முழுமுதற்கடவுளான கணநாதனை வினாயகசதுர்த்தி நன்னாளில் வணங்குவோம்! வாழ்வில் வளம் பெறுவோம்!
இந்துசமயமன்றம் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய,கலாச்சார, பண்பாட்டு சேவை அமைப்பு.

அலைகடலெனத்திரண்டுவந்து ஆனந்தமாய் ஆயனை, மாயனை, வடமதுரை மைந்தனை நாவார நாராயணீயத்தால் பாடிப்பரவிய ஆய்ப்பாடி கோபிகைகள்.
இங்கே ஆண்பெண் பேதமில்லை, ஜாதிமத வித்யாசமில்லை. உயர்வு தாழ்வு இல்லை. பெரியவர், சிறியவர் இல்லை. பரமனிடம் பக்தி மட்டுமே ப்ரதானம். நாராயணனே நமக்கே பறை தருவான் என்கிற நம்பிக்கையே ஊன்றுகோல். எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உனக்கே நாம் ஆட்செய்வோம் என சங்கல்பித்தவர்கள் இவர்கள். சர்வம் க்ருஷ்ணார்ப்பணம்!











கோகுல்தாமில் மிகக்கோலாகலமாக ஸ்ரீருக்மிணீ க்ருஷ்ண விவாஹம் நடந்தேறிய காக்ஷிகள்.
சீர்வரிசைகள், சீர் பக்ஷணங்கள், கல்யாண புடவை, வேஷ்டி செட்கள், இனிப்புகள், புஷ்ப ஹாரங்கள் என பக்தர்கள் கொண்டுவந்து குவித்தனர். பாகவத சம்ப்ரதாயத்தை அடியொற்றி லகுவாக நடத்தப்பெற்ற இந்த தெய்வத்திருமணத்தை ஸ்ரீமதி.சாந்தா பாலசுப்ரமண்யன் குழுவினர் அருமையாக நடத்தினர்.





















இந்துசமயமன்றத்தின் ஆசிரியர் பயிற்சி முகாம் சென்னையையடுத்த பூவிருந்தவல்லி நசரத்பேட்டை ஸ்ரீஜெயஜெய சங்கரா சர்வதேசப்பள்ளியில் ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள் அருளாணையின்வண்ணம் இன்று 24.08.24 சனிக்கிழமை துவக்கப்பட்டது. இந்த நிகழ்வில் இந்துசமயமன்ற மாநில அமைப்பாளர்கள் புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன், ஸ்ரீமதி.கௌரி வெங்கட்ராமன் மற்றும் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீமதி.நீரஜா ஆகியோர் கலந்துகொண்டனர். பள்ளி முதல்வர் ஸ்ரீமதி.மணமல்லி அவர்கள் கௌரவித்தார். நிகழ்ச்சி உரைகளை ஸ்ரீ.பி.என்.பரசுராமன் மற்றும் ஸ்ரீ.வைத்யநாதன் ஆகியோர் நிகழ்த்தினர். ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை இந்த பயிற்சி முகாம் மேற்படி பள்ளியில் நடைபெறும்.





கோவிந்த பட்டாபிஷேகத்தில் 88 வகையான இனிப்புகள் ஸ்ரீக்ருஷ்ணனுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. அவ்வளவு கோபிகைகள் ஸ்ரீபெரும்புதூருக்கு வந்து சமர்ப்பித்தது பெரும்பாக்கியம். இந்த யக்ஞத்தில் 18 வகையான பழங்கள், நூற்றியோரு நைவேத்யம், சித்ரான்னங்கள் என துவாரகையின் மஹாராஜாவிற்கு சமர்ப்பிக்கப்பட்டது. உங்கள் அனைவரின் தூய பக்தியே இத்தனையையும் ஸாத்யமாக்கி இருக்கிறது.









சுமார் 550க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர் இந்த யக்ஞத்தில்.
நமது சூளைமேடு இந்துசமயமன்ற அமைப்பாளர் ஸ்ரீமதி.ஜெயலலிதா ஸ்ரீனிவாசன் மற்றும் மறைமலைநகர் இந்துசமயமன்றம் ஸ்ரீமதி.சத்யபாமா கோபாலன் வழிநடத்தினர். இந்துசமயமன்ற அன்பர்.ஸ்ரீமதி.சாந்தா பாலசுப்ரமண்யன் அவர்கள் குழுவினர் ஸ்ரீருக்மிணீ கல்யாண வைபவத்தை நடந்தினார்கள்.



























