ஸ்ரீகுருப்யோ நம!
இந்த வருடத்திற்கான பொங்கல் விழா நிகழ்ச்சிகள் கொரானோ ஊரடங்கு அரசின் விதிமுறைகளின்படி சமூக இடைவெளியை பின்பற்றி முககவசம் அணிந்து பங்கேற்க வேண்டுகிறோம்.
இந்த 2022 ஜனவரி மாதத்திலிருந்து காஞ்சி மஹாபெரியவர் அவதரித்த திருநக்ஷத்த்திரமான அனுஷ நக்ஷத்திரத்தில் அனுஷ அமிர்தம் சார்பில் களிவந்தப்பட்டு இருளர் பகுதி மற்றும் நலிவுற்றோருக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
28வது வார்ஷிக ஆராதனை
இந்துசமயமன்றம் மற்றும் ஸ்ரீகாஞ்சி கைங்கர்ய சபா சார்பில் ஸ்ரீமஹாபெரியவர் அனுஷ பூஜை ஸ்வாமிகளின் 28வது வார்ஷிக ஆராதனை தினத்தையொட்டியும்,2022ம் வருடத்தில் லோகக்ஷேமத்திற்காக ப்ரார்த்தித்தும், பள்ளிக்கரணை மேப்பிள்டன் அப்பாசாமி அபார்ட்மெண்ட் பார்ட்டி ஹாலில் 31.12.2021 வெள்ளிக்கிழமை மாலை வெகுசிறப்பாக நடைபெற்றது. ஸ்ரீமஹாபெரியவருக்கு விசேஷ அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது.சிரஞ்ஜீவி.ஆதித்யா,ரோஹித்,சூர்யா ஆகியோரின் ஸ்ரீபால ஸத்ஸங்கம் நாமஸங்கீர்த்தனம் வெகு சிறப்பாக இருந்தது. நன்மங்கலம்.ப்ரம்மஸ்ரீ.கணேச பாகவதர், வேளச்சேரி. ரகுநாத் லக்ஷ்மண் டிரஸ்ட் சாக்தஸ்ரீ.காசி ஸாஸ்த்ரிகள் விழாவிற்கு வந்து சிறப்பித்தனர். அனைவருக்கும் திருவாசகம் புஸ்தகம், ஸ்ரீகுருவாயூரப்பன் ப்ரசாதம், ஸ்ரீராமபட்டாபிஷேக படம் வழங்கப்பட்டது. மஹா ஆரத்தியுடன் அருட்ப்ரசாதம் மற்றும் இரவு சிறப்பான உணவு அனைவருக்கும் வழங்கப்பட்டது.
ஜயஜய சங்கர!
ஹரஹர சங்கர!
இன்று காஞ்சிப்பெரியவரின் 28வது வருடாந்திர ஆராதனையை முன்னிட்டு இந்துசமயமன்றம் மற்றும் அனுஷ அமிர்தம் சார்பில் அன்னதானம் கூடுவாஞ்சேரி பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்றது.
பர்வதமலையை கிரிவலம் வந்த மார்கழி ஒன்றாம்நாள்
ஸ்ரீகாஞ்சி மஹாபெரியவர் தக்ஷிணகைலாயம் என வழங்கப்படும் திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் வட்டம் பர்வதமலையை கிரிவலம் வந்த மார்கழி ஒன்றாம்நாள் அவரது அருளைப்போற்றும்வண்ணம் ஒவ்வொரு வருடமும் லக்ஷக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். இந்த வருடம் 16.12.2021 வியாழக்கிழமை இன்றைக்கு கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமயச்சேவை அமைப்பான இந்து சமய மன்றம் சார்பில் அன்னதானம், காபி மற்றும் ஆன்மீக புத்தகப்ரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கடலாடி இந்துசமயமன்ற அமைப்பாளர் திரு.ஜெயவேலு அவர்கள் மிகச் சிறப்பாக பல அன்பர்களுடன் செய்திருந்தார். திரு.ஜெயவேலு அவர்கள் பர்வதமலை கிரிவலம் வருபவர்களுக்கு சாதாரண நாட்களிலும் வழிகாட்டியாகவும் சேவை செய்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு இந்துசமயமன்றம் சார்பில் பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்!
