ஸ்ரத்தாஞ்சலி ப்ரார்த்தனைக்கூட்டம் வரும் ஞாயிறு அன்று (11.08.2018)

இந்து சமய மன்றம் மற்றும் ஸ்ரீகாஞ்சி கைங்கர்ய சபா சார்பில் ஸ்ரீபாலப்பெரியவாளின் ஆக்ஞைப்படி நங்கநல்லூர் ஸ்ரீரமணி ஹாலில் ஸ்ரீகாஞ்சி காமகோடி் பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய ஸ்வாமிகள் அவர்களுக்கு (புதுப்பெரியவாளுக்கு) ஸ்ரத்தாஞ்சலி ப்ரார்த்தனைக்கூட்டம் வரும் ஞாயிறு அன்று (11.08.2018) அன்று மாலை 4மணியளவில் நடைபெறவுள்ளது. மன்றக்குழுவினரின்திருமுறை பாராயணம், அகில இந்திய ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாம கல்ச்சுரல் பெடரேஷன் சார்பில் ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம், நங்கநல்லூர் அனுஷம் வழிபாட்டுக்குழு ஸ்ரீமகேஷ் அவர்கள் தலைமையில் சத்சங்கம், ஸ்ரீபால சத்சங் குழுவினர், நங்கநல்லூர் சார்பில் நாமசங்கீர்த்தனம், ஸ்ரீஆசார்யாளுக்கு புஷ்பாஞ்சலி, ஹாரத்தி, ப்ரசாதம் என ஸ்ரீபெரியவா அனுக்ரஹத்துடன் நடைபெறவுள்ளது. திரளாக கலந்துகொண்டு ஆசார்யாள் அருள் பெற ப்ரார்த்திக்கிறோம்.

அமைப்பாளர்கள்: புலவர் க.ஆத்ரேய சுந்தரராமன் , ஸ்ரீமதி கௌரி வெங்கட்ராமன்

ஜயஜய சங்கர! ஹரஹர சங்கர!

ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் 69வது பீடாதிபதி ஸ்ரீஸ்ரீஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் முக்தி அடைந்ததையொட்டி இந்துசமயமன்றம் மற்றும் ஸ்ரீயோகசந்தோஷபீடம், அகிலபாரத அனுமன்சேனா, தேசிய திருக்கோவில் கூட்டமைப்பு சார்பில் ஸ்ரீத்ரிநேத்ர சதுர்புஜ நவக்கிரக யோக ஆஞ்சநேயர் திருக்கோவில் மற்றும் ஸ்ரீபவானி அம்மன் திருக்கோவில்களில் இன்று மாலை மோக்ஷதீபம் ஏற்றி வழிபடப்பட்டது.
ஜயஜய சங்கர! ஹரஹர சங்கர!

இந்து சமய மன்றத்தின் வேண்டுகோள்

ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் 69வது பீடாதிபத்யத்தை அலங்கரித்தவரும், சனாதன இந்து தர்மத்திற்கு தன் ஜீவியகாலமனைத்தும் ஒப்பற்ற தொண்டாற்றியவரும், ஸ்ரீகாஞ்சி மாமுனிவரின் நேரடி சிஷ்யராக வேத வைதீக தர்ம பரிபாலனத்திற்கு அரும்பாடுபட்டவரும், எப்போதும் அருள்ததும்பும் புன்னகையுடன் கருணாமூர்த்தியாய் விளங்கி ஸ்ரீமடத்தை வழிநடத்தியவரும், பாரத தேசமெங்கும் திவ்ய யாத்திரை பலமுறை செய்து பல திருக்கோயில்களை புனருத்தாரணம் செய்து ஹிந்து மத எழுச்சிக்கு வித்திட்டவரும், ஏழை எளிய மக்களின் துயர்துடைக்க மருத்துவமனை, பள்ளிகள், சேவை மையங்கள் நிறுவி அளப்பரிய சேவை செய்தவரும், ஞான பாஸ்கரராய், பன்மொழி வித்தகராய் , திகழ்ந்தவரும், ஸ்ரீபாலப்பெரியவர் ஸ்ரீவிஜயேந்திர ஸரஸ்வதி சத்குருவை நமக்கு வழிகாட்ட அனுக்ரஹித்த ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீஜெயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சாரிய மஹாஸ்வாமிகள் இன்று மஹாசமாதியடைந்துவிட்டார்கள். இந்து தர்மத்திற்கு நம்மாலான சேவையை செய்வதும், ஸ்ரீபாலப்பெரியவர்கள் அனுக்ரஹத்துடன் ஸ்ரீமடத்தின் கைங்கர்யத்தில் பங்குகொள்வதுமே ஸ்வாமிகளுக்கு நாம் செய்யும் பாதசேவையாகும். அனைத்து ஸ்ரீமடத்தின் பக்தர்களுடன், துயரத்தில் பங்குகொள்ளும், இந்துசமயமன்றத்தின் அமைப்பாளர்கள் மற்றும் மன்றக்கிளைகள்.

ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடம்.

