மதுரை ஆதீனத்தின் குருமஹாசந்நிதானம்
தொன்மையான சைவத்திருமடங்களில் ஒன்றும் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த நான்மாடக்கூடல் நகராம் மதுரையை தலைமையகமாகக்கொண்டதுமான மதுரை ஆதீனத்தின் குருமஹாசந்நிதானம் அவர்கள் சொக்கநாதப்பெருமானின் திருவடிகளை சேர்ந்துவிட்டார்கள்.ஸ்வாமிகளின் பொன்னார் திருவடிகளில் இந்துசமயமன்றம் தன் மலரஞ்சலிகளை சமர்ப்பிக்கிறது.
அனைவருக்கும் ஆடி பதினெட்டாம் பெருக்கு நல்வாழ்த்துக்கள்!
அனைத்து சகோதரிகளும் சகல ஐஸ்வர்யங்களுடன் வாழ காவிரித்தாயை வணங்குகிறோம்.
இந்துசமயமன்றம்.
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய கலாச்சார பண்பாட்டு சேவை அமைப்பு
ஸ்ரீஸ்ரீஸ்ரீஜயேந்த்ர சரஸ்வதி சங்கராச்சாரிய ஸ்வாமிகள் அவர்களின் ஜயந்திவிழா
ஸ்ரீகுருப்யோ நம!
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் 69வது ஆசார்ய ஸ்வாமிகள், புதுப்பெரியவர் என அன்புடன் பக்தர்களால் அழைக்கப்பட்டவர், ஸ்ரீமஹாபெரியவரின் அன்பு சீடர், ஸ்ரீஸ்ரீஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீஜயேந்த்ர சரஸ்வதி சங்கராச்சாரிய ஸ்வாமிகள் அவர்களின் ஜயந்திவிழா ஸ்ரீமடத்தின் பக்தர்களால் பரம பக்தியுடன் இன்று கொண்டாடப்படுகிறது. பாரததேசமெங்கும் வலம் வந்து சனாதன தர்மத்தை நிலைநாட்டிய மஹான். வேதபாடசாலைகள், கல்விக்கூடங்கள், கோசாலைகள், பல்கலைக்கழகம், மருத்துவமனைகள், தொண்டு நிறுவனங்கள், ஜனகல்யாண் ஜனஜாக்ரண் அமைப்பு என பலவற்றை தோற்றுவித்து மக்கள் துயர் நீக்கிய மஹாகுரு.ஸ்ரீமஹாபெரியவரின் திருவுள்ளப்பாங்கின்வண்ணம் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய, கலாச்சார, பண்பாட்டு, சேவை அமைப்பான இந்துசமயமன்றம் அமைப்பை உருவாக்கி போஷித்து அதன் தூய தொண்டுகளுக்கு அருளாசி வழங்கி வந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீஜயேந்த்ர சரஸ்வதி ஸ்வாமிகள் பொற்பதங்களில் இந்துசமயமன்றம் சார்பில் அனந்தகோடி நமஸ்காரங்களை சமர்ப்பிக்கிறோம்.
புலவர் க ஆத்ரேய சுந்தரராமன்.
கௌரி வெங்கட்ராமன்.
அமைப்பாளர்கள்
மற்றும் சமயமன்ற அன்பர்கள்.
காஞ்சிகாமகோடி
பீடம்.
ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதிஸ்வாமிகள்
ஜெயந்தி விழா.!
💐🙏🏻💐
*
நடமாடும்
தெய்வமே..!
உம்மைப்
போற்றி
உய்வமே..!
💐
“இருள்நீக்கி”
என்ற ஊரில்
இறையருளால்
பிறந்தவா..?
💐
காஞ்சி காம
கோடி பீடம்
கண்டு
வாழ்வில்
சிறந்தவா..!
💐
“ஜனகல்யாண்”
கண்டவா..!
மனதில் உறுதி
கொண்டவா..!
💐
மாதவம் மிக்க
ஞானியே..!
கரையேற்றும்
தோணியே..!
💐
மாந்தர் மன
“இருள் நீக்கி”
மாண்புறவே
வாழ்ந்தவா..!
💐
என்றும் ஈசன்
நாமம் சொல்லி
இறைநினைவில்
ஆழ்ந்தவா..!
💐
சநாதன இந்து
தர்மம்..!
தழைத்தோங்கச்
செய்தவா..!
