Category: News
Balaperiyava’s birthday
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் 70வது பீடாதிபத்யத்தை அலங்கரிக்கும், “ஸ்ரீபாலப்பெரியவா” என்று பக்தர்களால் அன்புடன் பக்தியுடன் அழைக்கப்பெறும் ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சாரிய ஸ்வாமிகள் அவர்களுக்கு ஸ்வாமிகளின் அவதாரத்திருநாளில் இந்துசமயமன்றம் மற்றும் ஸ்ரீகாஞ்சி கைங்கர்ய சபா ஹ்ருதயபூர்வமான நமஸ்காரங்களை ஸ்வாமிகளின் பொன்னார் திருவடிகளில் சமர்ப்பிக்கிறது.
கூடுவாஞ்சேரி ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் ஸ்வாமிகளுக்கு ஸ்ரத்தாஞ்சலி
Bahrain Sradhangali
கிரோம்பேட்டை குமரன்குன்றத்தில் நமது சகோதர அமைப்பான திருக்கோவில் வழிபாட்டுக்குழு சார்பில் நடந்த ஸ்ரத்தாஞ்சலி நிகழ்ச்சி
சவுதியில் ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளுக்கு நடந்த ஸ்ரத்தாஞ்சலி நிகழ்ச்சி.
ஸ்ரத்தாஞ்சலி ப்ரார்த்தனைக்கூட்டம் நங்கநல்லூர்
இந்துசமயமன்றம் மற்றும் ஸ்ரீகாஞ்சி கைங்கர்ய சபா சார்பில் நேற்று (11.03.2018) ஞாயிறு அன்று நடந்த ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் 69வது பீடாதிபதி ஸ்ரீஸ்ரீஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் ஸ்வாமிகளுக்கு ஸ்ரத்தாஞ்சலி ப்ரார்த்தனைக்கூட்டம் நங்கநல்லூர் ஸ்ரீரமணி ஹாலில் நடைபெற்றது. ஸ்ரீயோகசந்தோஷபீடம் ஸ்ரீஜெயமாருதிதாசஸ்வாமிகள், ஸ்ரீ ஜே.கே.சிவன் ( கிரஷ்ணார்ப்பணம் சேவா சங்கம்) , ஸ்ரீசாணுபுத்திரன், அகில இந்திய ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாம கல்ச்சுரல் பெடரேஷன் ஸ்ரீகணேசன்ஜி, ஸ்ரீராம்ஜி, ஸ்ரீமதி விஜயலக்ஷ்மி, ஊரப்பாக்கம் மன்ற மகளிர் அமைப்பாளர் ஸ்ரீமதி. பார்வதி மோகன், ஸ்ரீமதி சுதாகண்ணன், ஸ்ரீமதி.சாந்தா பாலசுப்ரமண்யன் குழுவினர், ஸ்ரீயோக சந்தோஷபீடம் ஸ்ரீமதி.வாசுகி அமுதபூரணி, திருவாசகம் முற்றோதுதல் குழு ஸ்ரீமதி புஷ்பாதுரை, ஸ்ரீமணிவண்ணன், சிவாய நம ஸ்ரீலக்ஷ்மிநாராயணன், தேசிய இந்து திருக்கோவில் கூட்டமைப்பு ஸ்ரீஸ்ரீராம்ஜி, மாடம்பாக்கம் ஜனகல்யாண் மற்றும் இந்துசமயமன்றம் ராம்ராம் சுந்தரராமன் மற்றும் சாயிராம் குழுவினர், ஸ்ரீரமணி ஹால் அனுஷம் ஸ்ரீமகேஷ், ஸ்ரீகாஞ்சி கைங்கர்ய சபா ஸ்ரீசர்மாஜி , நங்கநல்லூர் சீதாராம சேவா சமாஜம் ஸ்ரீநாராயணசாமி மற்றும் ஸ்ரீஸ்வாமிநாதன் மற்றும் பல அன்பர்கள் மற்றும் ஸ்ரீமடத்தின் பக்தர்கள் கலந்துகொண்டனர். தேவார வழிபாடு, ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம், சத்சங்கம், நங்கநல்லூர் பால சத்சங்கம் குழுவினர் திவ்யநாம பஜனையுடன் ஸ்ரத்தாஞ்சலி சிறப்பாக நடைபெற்றது. இந்துசமயமன்றம் அமைப்பாளர் ஸ்ரீமதி.கௌரி வெங்கட்ராமன் அனைவரையும் வரவேற்க, நந்திவரம் புலவர் க.ஆத்ரேய சுந்தரராமன் விழா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். ஸ்ரீபெரியவா ப்ரசாதத்துடன் விழா பக்திபூர்வமாக நடந்தேறியது. ஜயஜய சங்கர! ஹரஹர சங்கர!
