இருளர் மக்கள் வாழும்பகுதியில் திருக்கார்த்திகை தீபமேற்ற இந்துசமயமன்றம் சார்பில் வழங்கப்பட்டது.

இருளர் மக்கள் வாழும்பகுதியில் ஒவ்வொரு இல்லத்திலும் திருக்கார்த்திகை தீபமேற்ற மண் அகல்கள் 10, நல்லெண்ணெய், திரிநூல் நமது இந்துசமயமன்றம் சார்பில் வழங்கப்பட்டது.

பெருமழையினால் பாதிக்கப்பட்ட இருளர் மக்களுக்கு உதவி

ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமயச்சேவை அமைப்பான இந்துசமயமன்றம் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் கலிவந்தப்பட்டு கிராமத்தில் 11.11.2021 வியாழக்கிழமை அன்று பெருமழையினால் பாதிக்கப்பட்ட இருளர் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள அரசினர் ஊராட்சிஒன்றிய நடுநிலைப்பள்ளி முகாமில் அவர்களுக்கு போர்வை,கோரைப்பாய்,டூத்பேஸ்ட்,குளியல் சோப்பு,துணி சோப்பு,கொசுவர்த்தி,தீப்பெட்டி,மெழுகுவர்த்தி,சானிடரி நாப்கின்,டவல்,பிஸ்கட்,ரஸ்க்,விக்ஸ் தைலம் ஆகியவை வழங்கப்பட்டது. சூடான இஞ்சி தேனீர் வழங்கப்பட்டது. முகாமில் Dr.தீபா அவர்கள் தலைமையில் மருத்துவக்குழுவினர் மூலம் மருத்துவப்பரிசோதனையும் மற்றும் மழைக்காலத்தில் தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகள் மற்றும் கொரானோ தடுப்பூசியின் அவசியமும் விளக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன்,கலிவந்தப்பட்டு ஊர் முக்கியப்ரமுகர் திரு.கருணாகரன்@சங்கர், Dr.சிவசிதம்பரநாதன்,திரு.க.இராமச்சந்திரன்,செங்கை பேரிடர் மீட்புக்குழு திரு.பாஷா,காஞ்சிக்குரல் பத்திரிகை திரு.கருணாகரன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த சேவைக்கு பெரிதும் உதவிய ஸ்ரீகாஞ்சி கைங்கர்ய சபா ஸ்ரீ.வெங்கட்ராமன்ஜீ, வி.எச்.பி.ஸ்ரீ.ஸ்ரீராம்ஜீ, ஸ்ரீ.ஷ்யாம் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறோம்.

பொதிகை தொலைக்காட்சிக்கு அருளிய தீபாவளி அனுக்ரக பாஷணம்

வசுதேவ சுதம் தேவம் கம்ச சாணூர மர்தனம்
தேவகி பரமானந்தம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர்பவதி பாரத

அப்யுத்தானமதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யகம்

பரித்ராணாய ஸாதூனாம் விநாஷாய சதுஸ்க்ருதாம்

தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே

எந்த சமயத்திலே தர்ம சிந்தனையை வளர்க்க வேண்டிய தேவை அதிகமாக இருக்கிறதோ, தர்மத்தை கடைபிடிப்பவர்களுக்கு இன்னல்கள் ஏற்படும் போது. மக்களுக்கு பல்வேறு விதமான ஸ்ரமங்கள் ஏற்படும் காலத்திலே, எல்லாம் வல்ல இறைவன், கருணா மூர்த்தியாக இருக்கக் கூடியவர், மனித உருவத்திலே வந்து, இந்த பூவுலகத்திலே வந்து, அவதாரம் செய்து, மக்களைக் காப்பாற்றி அருள்பாலிக்கிறார்.

அப்படி தசாவதாரங்கள் நிகழ்கின்றன். கூர்மாவதாரம், மச்சாவதாரம், வராஹா அவதாரம், நரசிம்ஹா அவதாரம், பரசுராமாவதாரம், ராமா அவதாரம், வாமனாவதாரம் இந்த வரிசையிலே கிருஷ்ணாவதாரமானது ஏற்ப்பட்டது.

மக்களை நல்ல உபதேசங்கள் மூலமாக நல்வழிப்படுத்தி, இறைவன் குருவாகவும் திகழ்கிறார். ஜகத் குருவாகவும் திகழ்கிறார். அதுதான் கிருஷ்ண அவதாரத்தின் தனிச் சிறப்பு. இன்னல்களைப் போக்கி, இடர்பாடுகளைப் நீக்கி, ஹிம்சை அளித்தவர்களை அழித்து, இப்படி அவதாரங்கள் பொதுவாக இருக்கின்றன.