💐
எளிமையாக
என்றும்வாழ்ந்து
பாசமழை
பெய்தவா..!
💐
திரு
மடத்துள்
வருவோர்க்
கெல்லாம்..!
💐
திருவமுதும்
செஞ் சொல்
வாக்கும்
தப்பாமல்
அளித்தவா..!
💐
மழலையர்க்கும்
நீதிக்கதைகள்
சொல்லிச்
சொல்லிக்
களித்தவா..!.
💐
சிரித்தமுகத்தின்
சொந்தமே.!
சிரிப்பைப்பார்க்க
வந்தமே..!
💐
ஜாதி மத
பேதமற்ற
சமத்துவத்தைக்
கண்டவா…!
💐
ஏழையர்க்கும்
அன்பு காட்டி
மனதைக்
கொள்ளை
கொண்டவா..!
💐
நீறுமணக்கும்
நெற்றியுடன்
அருட்காட்சி
தந்தவா..!
💐
ஜனங்களோடு
ஜனங்களாக
நடை போட்டு
வந்தவா..!
💐
காஞ்சி காம
கோடி பீடம்
தன்னை அலங்
கரித்தவா..!
💐
உலகம் போறப்
போக்கைக்கண்டு
உள்ளுக் குள்ளே
சிரித்தவா..!
💐
மனித நேயத்
தோடு வாழ்ந்த
மாதவமே..!
பணிகிறோம்.!
💐
உமது பாத
மலர் எடுத்து
எங்கள் சிரசில்
அணிகிறோம்..!
💐
ஸ்ரீ ஜெயேந்திர
சரஸ்வதி
ஸ்வாமிகள்
திருவடி சரணம்
சரணமே..!
💐
எங்கட் கருள
வரணும்!வரணும்!
என்றும்
சரணம் சரணமே.!
💐🙏🏻💐
அடியேன்
விசூர்மாணிக்கம்
18.07.2021.
தினம்ஒருகவிதை
எண்.1002.
🦚
ஜெயஜெயசங்கர
ஹரஹரசங்கர..!
🙏🏻
- ஜெகம்போற்றும்
ஜெயேந்திரர்
எனும்நூலில்
“பேசும்தெய்வம்”
என்றதலைப்பில்
அடியேன்
கவிதைஎழுதி
உள்ளேன்.
(26.07.1991.
💐
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீட குருபரம்பரை
காஞ்சி சங்கர மடத்தில் இப்போது இருக்கும் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மடத்தின் 70ஆவது பீடாதிபதி.
இந்த மடத்தின் வரலாறு எப்போது தொடங்குகிறது, இதில் மடாதிபதிகளாக இருந்த மற்ற 69 பேர் யார் யார் என்பதைத் தெரிந்து கொள்ள சிலர் ஆர்வமாயிருக்கலாம்.
இதோ அந்த 70 பேர் பெயர்களும் அவர்கள் பீடத்தில் இருந்த காலமும். அவர்களைப் பற்றிய பூர்வாசிரம விவரங்களும் இருக்கின்றன.
பிறகு அவற்றையும் வெளியிடலாம். இப்போது அந்த 70 பேர்.
காஞ்சி காமகோடி பீடத்தின் ஆச்சார்யார்கள் வரிசைப்படி.
