களிவந்தப்பட்டு இருளர் காலனி பகுதியில் அன்னதானம்

அனுஷம் அமிர்தம் சார்பில் இன்று 24.02.2022 வியாழக்கிழமை களிவந்தப்பட்டு இருளர் காலனி பகுதியில் அன்னதானம் வெஜிடபிள் சாதம், தயிர் பச்சடி,வெஜிடபிள் குருமா,குலோப் ஜாமூன், பைனாப்பிள் கேசரி, தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டது.

பணிகள் பற்றிய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது

ஸ்ரீகுருப்யோ நம!
23.02.2022 புதன்கிழமை
இந்துசமயமன்றத்தின் பணிகள் பற்றிய அறிக்கை ஸ்ரீஆசார்ய ஸ்வாமிகளிடம் அமைப்பாளர் புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமனால் சமர்ப்பிக்கப்பட்டது. ஸ்ரீபெரியவர்கள் சமயமன்ற பணிகள் பற்றிய விஷயங்களை பார்வையிட்டருளி ஆசி வழங்கினார்கள். வியாசர்பாடி கிளை சென்னபுரி இந்துசமயமன்ற கிளை சார்பில் உருவாக்கிய ஸ்ரீஆதிசங்கரர்(ஸ்ரீமத் அத்வைதம்), ஸ்ரீமஹாபெரியவர் (ஸ்ரீமத் சனாதனம்), ஸ்ரீபுதுப்பெரியவர்(ஸ்ரீமத் லோகஹிதம்) பஞ்சலோக விக்ரஹங்களை இந்துசமயமன்ற மிகமூத்த அமைப்பாளர் ஸ்ரீ.ஹரிஹரன்ஜி சமயமன்றக்குழுவினருடன் ஸ்ரீபெரியவர்களிடம் சமர்ப்பித்தார். ஸ்ரீஸ்வாமிகள் மகிழ்வுடன் ஆசிவழங்கியருளினார்கள்.

“வீடுதோறும் திருமுறை, வீதிதோறும் தமிழ்மறை”

சிவாய நம!

“வீடுதோறும் திருமுறை, வீதிதோறும் தமிழ்மறை”

14.02.2022 திங்கட்கிழமை மறைமலைநகர் அருகில் கடம்பூர் சிவபெருமான் திருக்கோவிலில் ப்ரதோஷத்தன்று மாலை 4.30 மணியிலிருந்து 6.30 மணிவரை உலகநலன் வேண்டி “பலன்தரும் பாராயணப்பதிகங்கள்” திருமுறை ஓதும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரமும், அன்னதானமும் நடைபெறும்.
அனைவரும் வருக! அரனருள் பெறுக!

இந்துசமயமன்றம்
திருவாசக முற்றோதுதல் குழு

ஸ்ரீமஹாபெரியவா இல்லம் ஸ்ரீலக்ஷ்மி நரசிம்ம பக்தஜனசபா சார்பில் அன்புடன் வழங்கப்பட்டது

திருச்சி மாவட்டம் ஜீயபுரம் திருச்செந்துறை ஸ்ரீமானேந்தியவல்லி உடனுறை ஸ்ரீசந்திரசேகரஸ்வாமி திருக்கோவிலில் சேலம் ஸ்ரீமஹாபெரியவா இல்லம் ஸ்ரீலக்ஷ்மி நரசிம்ம பக்தஜனசபா சார்பில் அன்புடன் வழங்கப்பட்ட மஹாபெரியவா ப்ரசாதம் இந்துசமயமன்றம் சார்பில் வழங்கப்பட்டது.

