மிகப்பழைமை வாய்ந்த சோழநாட்டு சைவத்திருத்தலங்களில் ஒன்றும், வருணபகவானால் பூஜிக்கப்பட்ட பெருமை வாய்ந்ததும், அதிசயமான நடராஜர் வீற்றிருக்கும் கோனேரிராஜபுரத்திற்கு மிக அருகாமை சிவத்தலமும், ஸ்ரீகாஞ்சி மஹாபெரியவர் மற்றும் ஸ்ரீபுதுப்பெரியவரால் பூஜிக்கப்பட்ட திருத்தலமும் ஆன சிவனார் அகரம் ஸ்ரீஜலமுகளாம்பிகை சமேத ஸ்ரீவாருணீச்வரஸ்வாமி திருக்கோவிலில் ஏகாதச ருத்ராபிஷேகம் ஸ்ரீகாஞ்சி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் அருளாசியுடன் வருகிற 11.07.22 திங்கட்கிழமை சோமப்ரதோஷ நன்னாளில் வேதோக்தமாக நடைபெற உள்ளது. கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு சென்னையில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டபோது ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதீச்வரரான ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளை இந்துசமயமன்றம் சார்பில் ப்ரார்த்திக்க ஸ்ரீஸ்வாமிகள் ஏகாதச ருத்ராபிஷேகம் விசேஷ ஸ்தலமான சிவனார்அகரத்தில் செய்ய பணித்தருள அதன்படியே மிக விமரிசையாக நடந்த அந்த அபிஷேகம் பூர்த்தியானதும் அன்று மாலையே மழை வருஷித்தது. தண்ணீர் பஞ்சம் தீர்ந்தது. அடுத்த வருஷமும் அபிஷேகம் வெகுசிறப்பாக நடைபெற்று மாலை மழை பெய்தது கண்கூடு.கொரானோவினால் தடைபட்ட அபிஷேகம் இந்த வருடம் சிறப்பாக ஈசனருளால் நடைபெற இந்துசமயமன்றம் சார்பில் முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.இந்த புனித கைங்கர்யத்திற்கு அனைவரையும் பங்கு கொள்ள அழைக்கிறோம்.
இந்துசமயமன்றம்
மற்றும் சிவனார் அகரம் கிராமப்பொதுமக்கள்.
அபிராமி அந்தாதி பாராயணம் – ஸ்ரீநந்தி சித்தர் பீடம் திருவாகமுற்றோதுதல் குழு (இந்துசமயமன்றம்)
அரிசித் திட்ட சேகரிப்புக்காக 25பக்கெட் மற்றும் உண்டியல் வழங்கப் பட்டது
சேவா பாரதி, தாம்பரம் மாவட்டம் மூலம் கூடுவாஞ்சேரி இந்து சமய மன்றத் துக்காக, காஞ்சி மகாஸ்வாமிகள் அறிவுறுத்திய பிடி அரிசித் திட்ட சேகரிப்புக்காக 25பக்கெட் மற்றும் உண்டியல் வழங்கப் பட்டது. காஞ்சி மகாஸ்வாமிகளின் வைகாசி அனுஷ நட்சத்திரத் தன்று (17/05/2022, செவ்வாய்) நடைபெற்ற இந்நிகழ்வில் இந்து சமய மன்றம் முதல் கிளை நிறுவனரான ராம் ராம் ஶ்ரீ சுந்தர ராமன் ஜி கலந்து கொண்டு மன்றம் சார்பாக மேற்படி பொருட்களை பெற்றுக் கொண்டார். உடன் சேவா பாரதி மாவட்ட பொருளாளர் ஶ்ரீ சங்கர் ஜி, RSS மாவட்ட கோ சேவா பொறுப்பாளர் ஆடிட்டர் ஶ்ரீகாந்த் ஜி, ராம் சேவா இயக்க மாவட்டத் தலைவர் சசிகுமார், காமதேனு சாரிடீஸ் நிறுவன அறங்காவலர் சங்கர கிருஷ்ணன் ஜி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
அனுஷ பூஜை
மாத அனுஷத்தின் அன்னதானம்
அனுஷ அமிர்தம் சார்பில் வழக்கம்போல் இந்த மாதமும் வைகாசி மாத அனுஷத்தின் அன்னதானம் (பாதூஷா,புளியோதரை,உருளைக்கிழங்கு பொரியல்,வடை,வாழைப்பழம்,தண்ணீர் பாட்டில்) இருளர் பகுதியில் நடைபெற்றது. நமது சமயமன்ற திருக்கோவில் எண்ணெய் பொறுப்பாளர் ஸ்ரீ.க.இராமச்சந்திரனும், யஉபயதாரர் ஸ்ரீ.சாய்ராமும் ஸ்ரீகாஞ்சிப்பெரியவர் திருவடிகளில் உலகநன்மை வேண்டி ப்ரார்த்தனை செய்து அமுதளித்தனர்.