- ஸ்ரீ ஆதி சங்கர பகவத் பாதா — (கி.மு. 482 – கி.மு. 477)
- ஸ்ரீ சுரேஸ்வராச்சார்யார் — ( ,, 477 – ,, 407)
- ஸ்ரீ சர்வக்ஞாத்மன் — ( ,, 407 – ,, 367)
- ஸ்ரீ சத்யபோதேந்திர சரஸ்வதி — ( ,, 367 – ,, 268)
- ஸ்ரீ ஞானானந்தேஸ்வர சரஸ்வதி — ( ,, 268 – ,, 205)
- ஸ்ரீ சுத்தானந்தேந்திர சரஸ்வதி — ( ,, 205 – ,, 124)
- ஸ்ரீ ஆனந்த கணேந்திர சரஸ்வதி — ( ,, 124 – ,, 55)
- ஸ்ரீ கைவல்யானந்த யோகேந்திர சரஸ்வதி ( ,, 55 – கி.பி. 28)
- ஸ்ரீ க்ருபா சங்கரேந்திர சரஸ்வதி — ( கி.பி. 28 – ,, 69)
- ஸ்ரீ சுரேஸ்வர சரஸ்வதி — ( ,, 69 – ,, 127)
- ஸ்ரீ சிவானந்த சித்கணேந்திர சரஸ்வதி ( ,, 127 – ,, 172)
- ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி — ( ,, 172 – ,, 235)
- ஸ்ரீ சத்சித்கணேந்திர சரஸ்வதி — ( ,, 235 – ,, 272)
- ஸ்ரீ வித்யாகணேந்திர சரஸ்வதி — ( ,, 272 – ,, 317)
- ஸ்ரீ கங்காதரேந்திர சரஸ்வதி — ( ,, 317 – ,, 329)
- ஸ்ரீ உஜ்வல சங்கரேந்திர சரஸ்வதி — ( ,, 329 – “ 367)
- ஸ்ரீ சதாசிவேந்திர சரஸ்வதி — ( ,, 367 – ,, 375)
- ஸ்ரீ சங்கரானந்த சரஸ்தி — ( ,, 375 – ,, 385)
- ஸ்ரீ மார்த்தாண்ட வித்யாகணேந்திர சரஸ்வதி ( ,, 385 – ,, 398)
- ஸ்ரீ முக சங்கரேந்திர சரஸ்வதி — ( ,, 398 – ,, 437)
- ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி II — ( ,, 437 – ,, 447)
- ஸ்ரீ போதேந்திர சரஸ்வதி I — ( ,, 447 – ,, 481)
- ஸ்ரீ சட்சிசுகேந்திர சரஸ்வதி — ( ,, 481 – ,, 512)
- ஸ்ரீ சித்சுகேந்திர சரஸ்வதி — ( ,, 512 – ,, 527)
- ஸ்ரீ சத்சிதானந்த கணேந்திர சரஸ்வதி ( ,, 527 – ,, 548)
- ஸ்ரீ பிரக்ஞாகணேந்திர சரஸ்வதி — ( ,, 548 – ,, 565)
- ஸ்ரீ சித்விலாசேந்திர சரஸ்வதி — ( ,, 565 – ,, 577)
- ஸ்ரீ மஹாதேவேந்திர சரஸ்வதி I — ( ,, 577 – ,, 601)
- ஸ்ரீ பூர்ணபோதேந்திர சரஸ்வதி — ( ,, 601 – ,, 618)
- ஸ்ரீ போதேந்திர சரஸ்வதி II — ( ,, 618 – ,, 655)
- ஸ்ரீ ப்ரஹ்மானந்திரகணேந்திர சரஸ்வதி ( ,, 655 – ,, 668)
- ஸ்ரீ சிதானந்தகணேந்திர சரஸ்வதி — ( ,, 668 – ,, 672)
- ஸ்ரீ சச்சிதானந்த சரஸ்வதி — ( ,, 672 – ,, 692)
- ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி III — ( ,, 692 – ,, 710)
- ஸ்ரீ சித்சுகேந்திர சரஸ்வதி — ( ,, 710 – ,, 737)
- ஸ்ரீ சித்சுகானந்தேந்திர சரஸ்வதி — ( ,, 737 – ,, 758)
- ஸ்ரீ வித்யாகணேந்திர சரஸ்வதி — ( ,, 758 – ,, 788)
- ஸ்ரீ அபிநவ சங்கரேந்திர சரஸ்வதி — ( ,, 788 — ,, 840)
- ஸ்ரீ சத்சித்விலாசேந்திர சரஸ்வதி — ( ,, 840 — ,, 873)
- ஸ்ரீ மகாதேவேந்திர சரஸ்வதி II — ( ,, 873 — ,, 915)
- ஸ்ரீ கங்காதரேந்திர சரஸ்வதி II — ( ,, 915 — ,, 950)
- ஸ்ரீ பிரம்மானந்தகணேந்திர சரஸ்வதி ( ,, 950 — ,, 978)
- ஸ்ரீ ஆனந்தகணேந்திர சரஸ்வதி — ( ,, 978 — ,, 1014)
- ஸ்ரீ பூர்ணபோதேந்திர சரஸ்வதி II — ( ,, 1014 — ,, 1040)
- ஸ்ரீ பரமசிவேந்திர சரஸ்வதி I — ( ,, 1040 — ,, 1061)