ஸ்ரீமந்நாராயணீய பாராயணம்

இந்துசமயமன்ற சூளைமேடு கிளை அமைப்பாளர் ஸ்ரீமதி.ஜெயலலிதா அவர்கள் இல்லத்தில் இன்று அவிட்டபூஜை சிறப்பாக உலகநலன் வேண்டி நடைபெற்றது. பஞ்சலோக விக்ரஹ ஸ்வரூபமாகஸ்ரீஆதிசங்கரர், ஸ்ரீமஹாபெரியவர்களும் ஸ்ரீபுதுப்பெரியவர்களும் மும்மூர்த்திகளாய் எழுந்தருளி அருள்பாலித்தனர். இதே சூளைமேடு இந்துசமயமன்ற கிளை சார்பில் ஸ்ரீமந்நாராயணீய பாராயணம் மும்முறை இப்பெரியவர்களின் அருள்முன்னிலையில் நடைபெற்றது. மேலும் ஒவ்வொரு அனுஷத்தின்போதும் ஏகதின நாராயணீய பாராயணம் நடைபெற்றுவருகிறது.

அவிட்டபூஜை

இந்துசமயமன்ற சூளைமேடு கிளை அமைப்பாளர் ஸ்ரீமதி.ஜெயலலிதா அவர்கள் இல்லத்தில் இன்று அவிட்டபூஜை சிறப்பாக உலகநலன் வேண்டி நடைபெற்றது. பஞ்சலோக விக்ரஹ ஸ்வரூபமாகஸ்ரீஆதிசங்கரர், ஸ்ரீமஹாபெரியவர்களும் ஸ்ரீபுதுப்பெரியவர்களும் மும்மூர்த்திகளாய் எழுந்தருளி அருள்பாலித்தனர். இதே சூளைமேடு இந்துசமயமன்ற கிளை சார்பில் ஸ்ரீமந்நாராயணீய பாராயணம் மும்முறை இப்பெரியவர்களின் அருள்முன்னிலையில் நடைபெற்றது. மேலும் ஒவ்வொரு அனுஷத்தின்போதும் ஏகதின நாராயணீய பாராயணம் நடைபெற்றுவருகிறது.

அனுஷ நக்ஷத்திரத்தன்று மாதந்தோறும் அன்னதானம்

செங்கல்பட்டு மாவட்டம் களிவந்தப்பட்டு இருளர் மக்கள் வசிக்கும் பகுதியில் ஸ்ரீமஹாபெரியவர் அவதரித்த அனுஷ நக்ஷத்திரத்தன்று மாதந்தோறும் அன்னதானம் செய்ய அனுஷம் அமிர்தம் என்கிற பெயரில் ஏற்பாடு செய்யப்பெற்று இன்று 27.01.2022 வியாழக்கிழமை காலை ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள் அருளாசியுடன் நடைபெற்றது.

மறைமலைநகர் இந்துசமயமன்ற கிளை சார்பில் நடைபெற்ற போட்டிகள் பரிசளிப்புவிழா

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் இந்துசமயமன்ற கிளை சார்பில் நடைபெற்ற மாணவ மாணவியர்க்கான திருப்பாவை-திருவெம்பாவை போட்டிகள் பரிசளிப்புவிழா 26.01.2022 புதன்கிழமை மறைமலைநகர் பூங்குன்றனார் தெரு திருமதி.பார்வதிரமணி அவர்கள் இல்ல வளாகத்தில் நடைபெற்றது. மறைமலைநகர் ஸ்ரீகிருஷ்ணபவனம் டிரஸ்ட் மற்றும் மறைமலைநகர் பிராமணர்சங்க போஷகர் ஸ்ரீ.ப்ரகாஷ் மற்றும் நிர்வாகிகள், இந்துசமயமன்ற மாநில அமைப்பாளர் புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன், திருக்கோயில் எண்ணெய் வழங்கும் திட்ட பொறுப்பாளர் திரு.கே.இராமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர். போட்டியில் பங்கேற்ற குழந்தைகளுக்கு ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள் அருளாசியுடன் சமயமன்ற சான்றிதழ், நித்யபாராயண புத்தகம், ப்ரசாதம் மற்றும் பிராமணசங்கம் சார்பில் பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டது. சிற்றுண்டியுடன் விழா இனிதே நடந்தேறியது.