இந்த கிருஷ்ணாவதாரத்திலே, பகவத்கீதையின் மூலமாக மனிதன் நாகரீகம் வளர்வதற்கான தெளிவான உபதேசங்களை அளித்திருக்கிறார். மனிதப் பிறவி என்பது இறைவனின் அருளால் நமக்கு கிடைக்கக் கூடிய ஒரு வரட்பிரசாதம். இந்த அறிய பிறவியிலே இறைவனுடைய தத்துவங்களை நாம் அறிய முற்ப்பட வேண்டும். இந்தப் பிறவியானது புனிதப் பிறவியாக உயர்வதற்கு நம்மால் முடிந்த பரோபகாரங்களை நாம் செய்ய வேண்டும். பிறருக்கு நாம் உதவி செய்ய வேண்டும்.

பசி போக்குவதற்கு, தாகம் போக்குவதற்கு, அறியாமையை போக்குவதற்கு; அதே போன்று சேவை மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். முதியவர்களை நல்ல விதமாக கவனித்துக் கொள்ள வேண்டும். குரு பக்தியுடன் கல்வியை கற்க வேண்டும். மனிதப் பிறவியிலே நாம் தெய்வ பக்தியை வளர்த்துக் கொள்ள வேண்டும்.இதற்கு சத்சங்கம் என்பது தேவை. நல்லோர்களுடன் சேர்க்கை.. இந்த மனிதப் பிறவி என்பது மனிதப் பிறவி சாஸ்வதம் இல்லை என்றாலும், சாஸ்வதமான புண்ணியத்தை அளிக்கக் கூடியது, மனிதப் பிறவி சாஸ்வதம் இல்லை என்றாலும், மனிதப் பிறவியின் மூலமாக செய்யக் கூடிய நற்செயல்கள், சாஸ்வதமான புண்ணியத்தை, நிரந்தரமான ஈஸ்வரனுடைய, பெருமாளுடைய அனுக்ரகத்தைப் பெற்று தரக்கூடியது.

ஆகவே, இளமையில் கல், அறம் செய்ய விரும்பு, ஆலயம் தொழுவது சாலமும் நன்று. இது போன்ற பல அறிவுரைகளை தமிழகம் நமக்கு அளித்து இருக்கிறது. உலகளவிலே பொது மறையாகக் கருதக் கூடிய பகவத்கீதையை கிருஷ்ண பரமாத்மா நமக்கு அளித்து இருக்கிறார். அந்த கிருஷ்ண பரமாத்மாவின் உபதேசம், இன்றைய நிலையிலே உலகனைத்திற்கும் தேவையான ஒன்றாக இருக்கிறது. ஏனென்றால், மனிதர்கள் மனித நேயத்துடன் பழக வேண்டும், மனித நாகரீகத்தோடு பழக வேண்டும், நம்பிக்கையோடு பழக வேண்டும், அனைவரும் நல்லிணக்கத்தோடு பழக வேண்டும்.

புனரபி ஜனனம் புனரபி மரணம்

புனரபி ஜனனி ஜடரே சயனம்

என்று ஆதிசங்கரர் பஜகோவிந்தத்தில் குறிப்பிடுவது போன்று, நாம் பல பிறவிகளை எடுத்து வருகிறோம். அந்த பல பிறவிகளிலும் நல்ல பணிகளை செய்வதற்கு, நாம் முற்ப்படுவதற்க்கு அந்த இறைவனுடைய அருள் என்பது மனித சமுதாயத்திற்க்கு மிகவும் தேவையான ஒன்று. ஆகவே, நல்ல வாழ்க்கை நமக்கு அமைவதற்கு, நல்ல சிந்தனைகள் அமைவதற்கு, நல்ல நண்பர்கள் அமைவதற்கு, பொருளாதாரம் சிறப்பான முறையில் அமைவதற்கு , வேலை வாய்ப்புகள் சிறப்பான முறையிலே இறைவன் படைத்த பொருட்களை நாம் சரியான முறையிலே பகிர்ந்து கொண்டு, அனைவருக்கும் உதவி செய்து, தியாகமும், சேவையும், அன்பும் கலந்த வாழ்க்கையை அமைத்துக் கொண்டு, நாமும் இன்பமாக வாழ்ந்து, நம்மைச் சார்ந்தவர்களும் இன்பமாக வாழ்வதற்கு, ஆனந்தமாக வாழ்வதற்கு, அன்புடன் வாழ்வதற்கு வேண்டிய ஒரு பக்குவமான நல்லதொரு சிந்தனைகள்,நல்லதொரு வழிமுறைகள்-ஆசாரக் கோவை போன்று . திருக்குறள் போன்ற புஸ்தகங்களைப் படித்து, நல்ல தன்மையைத் தரக் கூடிய வாழ்க்கையை, நல்ல நன்மையைத் தரக்கூடிய நாம் அமைத்துக் கொள்ள வேண்டும்.