இந்துசமயமன்றம், ஸ்ரீகாஞ்சி கைங்கர்ய சபா ஆதம்பாக்கத்தில் நடத்திய ஸ்ரீலலிதா மஹாதிரிபுரசுந்தரி, தீபலக்ஷ்மி பூஜை
ஸ்ரீசங்கர ஜயந்தி
ஸ்ரீசங்கர ஸ்ரீராமானுஜ ஜயந்தி விழா
இன்று 6.5.22 வெள்ளிக்கிழமை மறைமலைநகரில் பிராமணர்கள் சங்கமும் இந்துசமயமன்றமும் இணைந்து ஐயப்பன் கோவிலில் நடத்திய ஸ்ரீசங்கர ஸ்ரீராமானுஜ ஜயந்தி விழா. மகளிர் மண்டலி சார்பில் ஸ்ரீவிஷ்ணு-ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாம பாராயணம், தோடகாஷ்டகம், மற்றும் புலவர் க.ஆத்ரேய சுந்தரராமனின் சிறிய சொற்பொழிவு, ஸ்ரீசங்கரருக்கும் ஸ்ரீராமானுஜருக்கும் அஷ்டோத்ர பூஜை, மஹா ஹாரத்தி, ப்ரசாத விநியோகம் சிறப்பாக நடைபெற்றது. பிராமணர் சங்க மற்றும் சமயமன்ற அன்பர்கள் திரளாக கலந்துகொண்டனர்.
ஸ்ரீசங்கர – ஸ்ரீராமானுஜ ஜயந்தி விழா
இந்துசமயமன்றம் மற்றும் மறைமலைநகர் பிராமணர்கள்சங்கம் இணைந்து நடத்தும்
ஸ்ரீசங்கர – ஸ்ரீராமானுஜ ஜயந்தி விழா
நாள் : 06.05.2022 வெள்ளிக்கிழமை
நேரம்: மாலை. 5.00 மணி
இடம்: ஸ்ரீஐயப்பன் திருக்கோவில், மறைமலைநகர்.
நிகழ்ச்சி நிரல்
மாலை.5.மணி.
ஸ்ரீகாஞ்சி மஹாபெரியவர் பளிங்குத்திருமேனி ஸ்வரூபமாக ஐயப்பன் கோவிலுக்கு எழுந்தருளல்.
மாலை.5.05.வினாயகர் வணக்கம்
மாலை.5.10. ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம்
ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாம பாராயணம்
மாலை.6.10. ஸ்ரீசங்கரர் மற்றும் ஸ்ரீராமானுஜரின் மஹிமைகள்
மாலை.6.30.ஸ்ரீசங்கர- ஸ்ரீராமானுஜ அஷ்டோத்ர பூஜை.
தோடகாஷ்டகம்.
மாலை.7.00 மணி மஹா தீப ஹாரத்தி, உபசார பூஜை
மாலை.7.15. ப்ரசாத விநியோகம்.
அனைவரும் வருக!
ஆசார்யர்களின் அருளைப்பெறுக!