பரம பூஜ்யஸ்ரீ ஓங்காரானந்த ஸ்வாமிகள் மஹாஸமாதியடைந்துவிட்டார்கள்

பரம பூஜ்யஸ்ரீ ஓங்காரானந்த ஸ்வாமிகள் மஹாஸமாதியடைந்துவிட்டார்கள். ஹிந்து தர்மத்திற்கு மிகப்பெரிய பொக்கிஷமாக திகழ்ந்தவர். திருக்குறள் சொற்பொழிவு அவரைப்போல செய்ய எவராலும் இயலாது. வேத, உபநிஷத, ஸாஸ்த்ரங்களில் அபார ஞானத்துடன் சாதாரண பாமர மக்களுக்கு புரியும் வகையில் உபதேசித்தவர். சனாதன தர்ம எழுச்சிக்கு பாடுபட்டவர்.
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் ஆசார்ய ஸ்வாமிகள் மீது மிகுந்த அபிமானம் உள்ளவர்.
அவர்களின் மறைவு இந்து சமுதாயத்திற்கு பேரிழப்பு. ஸ்வாமிகளின் அருட்கமல மலரடிகளில் இந்துசமயமன்றம் மலரஞ்சலிகளை பக்தியுடன் சமர்ப்பிக்கிறது.
அமைப்பாளர்கள் மற்றும் சமயமன்ற அன்பர்கள்,
இந்துசமயமன்றம்
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய கலாச்சார பண்பாட்டு சேவை அமைப்பு.

பேராயிரம் பரவி ப்ரார்த்தனை செய்யுங்கள்

இந்துசமயமன்றம் அன்பர்களே,
வணக்கம்.
வைத்தீஸ்வரன் கோவில் (புள்ளிருக்குவேளூர்) கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி எல்லோரும் நாளை (29/Apr/2021) தேவாரப்பதிகங்களில் “பேராயிரம் பரவி” என்கிற பதிகத்தை ஓதி மனமார தையல்நாயகி சமேத ஸ்ரீவைத்தீஸ்வரப்பெருமானை ப்ரார்த்தனை செய்யுங்கள். உலகத்தை ஆட்டிப்படைக்கும் தீராத நோய்த்தொற்றை அழித்தொழிக்க சிவபெருமானை அவனருளாலே அவன் தாள்வணங்கி வேண்டுங்கள். நல்லதே நடக்கட்டும் நமசிவாயம் அருளட்டும்!

புலவர் க ஆத்ரேய சுந்தரராமன்
ஸ்ரீமதி.கௌரி வெங்கட்ராமன்
அமைப்பாளர்கள்
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமயச்சேவை அமைப்பான
இந்துசமயமன்றம்.

“பேராயிரம் பரவி”

திருச்சிற்றம்பலம்

பேராயிரம் பரவி வானோர் ஏத்தும்
பெம்மானைப் பிரிவுஇலா அடியார்க்கென்றும்
வாராத செல்வம் வருவிப்பானை
மந்திரமும் தந்திரமும் மருந்தும் ஆகித்
தீராநோய் தீர்த்து அருளவல்லான் தன்னைத்
திரிபுரங்கள் தீ எழத் திண்சிலை கைக்கொண்ட
போரானைப் புள்ளிருக்கு வேளூரானைப்
போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே!
(நோய் தீர்க்கும் அப்பர் தேவாரம்)


பொருள் : தேவர்களால் ஆயிரக்கணக்கான பெயர்களால் புகழப்படும் சிவனே! உன்னை மறக்காத பக்தர்களுக்கு கிடைப்பதற்கரிய பிறப்பற்ற நிலை அருள்பவனே! நோய் தீர்க்கும் மந்திரமாகவும், தந்திரமாகவும், மருந்தாகவும் விளங்குபவனே! தீராத நோய் தீர்த்தருளும் வல்லவனே! அசுரர்களின் மூன்று கோட்டைகளை எரிக்க வில் ஏந்தியவனே. புள்ளிருக்கு வேளூர் எனப்படும் வைத்தீஸ்வரன் கோவிலில் வீற்றிருக்கும் வைத்திய நாதனே! உன்னை
இத்தனை நாளும் நினைக்காமல் வீணாக பொழுதைக் கழித்து விட்டேனே!

