இந்துசமயமன்றத்தின் புரவலரும், ஸ்ரீசங்கர சனாதன சேவா சமஸ்தானத்தின் டிரஸ்டியும், நமக்கு பளிங்கில், மரத்தில் ஸ்ரீமஹாபெரியவா விக்ரஹம் பண்ணித்தந்து, சிவனாரகரத்தில் ஸ்ரீமஹாபெரியவாளுக்கு ஒரு மண்டபம் கட்ட உதவிய ப்ரம்மஸ்ரீ.வெங்கட்ராமய்யர் (புதுதில்லி) அவர்களின் சதாபிஷேக வைபவம் 25.04.24 அன்று குருவாரத்தில் சிவனாரகரத்தில் அவரது இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்துசமயமன்ற அமைப்பாளர்கள், பல்வேறு சேவா காரியகர்த்தர்களுடன், இந்துசமயமன்ற மாநில அமைப்பாளர்கள் புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன் மற்றும் ஸ்ரீமதி.கௌரி வெங்கட்ராமன் ஆகியோர் ஸ்ரீஆசார்ய ஸ்வாமிகள் அனுக்ரஹித்த ப்ரசாதங்களை வழங்கி, இந்து சமய மன்றம் சார்பில் கௌரவித்து ஆசி பெற்றனர். இந்துசமயமன்றம், ஆயிரம் பிறைகண்ட ஸதாபிஷேக நாயகரை போற்றி மகிழ்கிறது.
Category: News
அனுஷத்தின் நாயகருக்கு லோகக்ஷேமத்தை முன்னிட்டு வேதோக்தமாக ஆவஹந்தி ஹோமம் 26.04.24
அனைத்து அன்பர்களுக்கும் இனிய ‘குரோதி’ தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
மனதினில் மகிழ்ச்சி பொங்க,
புவிதனில் வளர்ச்சி ஓங்க,
கவின்கலை, கவிதையெல்லாம்
தமிழினில் பெருக,
எங்கள் தாயகம் என்றும் சிறக்க,
சனாதன சக்தி வெல்ல,
பிறந்திடும் குரோதி வருடம் பெருமையாய் இருக்க வேண்டி, கச்சிமாமுனிவர் நின் தாள் பற்றினேன் கருணை புரிவாய்!
அனைத்து அன்பர்களுக்கும் இனிய ‘குரோதி’ தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன்,
மாநில அமைப்பாளர்,
இந்துசமயமன்றம்.
ஸ்ரீப்ராண்ம்பிகை சமேத ஸ்ரீதர்ப்பாரண்யேச்வர ஸ்வாமி திருக்கோவில்
ெங்கல்பட்டு மாவட்டம் கொண்டமங்கலம் கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலித்துவரும் ஸ்ரீப்ராண்ம்பிகை சமேத ஸ்ரீதர்ப்பாரண்யேச்வர ஸ்வாமி திருக்கோவிலில் சனிப்ரதோஷ காலத்தில் மிகச்சிறப்பாக அபிஷேக ஆராதனைகளும் புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன், இந்துசமயமன்ற மாநில அமைப்பாளர் அவர்களின் சிறப்பு சொற்பொழிவும் நடைபெற்றது. டாக்டர்.சிவசிதம்பரநாதன், ஸ்ரீ.மணிவண்ணன், அனுஷ அமிர்தம் ஸ்ரீ.இராமச்சந்திரன் ஆகியோர் வருகைபுரிந்தனர். திருக்கோவில் பூஜகர் சிவனடியார்.ஸ்ரீ.எல்லப்பன் தம்பதியினர் இத்திருக்கோவிலை சிறப்பாக பராமரித்து வருகின்றனர். இந்துசமயமன்றம் சார்பில் திருக்கோவில் தீபமேற்ற நல்லெண்ணெய் வழங்கப்படுகிறது.
இந்துசமயமன்றத்தின் 2023-24 வருஷத்திய முக்கிய நிகழ்வுகள், கல்வி, சமய, கலாச்சார, பண்பாட்டு,சேவைப்பணிகள் பற்றிய ஆண்டறிக்கை இன்று (04.04.24) வியாழக்கிழமை ஸ்ரீசரணர்களின் பொற்பதங்கள் பணிந்து சமர்ப்பிக்கப்பட்டது
ஸ்ரீகுருப்யோ நமஹ!