இதெற்கெல்லாம் எடுத்துக் காட்டாக, வாழ்க்கையிலே ஒளி வெள்ளம் ஏற்பட வேண்டும். பிரகாசம் ஏற்பட வேண்டும். ஜோதி, பிரகாசம் ஏற்படுவதற்கு, இந்த தீபாவளிப் பண்டிகை உதாரணமாகத் திகழ்கிறது.

கிருஷ்ண பரமாத்வாவினால் ஆரம்பிக்கப்பட்ட, அனுகரிக்கப் பட்ட, ஆசீர்வதிக்கப்பட்ட, தீபாவளி நரகதசி புண்ய காலத்திலே அனைவரும் காலையிலே நீராடி, லக்ஷ்மி கடாக்ஷத்தையும், கங்கை நதியிலே ஸ்நானம் செய்த புண்ணியத்தையும் -தைலே லக்ஷ்மீஹி , ஜலே கங்கா என்று சொல்வார்கள். அன்றைய தினம் கங்கா ஸ்நானம் ஆகி விட்டதா என்று பரஸ்பரம், குசலம் விசாரித்துக் கொள்வார்கள். அப்படி புனிதத் தன்மையை, எங்கேயோ இருக்கக் கூடிய, இமய மலையிலே இருக்கக் கூடிய புனிதமான கங்கையிலே நீராடிய, ஸ்நானம் செய்த புண்ணியத்தை, நாம் தமிழகத்தில் இருந்தும் சரி, வெளிநாட்டில் இருப்பவர்களும் சரி, அன்றைய தீபாவளி தினம் , புனித நீராடுதல் மூலமாக, நாம் அந்த கங்கா ஸ்நானத்தின் புண்ணியத்தைப் பெறுகிறோம். லக்ஷ்மியின் கடாக்ஷத்தை, செல்வத்தைப் பெறுகிறோம். இப்படி அருளையும், பொருளையும் பெற்று, நம்முடைய நாடு மற்றும் உலகம் மேலும் சிறப்பாக விளங்குவதற்கு, எல்லாம் வல்ல அந்த கிருஷ்ண பரமாத்வாவையும், அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அன்னை காமாக்ஷி என்கிற காமாக்ஷி அம்மனையும் பிரார்த்தனை செய்வோம்.

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர

திருவிளக்கேற்ற நல்லெண்ணெய்

இந்துசமயமன்றம் சார்பில் சமயமன்ற தொடர்பிலுள்ள திருவிளக்கேற்ற நல்லெண்ணெய் மாதந்தோறும் வழங்கப்படும் கிராமத் திருக்கோவில் அர்ச்சகர் தம்பதிகளுக்கு தீபாவளி புத்தாடை(8 முழம் வேட்டி,மேல்துண்டு,புடவை,பிளவுஸ்பிட்),மங்கலப்பொருட்கள்(கண்ணாடி,சீப்பு,திருமாங்கல்யசரடு,வெற்றிலைபாக்கு,பழங்கள்,புஷ்பம்,தக்ஷிணை),இனிப்பு ஆகியவை வழங்கப்பட்டது. இதற்கு புத்தாடைக்கு உதவிய ஆடிட்டர் ஸ்ரீகாந்த்ஜீ,மாடம்பாக்கம் ஜனகல்யாண்,மங்கலபொருட்கள் வழங்கிய ஸ்ரீகாஞ்சிகைங்கர்யசபா அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்🙏🏻

தீபாவளிப்பரிசாக எவர்சில்வர் டிபன்பாக்ஸ் வழங்கப்பட்டது

30.11.2021 ஞாயிற்றுக்கிழமை செங்கல்பட்டு மாவட்டம் கலிவந்தப்பட்டு கிராமத்தில் இருளர் வசிக்கும் பகுதியில் இந்துசமயமன்றம் சார்பில் மாடம்பாக்கம் ஜனகல்யாண் ஆதரவில் தீபாவளிப்பண்டிகையையொட்டி இனிப்பு,காரம்,பிஸ்கட் மற்றும் தீபாவளிப்பரிசாக எவர்சில்வர் டிபன்பாக்ஸ் வழங்கப்பட்டது.ஸ்ரீகாஞ்சி சங்கராச்சார்ய ஸ்வாமிகளின் தீபாவளி அருளாசியை இருளர் மக்களுக்கு தெரிவித்து தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இந்துசமயமன்ற மாநில அமைப்பாளர் புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன், சமயமன்ற அன்பர்கள் திரு.மன்ராஜ், திரு.சாயிராமன்,திரு.ஷ்யாம்,ஊர் பிரமுகர் திரு.சங்கர் (எ) கருணாகரன் ஆகியோர் கலந்துகொண்டனர். நமது சமயமன்ற திருக்கோவில் எண்ணெய் வழங்கும் திட்ட பொறுப்பாளர்.திரு.இராமச்சந்திரன் நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.