- ஸ்ரீ சந்திரானந்தபோதேந்திர சரஸ்வதி ( ,, 1061 — ,, 1098)
- ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி IV — ( ,, 1098 — ,, 1166)
- ஸ்ரீ அத்வைதானந்தபோதேந்திர சரஸ்வதி ( ,, 1166 — ,, 1200)
- ஸ்ரீ மகாதேவேந்திர சரஸ்வதி III — ( ,, 1200 — ,, 1247)
- ஸ்ரீ சந்திரசூடேந்திர சரஸ்வதி I — ( ,, 1247 — ,, 1297)
- ஸ்ரீ வித்யாதீர்த்தேந்திர சரஸ்வதி — ( ,, 1297 — ,, 1370)
- ஸ்ரீ சங்கராநந்தேந்திர சரஸ்வதி — ( ,, 1370 — ,, 1417)
- ஸ்ரீ பூர்ணானந்த சதாசிவேந்திர சரஸ்வதி ( ,, 1417 — ,, 1498)
- ஸ்ரீ வியாசாசல மகாதேவேந்திர சரஸ்வதி ( ,, 1498 — ,, 1507)
- ஸ்ரீ சந்திரசூடேந்திர சரஸ்வதி II — ( ,, 1507 — ,, 1524)
- ஸ்ரீ சர்வக்ஞ சதாசிவ போதேந்திர சரஸ்வதி ( ,, 1524 — ,, 1539)
- ஸ்ரீ பரமசிவேந்திர சரஸ்வதி II — ( ,, 1539 — ,, 1586)
- ஸ்ரீ ஆத்ம போதேந்திர சரஸ்வதி — ( ,, 1586 — ,, 1638)
- ஸ்ரீ பகவன்நாமா போதேந்திர சரஸ்வதி ( ,, 1638 — ,, 1692)
- ஸ்ரீ அத்வைதாத்ம பிரகாசேந்திர சரஸ்வதி ( ,, 1692 — ,, 1704)
- ஸ்ரீ மகாதேவேந்திர சரஸ்வதி IV — ( ,, 1704 — ,, 1746)
- ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி V — ( ,, 1746 — ,, 1783)
- ஸ்ரீ மகாதேவேந்திர சரஸ்வதி V — ( ,, 1783 — ,, 1813)
- ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி VI — ( ,, 1813 — ,, 1851)
- ஸ்ரீ சுதர்சன மகாதேவேந்திர சரஸ்வதி ( ,, 1851 — ,, 1891)
- ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி VII — ( ,, 1891 — 7-2-1907)
- ஸ்ரீ மகாதேவேந்திர சரஸ்வதி V — ( 7-2-1907 — 13-2-1907)
- ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி VIII — ( 13-2-1907 — 3-1-1994)
- ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி — ( 3-1-1994 — 28-2-2018)
- ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி — ( 28-2-2018 — At present )
வியாச பூர்ணிமா வாழ்த்துக்கள்!
அன்பர்கள் அனைவருக்கும் வியாச பூர்ணிமா வாழ்த்துக்கள்! பாரம்பரிய ஸ்ரீஜகத்குரு பீடமான மூலாம்னாய ஸர்வக்ஞ பீடம் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் பீடாதீச்வரர் ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய ஸ்வாமிகள் பொற்பதங்களில் அனந்தகோடி நமஸ்காரங்களை குரு பூர்ணிமா புனித நன்னாளில் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமயச்சேவை அமைப்பான இந்துசமயமன்றம் மற்றும் ஸ்ரீகாஞ்சி கைங்கர்ய சபா சார்பில் சமர்ப்பிக்கிறோம்.
புலவர் க ஆத்ரேய சுந்தரராமன்,
வெங்கட்ராமன் மற்றும்
கௌரி வெங்கட்ராமன்
அறுசீர்விருத்தம்
அம்மன் வாரம்:
💐 (அறுசீர்விருத்தம்)
26.06.2021.
🦚
சீர்மிகு
சென்னை
தன்னில்
திகழ்ராய
புரத்தே தங்கி
ஊர் உலகு
எல்லாம்
போற்ற
ஓங்காரத்
துள்நின்
றோங்கி
யார்எதைக்
கேட்டபோதும்
யாண்டுமே
அவற்றை
நல்கிப்
பார்போற்ற
வாழ்அங்காள
பரமேஸ்வரி
அருள்செய்
வாயே..!