இந்துசமயமன்றத்தின் 2023-24 வருஷத்திய முக்கிய நிகழ்வுகள், கல்வி, சமய, கலாச்சார, பண்பாட்டு,சேவைப்பணிகள் பற்றிய ஆண்டறிக்கை இன்று (04.04.24) வியாழக்கிழமை ஸ்ரீசரணர்களின் பொற்பதங்கள் பணிந்து சமர்ப்பிக்கப்பட்டது. இந்துசமயமன்றத்தின் ஒவ்வொரு பணிக்கும் உள்ளிருந்து இயக்கியதுடன், அபார கருணையுடன் ஆசியும் வழங்கிய ஸ்ரீஸ்ரீஸ்ரீபெரியவாளை இந்துசமயமன்றம் பன்முறை பணிந்தேத்துகிறது.
குருவருட்பணியில்,
புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன்,
கௌரி வெங்கட்ராமன்,
மற்றும்
முனைவர்.கலைராம.வெங்கடேசன்
அமைப்பாளர்கள்
உடன் ஆடிட்டர் ஸ்ரீகாந்த்ஜி
ஆவஹந்தி ஹோமம்
ஸ்ரீதர்மஸாஸ்தா ஜயந்தி விழா
அகிலபாரத அய்யப்ப சேவா சங்கம் சார்பில் ஸ்ரீதர்மஸாஸ்தா ஜயந்தி விழா மறைமலைநகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (31.03.24) அன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக மாலை பல்வேறு ஆன்மீக அமைப்புகள் பங்கேற்ற பேரணி நகர்வலம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இரண்டாம் ஆண்டாக நமது இந்துசமயமன்றமும் இதில் பங்கேற்றது. புதிதாக செய்யப்பெற்ற ஹம்ஸ வாகனத்தில் நமது ஸௌலப்ய குருநாதர் ஸ்ரீகாஞ்சி மஹாபெரியவர் ஆரோகணித்தபடி பக்தி கோஷத்துடன் நகர்வலம் திரளான பக்தர்களுடன் கயிலாய வாத்யம், சங்கொலியுடன் வந்து அருள்பாலித்தார்.நேர்த்தியாக விழா ஏற்பாடுகளைச்செய்த அய்யப்ப சேவா சங்கத்திற்கு மிக்க நன்றி!
ஸ்ரீஸ்ரீஸ்ரீஆசார்ய ஸ்வாமிகளின் பொற்பதங்களில் பக்தியுடன் அனந்தகோடி நமஸ்காரங்களை இந்துசமயமன்றம் சார்பில் சமர்ப்பிக்கிறோம்.
மூலாம்னாய ஸர்வக்ஞபீடம் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் எழுபதாவது பீடாதீச்வரரும், ஜகத்குருநாதருமான ஸ்ரீஸ்ரீஸ்ரீசங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சார்ய மஹாஸ்வாமிகளின் 56வது ஜயந்தித்திருநாளில் ஸ்ரீஸ்ரீஸ்ரீஆசார்ய ஸ்வாமிகளின் பொற்பதங்களில் பக்தியுடன் அனந்தகோடி நமஸ்காரங்களை இந்துசமயமன்றம் சார்பில் சமர்ப்பிக்கிறோம்.
புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன்,
கௌரி வெங்கட்ராமன்,
முனைவர்.கலைராம.வெங்கடேசன்
மாநில அமைப்பாளர்கள் மற்றும் சமயமன்ற அன்பர்கள்.
இந்துசமயமன்றம்,
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய,கலாச்சார, பண்பாட்டு சேவை அமைப்பு.
கோபூஜை
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகில் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீபாலபெரியவர்கள் ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சார்ய மஹாஸ்வாமிகள் அவதரித்த தண்டலம் கிராமத்தில் ஸ்ரீசங்கரவேதபாடசாலையில் நடைபெற்றுவரும் வேதோக்தமான ஸ்ரீஸ்வாமிகளின் 56வது ஜயந்தி மஹோத்ஸவத்தையொட்டி மூன்றாவது வருஷமாக இன்று 05.03.24 செவ்வாய்கிழமை இந்துசமயமன்றம் சார்பில் தண்டலம் ஊர்பொதுமக்கள் ஆதரவுடன் வெகுசிறப்பாக நடைபெற்ற கோபூஜை சில காட்சிகள்.