08.01.24 திங்கட்கிழமை புதுப்பெருங்களத்தூர் நவஜீவன் முதியோர் மற்றும் கண்பார்வையற்றோர் இல்லத்தில் ஸ்ரீமஹாபெரியவர் ஆராதனையை முன்னிட்டு சிறப்பு ப்ரார்த்தனை மற்றும் பொங்கலுக்கு புத்தாடை வழங்கி உணவளிக்கும் நிகழ்ச்சி ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள் அருளாசியுடன் சிறப்பாக நடைபெற்றது.
இந்துசமயமன்றம், ஸ்ரீகாஞ்சி கைங்கர்ய சபா சார்பில் ஸ்ரீமஹாபெரியவர் வீதியுலா, விசேஷ அனுஷ பூஜை
07.01.24 ஞாயிற்றுக்கிழமை மாலை ஆதம்பாக்கம் சாந்தி நகர் 11 வது தெரு ஸ்ரீமதி.பிருந்தா மாமி அவர்கள் இல்ல வளாகத்திலிருந்து பாண்டுரங்கன் ரகுமாயி திருக்கோவிலை பிரதக்ஷிணமாகச்சுற்றி மஹாபெரியவர் வீதியுலா ஹரஹர சங்கர ஜய கோஷத்துடன் நடைபெற்றது. பிறகு ஸ்ரீமஹாபெரியவர் பூஜா க்ரமப்படி வெகு விமரிசையாக அனுஷ பூஜை நடைபெற்றது. ஸ்ரீமஹாபெரியவரின் ஆராதனை சமயத்தில் நடைபெற்ற இந்த பூஜையில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். இரவு மஹாபெரியவர் அருட்ப்ரசாதம் வழங்கப்பட்டது.
“மஹாபெரியவா சரணம்!”
இந்துசமயமன்றத்தின் 2024 ம் ஆண்டு இனிய பொங்கல் விழா
07.01.24 ஞாயிற்றுக்கிழமை காலை கலிவந்தப்பட்டு பழங்குடி மக்களோடு மூன்றாவது ஆண்டாக பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள் அருளாசியோடு கடந்த ஆறு ஆண்டுகளாக இந்தப்பணி வெவ்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்துசமயமன்ற மாநில அமைப்பாளர்கள் புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன் மற்றும் ஸ்ரீமதி.கௌரி வெங்கட்ராமன் ஆகியோர் விழாவில் கலந்துகொண்டனர். ஸ்ரீகாஞ்சிகைங்கர்யசபா ஸ்ரீ.வெங்கட்ராமன், வஞ்சுவாஞ்சேரி ஸ்ரீகிருஷ்ணன் கோவில் டிரஸ்டி ஸ்ரீமதி.புவனேஸ்வரி, அனுஷ அமிர்தம் ஸ்ரீ.இராமச்சந்திரன், பேராசிரியர்.டாக்டர்.சிவசிதம்பரநாதன்,நந்திவரம் சிவஸ்ரீ.நடராஜ குருக்கள்,ஸ்ரீ.சிவகுமார் தம்பதிகள், ஸ்ரீ.ஷ்யாம், தேசீய இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் ஸ்ரீ.சாய்ராம், கலிவந்தப்பட்டு முன்னாள் தலைவர் ஆகியோர் விழாவில் பங்கேற்றனர்.
பழங்குடி மக்களின் முன்னேற்றம் தேசத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பதையும், அவர்களின் தொன்மையான வரலாறு மற்றும் கல்வி கற்கவேண்டிய அவசியத்தையும், பெண் கல்வி மற்றும் சுயதொழில் பயிலவேண்டிய அவசியத்தையும், இந்துசமயமன்றம் சார்பில் பழங்குடி மக்களுக்கு ஆற்றும் பணிகள் குறித்தும் இந்துசமயமன்ற மாநில அமைப்பாளர் புலவர் க.ஆத்ரேய சுந்தரராமன் விளக்கினார். ஆர்வமுள்ள குழந்தைகளை கல்லூரிவரை சேர்த்து இந்துசமயமன்றம் சார்பில் படிக்கவைத்து வருவதை குறிப்பிட்டார்.உலக நலன் வேண்டி கூட்டுப்ரார்த்தனையுடன் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துடன், புத்தாடைகள் வழங்கப்பட்டது. அருமையான சுவையான மதிய உணவு அனைவருக்கும் வழங்கப்பட்டது. இந்த வருட பொங்கல் விழா ஸ்ரீகாஞ்சி மஹாபெரியவரின் ஆராதனை சமயத்தில் அவர் தோற்றுவித்த இந்துசமயமன்றம் சார்பில் கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மஹாபெரியவரின் ஆராதனை புண்ய நன்னாளில்
ஸ்ரீகுருப்யோ நம!