Shradhanjali in Abudhabi
“சிவாய நம! ஸ்ரீபாலப்பெரியவா ஆக்ஞையையேற்று , எங்களின் வேண்டுகோளுக்கு அன்புடன் இசைந்து பாரதத்திலும் கடல்கடந்தும் வாழும் அன்பர்கள், ஸ்ரீபுதுப்பெரியவாளுக்கு ஸ்ரத்தாஞ்சலி நிகழ்ச்சி நடத்தியும் ப்ரார்த்தனைக்கூட்டம் நடத்தியும் ஸ்ரீகுருகைங்கர்யத்தில் ஈடுபட்ட அனைத்து மண்டலிகள், சபாக்கள் போன்ற அமைப்புகளின் உறுப்பினர்கள், சேவார்த்திகள், ஸ்ரீகாஞ்சி மடத்து பக்தர்கள் அனைவருக்கும் ஸ்ரீஆசார்யாள் அருள் பரிபூரணமாக இருக்க ஸ்ரீசரணர்களின் கமலமலரடிகளில் ப்ரார்த்திக்கிறோம். அமைப்பாளர்கள் – இந்துசமயமன்றம் மற்றும் ஸ்ரீகாஞ்சி கைங்கர்ய சபா.”
Shradhanjali in Abudhabi
“இன்று நூறு முறைக்கு மேல் (சுமார் 50 + பேர்கள் , 2 ஆவர்த்திகள்) விஷ்ணு ஸஹஸ்ரநாமம் பாராயணம் , பின்பு
அறுபடை முருகன் திருப்புகழ் , பெரியவாளின் அனுக்ரஹத்துடன்
சிறப்பாக நடந்தேறியது.
நாளையும், நாளை மறுதினமும் இது போன்று ஏற்பாடு ஆகி இருப்பது அதனினும் சிறப்பு.”
ஸ்ரத்தாஞ்சலி ப்ரார்த்தனைக்கூட்டம் வரும் ஞாயிறு அன்று (11.08.2018)
இந்து சமய மன்றம் மற்றும் ஸ்ரீகாஞ்சி கைங்கர்ய சபா சார்பில் ஸ்ரீபாலப்பெரியவாளின் ஆக்ஞைப்படி நங்கநல்லூர் ஸ்ரீரமணி ஹாலில் ஸ்ரீகாஞ்சி காமகோடி் பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய ஸ்வாமிகள் அவர்களுக்கு (புதுப்பெரியவாளுக்கு) ஸ்ரத்தாஞ்சலி ப்ரார்த்தனைக்கூட்டம் வரும் ஞாயிறு அன்று (11.08.2018) அன்று மாலை 4மணியளவில் நடைபெறவுள்ளது. மன்றக்குழுவினரின்திருமுறை பாராயணம், அகில இந்திய ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாம கல்ச்சுரல் பெடரேஷன் சார்பில் ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம், நங்கநல்லூர் அனுஷம் வழிபாட்டுக்குழு ஸ்ரீமகேஷ் அவர்கள் தலைமையில் சத்சங்கம், ஸ்ரீபால சத்சங் குழுவினர், நங்கநல்லூர் சார்பில் நாமசங்கீர்த்தனம், ஸ்ரீஆசார்யாளுக்கு புஷ்பாஞ்சலி, ஹாரத்தி, ப்ரசாதம் என ஸ்ரீபெரியவா அனுக்ரஹத்துடன் நடைபெறவுள்ளது. திரளாக கலந்துகொண்டு ஆசார்யாள் அருள் பெற ப்ரார்த்திக்கிறோம்.
அமைப்பாளர்கள்: புலவர் க.ஆத்ரேய சுந்தரராமன் , ஸ்ரீமதி கௌரி வெங்கட்ராமன்
Shradhanjali for His Holiness Sri Jeyendra Saraswathi Swamigal
Organise a bhajan and Vishnusaharanama Parayana on 11th of march being the Aradhana for HH Shri Jayendra periva.
His Aradhna falls on 11th, 12th and 13th.
But HH Balaswamiji has advised to do the same on 11th in all possible places.
Please send us the photos if possible to hsm72.17@gmail.com
Request by Hindu Samaya Manram