Fishermen Consecrate Veda Vyasa Vigraha And Perform Samudhra Aarathi In Chennai

இந்துசமயமன்றம்- தர்மரக்ஷணசமிதி இணைந்து நடத்திய வேதவ்யாசர் ப்ரதிஷ்டை மற்றும் மஹா ஸமுத்ர ஹாரத்தி. அவசியம் கண்டு களியுங்கள். தங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.

https://www.facebook.com/watch/?v=253854543372399

ஸமுத்ரராஜருக்கு பௌர்ணமிதோறும் மஹா ஹாரத்தி

ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமயச்சேவை அமைப்பான இந்துசமயமன்றம், தர்மரக்ஷணசமிதி மற்றும் திருவான்மியூர் குப்பம் பகுதி பொதுமக்கள், ஊர் பஞ்சாயத்தார்களின் ஒத்துழைப்புடன் 20.10.21 புதன்கிழமையன்று மாலை கடற்கரையில் ஸமுத்ரராஜருக்கு பௌர்ணமிதோறும் மஹா ஹாரத்தி காண்பிக்கும் நிகழ்ச்சி ஸ்ரீகாஞ்சி ஜகத்குரு சங்கராச்சார்ய ஸ்வாமிகளின் அருளாசியுடன் சிறப்பாக துவங்கியது. இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீசங்கரா பள்ளிகளின் தாளாளர் ஸ்ரீ.ஆ.ம.ராமகிருஷ்ணன் அவர்கள்,வேதபாரதி ஸ்ரீ.வெங்கட்ராமன்ஜீ,தர்மரக்ஷண சமிதி ஸ்ரீ.பாலசுப்பிரமணியன்ஜீ,ஸத்வித்யா ஸ்தானம் ஸ்ரீ.முனீச்வர ஸாஸ்த்ரிகள், விஸ்வ ஹிந்து பரிஷத்.ஸ்ரீ.ஸ்ரீராம்ஜீ,ஸ்ரீகாஞ்சி கைங்கர்ய சபா ஸ்ரீ.வெங்கட்ராமன்ஜீ மற்றும் அவர் நண்பர்கள்,வியார்பாடி இந்துசமயமன்றம் ஸ்ரீஹரிஹரன்ஜீ,இந்துசமயமன்றம் புலவர் ஆத்ரேய சுந்தரராமன்,ஸ்ரீபாலா கோவில் ஸ்ரீ.ராதாகிருஷ்ணன்,இந்துசமயமன்றம் ஸ்ரீமதி.கௌரி வெங்கட்ராமன் மற்றும் சமயமன்ற அன்பர்கள் பலரும் கலந்துகொண்டனர். ஸ்ரீ.ஆ.ம.ராமகிருஷ்ணன் அவர்கள் இயற்றிய அழகான ஹாரத்தி பாடலை பாடி ஸ்ரீவேம்படியம்மன் திருக்கோவில் வளாகம் எதிரில் ஸமுத்ரராஜருக்கு ஹாரத்தி காண்பிக்கப்பட்டது.வியாசர்பாடி ஸ்ரீ.ஹரிஹரன்ஜீ அவர்கள் செய்துள்ள ஆதிசங்கரர் விக்ரஹமும் இங்கே இன்று எழுந்தருளியது மிகவும் விசேஷம். இந்த ஹாரத்தி பிரதி பௌர்ணமிதோறும் திருவான்மியூர் குப்பம் கடற்கரையில் நடைமடற உள்ளது.

ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமயச்சேவை அமைப்பான இந்துசமயமன்றம் மற்றும் தர்மரக்ஷண சமிதி இணைந்து

ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமயச்சேவை அமைப்பான இந்துசமயமன்றம் மற்றும் தர்மரக்ஷண சமிதி இணைந்து திருவான்மியூர் குப்பம் ஸ்ரீவேம்படியம்மன் ஆலயத்தில் ஸ்ரீவேதவ்யாசர் விக்ரஹப்ரதிஷ்டை ஸ்ரீசங்கரா பள்ளிகளின் தாளாளர் ஸ்ரீ.ஆ.ம.ராமகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் சிறப்பாக 20.10.2021 புதன்கிழமை நடைபெற்றது.