காஞ்சியின் கருணை தெய்வம் மஹாபெரியவரின் ஆராதனை புண்ய நன்னாளில் உலகநலனை வேண்டி ஸ்ரீசரணர்களின் திருவடிகளில் அனந்தகோடி நமஸ்காரங்களுடன் ப்ரார்த்திக்கிறோம்.
புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன்,
முனைவர்.கலைராம.வெங்கடேசன்
கௌரி வெங்கட்ராமன்
இந்துசமயமன்றம்,
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய,கலாச்சார, பண்பாட்டு,சேவை அமைப்பு
(1972 ல் ஸ்ரீகாஞ்சி மஹாபெரியவரால் தோற்றுவிக்கப்பெற்ற சமயச்சேவை அமைப்பு)

இந்துசமயமன்றம்
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய,கலாச்சார, பண்பாட்டு,சேவை அமைப்பு
மற்றும்
ஸ்ரீகாஞ்சி கைங்கர்ய சபா
ஸ்ரீகாஞ்சி மஹாபெரியவர் ஆராதனை சிறப்பு பூஜை
நாள்: 07.01.24 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணி
இடம்: பிருந்தா மாமி இல்லம்,
5/2, பதினோராவது தெரு, சாந்தி நகர்,ஆதம்பாக்கம்.
நிகழ்ச்சி நிரல்:
07.01.24 ஞாயிறு மாலை 5.00 மணி
ஸ்ரீமஹாபெரியவர் வீதியுலா
6.00 மணி
ஸ்ரீமஹாபெரியவருக்கு விசேஷ அபிஷேகம் மற்றும் பூஜைகள்
8.00 மணி. மஹா தீபாராதனை, அருட்ப்ரசாதம்.
குருவருள் பெற வருக!

பர்வதமலை அன்னதானம்
இந்துசமயமன்றம் அன்னதானம்
வருடந்தோறும் மார்கழி ஒன்றாம் தேதி பர்வதமலை கிரிவலம். மலையடிவாரகிராமமான கடலாடியில் வருடந்தோறும் அன்னதானம் இந்துசமயமன்றம் சார்பில் நடந்து வருகிறது.இந்த வருட அன்னதானம் மிகச்சிறப்பாக 17.12 23 ஞாயிற்றுக்கிழமை அன்பர்களின் ஒத்துழைப்புடன் மாடம்பாக்கம் ஜனகல்யாண் பேராதரவுடன் நடந்தது. இந்துசமயமன்ற மாநில அமைப்பாளர் புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன் தலைமையில் தேசீய இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் தேச்ய செயலாளர் டாக்டர்.க.ஸ்ரீராம், தாம்பரம் தமிழ்ச்சங்க செயலர் ஆடிட்டர் ஸ்ரீகாந்த்ஜி, சத்யபாமா நிகர்நிலைப்பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் சிவசிதம்பரநாதன்,அனுஷ அமிர்தம் திரு.க.இராமச்சந்திரன், ஸ்ரீநந்தீஸ்வரர் உழவாரப்பணிமன்றம் ஸ்ரீ.மணிவண்ணன் மற்றும் பல அன்பர்கள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை கடலாடி சமயமன்ற திரு. G.V.ஜெயவேலு அவர்கள் மிகச்சிறப்பாக செய்திருந்தார்.
ஸ்ரீமந்நாராயணீய பாராயணம்
ஸ்ரீமந்நாராயணீய பாராயணம், குருவாயூரில் 02.12.23 சனிக்கிழமை அன்று நமது பாராயணக்குழுவினரால் வெகு விமரிசையாக நடந்தேறியது. சென்னை மற்றும் திருச்சி அன்பர்கள் சுமார் எழுபது பேர் கலந்துகொண்ட பாராயணம் ஸ்ரீசங்கர நிலையத்தில் நடந்தது. முன்னதாக 01.12.23 அன்று கேரள முக்ய க்ஷேத்ர தரிசனத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்துசமயமன்றம் சார்பில் அன்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்! தோன்றாத்துணையாக வழிநடத்திய காஞ்சி மஹாபெரியவரின் மலரடிகளில் அனந்தகோடி நமஸ்காரங்கள். ஸ்ரீகுருவாயூரப்பனுக்கு கோடானுகோடி நமஸ்காரங்கள்.












