இந்துசமயமன்றம் சார்பில் நோட்டுபுத்தகங்கள் எழுதுபொருட்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது

இந்துசமயமன்றம் மற்றும் ஸ்ரீவரசித்தி வினாயகர் தேவஸ்தானம் சார்பில் பள்ளிக்குழந்தைகளுக்கு தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறவேண்டி சிறப்பு ஸ்ரீலக்ஷ்மிஹயக்ரீவர் மற்றும் ஸ்ரீமஹாஸரஸ்வதி பூஜை ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள் அனுக்ரஹத்துடன் இன்று 20.02.2018 மாலை 5.30.மணியளவில் ஆரம்பித்து டிபன்ஸ்காலனி ஸ்ரீவரசித்தி வினாயகர் கோவிலில் நடைபெற்றது. பூஜை மற்றும் ப்ரார்த்தனை வழிபாட்டினை அடியேன் நடத்த திருவருளும் குருவருளும் கூட்டியது. தங்கள் குழந்தைகளை அழைத்துக்கொண்டு ஆர்வமாக பல பெற்றோர் வந்திருந்தனர். ஸ்ரீஹயக்ரீவர் மற்றும் ஸ்ரீஸரஸ்வதிதேவி மஹிமைகளைப்பற்றி அடியேன் சிறிது நேரம் சொல்லி மாணவ மாணவியரிடம் வினாவிடை நடத்தினேன். பிறகு பூஜை நடந்தது. மிகவும் அதிகமான அளவில் மக்கள் மற்றும் மாணவ மாணவியர் வந்திருந்தனர். அனைவருக்கும் ஸ்ரீயோகசந்தோஷபீடம் ஸ்ரீஜெயமாருதிதாச ஸ்வாமிகள் அருளாசியுடன் ரக்ஷை கட்டி ஆசீர்வதித்தார். இந்துசமயமன்றம் சார்பில் நோட்டுபுத்தகங்கள் மற்றும் ஆலய நிர்வாகத்தினர் ஸ்ரீகோவிந்தராஜன் அவர்கள் பேனா மற்றும் ஆலய பொருளாளர் ஸ்ரீலக்ஷ்மிபதி அவர்கள் பென்சில் ரப்பர் என எழுதுபொருட்கள் வழங்க பிரசாதத்துடன் பூஜை இனிதே நடந்தேறியது. ஸ்ரீகாஞ்சி மாமுனிவர் கருணையால் நடந்த இந்நிகழ்ச்சி பல ஊர்களிலும் நடக்க இந்துசமயமன்றம் முயற்சிகள் செய்கிறது.

கிரிவலப்பாதயாத்திரை

ஸ்ரீகாஞ்சி் காமகோடி பீடத்தின் ஆன்மீக சமயச்சேவை அமைப்பான இந்து சமய மன்றம் சார்பில் இன்று தனுர்மாத ஸோமவார பௌர்ணமியையொட்டி (மிகவும் விசேஷமானது) தொண்டை நாட்டு சிவஸ்தலங்களில் தனித்தன்மை வாய்ந்ததும், வேதமே மலையாய் நின்று ஈஸ்வரனை வணங்கித்தாங்குவதும், சைவத்தின் நான்கு பெருமக்களாலும் (சம்பந்தர்,அப்பர்,சுந்தரர்,மணிவாசகர்) பாடப்பெற்றதும் பல சித்தபெருமக்களால் ஆராதிக்கப்படுவதும் ஆன திருக்கழுக்குன்றத்து சிவபெருமானை உலகநலன் வேண்டி ப்ரார்த்தித்து ஸ்ரீயோகசந்தோஷபீடம் Dr.ஸ்ரீஜெயமாருதிதாசஸ்வாமிகள் அருட்தலைமையில் முதலாம் கிரிவலப்பாதயாத்திரை திரளான அன்பர்களுடன் மிகச்சிறப்பாக ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள் அனுக்ரஹத்துடன் நடைபெற்றது. அன்பர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. அனைவரும் ஸ்ரீத்ரிநேத்ர சதுர்புஜ நவக்கிரக யோக ஆஞ்சநேயர் திருக்கோவிலில் இருந்து புறப்பட்டு ஸ்ரீராம ஆஞ்சநேயர் ஆலயத்தில் யாத்திரை நிறைவு பெற்றது. சிவபுராணம், திருவாசகம் திருக்கழுக்குன்றப்பதிகம், சிவநாமாவளி மலையெங்கும் எதிரொலிக்க மலைவலம் நடந்தேறியது.புலவர்.சிவ.அருள்மணி அவர்கள் புதுவருட நாட்காட்டி அனைவருக்கும் அளித்து வாழ்த்தினார். ஸ்ரீஜயமாருதிதாச ஸ்வாமிகள் ஆத்மாவைப்பற்றிய சத்சங்கம் நிகழ்த்தினார். இந்துசமயமன்றம் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. திருக்கழுக்குன்றத்தில் புது கிளை ஆரம்பிக்க ஏற்பாடுகள் நடைபெற உள்ளது.