரம் பேர் சுமாராக கலந்துகொண்டு காயத்ரி ஜபம் சிரத்தையுடன் பண்ணினர்.ஸ்ரீ சங்கரா டிவி நேரடி ஒளிபரப்பு காலை ஆறிலிருந்து எட்டு மணிவரை செய்தனர். அடியேன் வேதமாதாவைப்பற்றி பேசும் பாக்கியம் சிறிது பெற்றேன். இந்த கோடி காயத்ரி ஜபத்திற்கு ஊக்கப்படுத்தி, ஆங்காங்கே ஸஹஸ்ரகாயத்ரி ஜபங்களை நடத்தி எழுச்சியூட்டிய பஞ்சமி ஸ்ரீ.நாகராஜன் அண்ணா, ஸ்ரீராம், ஸ்ரீரமணி ஹால் ஸ்ரீமகேஷ், கவிஞர். சாணுபுத்திரன், இந்துசமயமன்றம் மன்றக்கிளைகள், திருவொற்றியூர் ஸ்ரீசங்கரமடம் ஸ்ரீ.விசு, வேதபாரதி அமைப்பு, மாடம்பாக்கம் ஜனகல்யாண், மற்றும் பல அமைப்புகள் இந்த புனித யக்ஞத்தில் கலந்துகொள்ள அன்பர்களை அழைத்திருந்தனர். உலக நலனை வேண்டி நடத்தப்பெறும் இந்த ஜபயக்ஞம் தொடர்ந்து ஸ்ரீஆசார்யாள் அனுக்ரஹத்துடன் சிறப்பாக அனைத்து பகுதிகளிலும் நடக்க வேதமாதா ஸ்ரீகாயத்ரி மாதாவை ப்ரார்த்திக்கிறேன்.

சிறுவர் சிறுமியர்க்கான நிகழ்ச்சி

20.04.19 அன்று ஆதம்பாக்கத்தில் ஸ்ரீசங்கர கேந்திரத்தில் நடைபெற்ற சிறுவர் சிறுமியர்க்கான நிகழ்ச்சி. இந்துசமயமன்றம், ஆதம்பாக்கம் கைங்கர்ய சபா, காமாக்ஷி ஸ்ரீவித்யா சமிதி இணைந்து நடத்தியது.

ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள் விஜயம்

ஆதம்பாக்கம் ஸ்ரீசங்கர கேந்திரத்தில் ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள் விஜயம். ஸ்ரீசந்த்ரமௌளீச்வர பூஜை தினமும் சிறப்பாக நடக்கிறது. அங்கு நமது சமயமன்றம் சார்பில் வரவேற்பு பேனர் மற்றும் சமயமன்ற பணிகளைப்பற்றிய பேனர். தேசிய இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் சார்பில் ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகளை வரவேற்று வைக்கப்பட்ட பேனர்.