திருவள்ளூர் மாவட்ட வளர்ச்சி ஆலோசனைக்கூட்டம்
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய, கலாச்சார, பண்பாட்டு, சேவை அமைப்பான இந்துசமயமன்றம் திருவள்ளூர் மாவட்ட வளர்ச்சி ஆலோசனைக்கூட்டம் ஸ்ரீபெரியவர் அவதரித்த பெரியபாளையம் அடுத்த தண்டலம் கிராம சத்சங்க ஹாலில் இன்று 05.12.21 ஞாயிற்றுக்கிழமை மாலை ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள் அருளாசியுடன் நடைபெற்றது. இந்து சமுதாய முன்னேற்றம், திருக்கோவில் வழிபாடுகளில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துதல், கூட்டு வழிபாடுகள், திருப்பாவை திருவெம்பாவை போட்டிகள்,கல்வி மற்றும் மருத்துவ உதவிகள், தொழிற்கல்வியை பயிற்றுதல், ஆன்மீக புத்தகங்கள் வெளியிடுதல், உட்பட பல விஷயங்கள் மீதான கருத்தரங்கம், ஆலோசனைகள் பல சேவை பிரதிநிதிகளிடமிருந்துபெறப்பட்டது. இந்த நிகழ்வில் இந்துசமயமன்ற அமைப்பாளர்கள் புலவர் க. ஆத்ரேய சுந்தரராமன், முனைவர்.திரு.கலைராம.வெங்கடேசன், ஸ்ரீமதி.கௌரி வெங்கட்ராமன், ஸ்ரீமதி.வித்யாலக்ஷ்மி வேதகிரி,ஸ்ரீ.ஹரிஹர ன்ஜீ, ஸ்ரீ.M.K.ஸ்ரீதர்,ஸ்ரீ.செல்வன் ஆகியோர் பங்கேற்றனர்.
ஜகத்குரு ஸ்ரீ ஸ்வரூபானந்த சரஸ்வதி சுவாமி
இருளர் மக்களின் திருக்கார்த்திகை தீபவிழா
மேற்கண்ட இல்லங்கள் அனைத்தும் நமது இருளர் மக்களின் இல்லங்கள். இந்துசமயமன்றம் சார்பில் இந்த வருடம் இங்கே திருக்கார்த்திகை தீபவிழா கொண்டாட முடிவு செய்து அவர்களிடம் தெரிவித்தோம். அவர்கள் வருடந்தோறும் கார்த்திகை தீபமேற்றி காலங்காலமாக வழிபட்டு வருபவர்களே. எனவே நமது இந்துசமயமன்றம் சார்பில் அகல்கள், எண்ணெய்,திரி வழங்கப்பட்டது. திருக்கார்த்திகை அன்று மாலையில் மிக அழகாக கோலமிட்டு தீபமேற்றி வழிபட்டனர். இந்த தடவை அவர்கள் இல்லத்து பூஜையில் காஞ்சி மஹாபெரியவருக்கும் பூஜை நடந்தது மிகவும் அற்புதம். மிகவும் கஷ்ட ஜீவனம் நடத்தும் அப்பெருமக்கள் இந்து கலாச்சார பாரம்பரிய திருவிழாக்களை எளிமையாக நேர்த்தியாக கொண்டாடி வருவது மிகவும் கொண்டாடத்தக்க விஷயம். அவர்களுக்கு உதவுவோம். நம் ஆதிகுடி சகோதர சகோதரிகளுக்கு கைகொடுப்போம்.
நந்திமலையில் தீபமேற்றம்
நந்திமலையில் தொடர்ந்து 25 வருடமாக தீபமேற்றிவரும் ஆன்மீக அன்பர்கள் இந்த வருடமும் சிறப்பாக தீபமேற்றி வழிபட்டனர். இந்துசமயமன்றம் சார்பில் 4லிட்டர் எண்ணெய்,திரி நமது திருக்கோவில் தீபமேற்ற எண்ணய் வழங்கும் திட்டப்பொறுப்பாளர் திரு.க.இராமசந்திரன் அவர்கள் மூலம் வழங்கப்பட்டது..திரளான ஆன்மீக அன்பர்களின் ஒத்துழைப்புடன் நிகழ்ச்சி நடைபெற்றது.