🦚
உனைவிட
தெய்வம்
வேறு
உலகினில்
உண்டோ
அம்மா…?
எனை நீயும்
கண்பா ராமல்
இருப்பது
ஏனோ
சும்மா…?
தினம் வளர்
இராய
புரம் வாழ்
சிம்மவா
கினியும்
நீயே….!
மனக்கோயில்
வாழ்அங்
காள
பரமேஸ்வரி
அருள்
செய்வாயே!
💐
சோதனை
போதும்!
மேலும்
சோதிக்க
வேண்டாம்
தாயே..!
வாதிக்க
வரவில்
லை நான்..
எம்குலத்
தெய்வம்
நீயே…!
ஆதரித்
தாளும்
அம்மா..!
அன்புடன்
இராய
புரம்வாழ்
வேதமே.!
ஸ்ரீ அங்காள
பரமேஸ்வரி
அருள்செய்
வாயே…!
💐🙏🏻💐
- விசூரார்.
🦚
*இந்நூல்சென்னை
இராயபுரம்
ஸ்ரீ அங்காள
பரமேஸ்வரி
ஆலயவிழாவில்
வெளியிடப்
பட்டது..!
நாள்: 22.07.2001.
🦚🙏🏻🦚
சிவபக்த விலாசம் (வடமொழியில் வழங்கிவரும் அறுபத்துமூவர் வரலாறு)
திங்கட் கிழமை தோறும் இணைய வழியாக நடைபெறும் தொடர் உபன்யாசம் – பகுதி : 2
Monday, June 14 · 6:00 – 7:00pm
Google Meet joining info
Video call link: https://meet.google.com/bjj-qwjs-kmz
Youtube link: https://www.youtube.com/channel/UCsLLZtA7LfTcNoCgN47l4yw
சென்னை ஜன கல்யாண் செய்தி மடல்
ஶ்ரீ காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீமடத்தின் சார்பில் வெளிவரும் மாத இதழ் “சென்னை ஜன கல்யாண் செய்தி மடல்” ஆசிரியரும், சென்னை மாவட்ட ஜன கல்யாண் இயக்கத்தின் தலைவரும் ஆன ஶ்ரீமான் கே.நாகராஜன் அவர்கள் 12.6 2021 ஞாயிறு பிற்பகல் காலமானார் என்ற நம்பமுடியாத, மிகவும் அதிர்ச்சி அளிக்க கூடிய, செய்தியை மிகுந்த துயரத்துடன் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். அவரது மறைவு ஆன்மீக வட்டத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்! இந்துசமயமன்றம் சார்பில் ஆற்றிவரும் சேவைகளை ஆர்வமுடன் கேட்டு உடனுக்குடன் செய்தி மடலில் வெளியிட்டும், ஆலோசகராகவும் திகழ்ந்த அன்னாரது ஆத்மா ஸ்ரீகாஞ்சி மாமுனிவர் திருவடிகளில் அமைதிபெற இந்துசமயமன்றம் சார்பில் ப்ரார்த்திக்கிறோம்.
இந்துசமயமன்ற அன்பர்கள் மற்றும் அமைப்பாளர்கள் சார்பில் ஆழ்ந்த இரங்கலை அவரது குடும்பத்தினருக்கு மிகுந்த வருத்தத்துடன் தெரிவிக்கிறோம்.
நாம் ஒவ்வொருவரும் , அவரவர் இருக்கும் இடத்திலேயே,நமது கண்ணீர் அஞ்சலியை செலுத்துவோம். அவரது மோக்ஷம் நோக்கிய பயண பாதைக்கு வெளிச்சம் காட்டும் வகையில் நாம் ஒவ்வொருவரும் அருகாமையில் இருக்கும் ஆலயத்திலே அல்லது அவரவர் வீட்டு பூஜை அறையில் உள்ள கடவுள்/குரு படத்தின் முன்போ பிரார்த்தனை செய்து கொள்வோம். இயன்றவர்கள் “மோக்ஷ தீபம்” ஏற்றுவோமாக!
தாங்கொணாத்துயரத்துடன்,
புலவர் க ஆத்ரேய சுந்தரராமன்
கௌரி வெங்கட்ராமன்
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய கலாச்சார பண்பாட்டு சேவை அமைப்பான
இந்துசமயமன்றம்.