இனிய மனமார்ந்த தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

இந்துசமயமன்றம் அன்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! இந்த ப்லவ வருஷம் அனைவருக்கும் நலமுடன் வளத்தையும் மகிழ்ச்சியையும் தரும் ஆண்டாக அமைய ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள் திருவடிகளை ப்ரார்த்திக்கிறோம்.
புலவர் க ஆத்ரேய சுந்தரராமன்
மற்றும்
ஸ்ரீமதி. கௌரி வெங்கட்ராமன்.
அமைப்பாளர்கள்,
இந்துசமயமன்றம்.
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய,கலாச்சார பண்பாட்டு சேவை அமைப்பு.

ஸ்ரீஸ்ரீஸ்ரீஜயேந்த்ர சரஸ்வதி ஸ்வாமிகள் மூன்றாவது ஆராதனை

ஸ்ரீகுருப்யோ நம!
இந்துசமயமன்றம் சார்பில் டிபன்ஸ் காலனி அருள்மிகு வரசித்தி வினாயகர் திருக்கோவில் திருவாசகம் முற்றோதுதல் குழுவினர் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீஸ்ரீஸ்ரீஜயேந்த்ர சரஸ்வதி ஸ்வாமிகள் மூன்றாவது ஆராதனை சமயத்தில் 26.03.2021 வெள்ளிக்கிழமையன்று உலகநன்மைக்காக கூட்டுப்ரார்த்தனை, குரு வணக்க வழிபாடு சிறப்பாக நடத்தினார்கள். அமைப்பாளர் புலவர் க ஆத்ரேய சுந்தரராமன் அவர்கள் ஸ்ரீபுதுப்பெரியவரின் மகிமைகளை எடுத்துக்கூறினார்கள்.கிளை அமைப்பாளர் திருமதி. தாரா தேவராஜ் அவர்கள் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்தார்கள்.

ஸ்ரீ லஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள்

ஸ்ரீ லஸ்ரீ
ஜெயேந்திர
சரஸ்வதி
சுவாமிகள்…!
💐🙏🏻💐
*
ஜெகம் போற்ற
வந்தவர்..!
அருளாசி
தந்தவர்…!
💐
மனிதநேயம்
மிக்கவர்..!
மதித்துப்
போற்றத்
தக்கவர்…!
💐
“ஜனகல்யாண்”
கண்டவர்..!
தேனார் அமுதம்
உண்டவர்…!
💐
சிரிப்பால்
உலகை
ஈர்த்தவர்..!
ஜனங்களை
சமமாய்ப்
பார்த்தவர்..!
💐
ஜாதிபேதம்
அற்றவர்..!
அனுபவங்கள்
கற்றவர்..!
💐
“சங்கரமடத்தின்
பேரொளி
பெரியவா”ளோடு
வாழ்ந்தவர்..!
💐
நெற்றி
நிறையப்
பூசியே
சிவனில்
தோய்ந்து
ஆழ்ந்தவர்..!
💐
இன்றையநாள்
திருவிழா..!
ஆராதனைப்
பெருவிழா..!
💐
மக்களோடு
மக்களாய்ப்
பழகி வாழ்ந்த
மன்னவர்…!
💐
நீதி நேர்மைக்
கதைகளை
குழந்தைகட்குச்
சொன்னவர்..!
💐
காஞ்சி சங்கர
மடத்தினை
அன்பால்
உயர்த்தி
ஆண்டவர்‌..!
💐
ஏழைகளின்
சிரிப்பிலே
இறைவனைக்
கண்டு
மீண்டவர்..!
💐
ஜெகத்குரு
ஜெயேந்திரர்
பாத மலர்
பணிவமே..!
💐
சுவாமிகளின்
திருவடித்
தாமரைமலர்
அணிவமே..!
💐
எண்ணிக்கை
யற்ற
கோயில்களின்
கும்பாபிஷேகம்
நடத்தினார்..!
💐
ஆன்மிக
உலகின்
ஆதவனாகித்
தீயசக்தியை
அடக்கினார்..!
💐
ஜெகத்குரு
ஜெயேந்திரர்
காட்டியவழியில்
செல்வமே…!
💐
அவருடைய
கொள்கைகளை
உலகிற்கு
எடுத்துச்
சொல்வமே..!
💐
ஜெகத்குரு
ஜெயேந்திரர்
வாழ்க ! வாழ்க‌‌.!
வாழ்கவே..!
💐
அவருடைய
அருளாசி
உலகமெங்கும்
சூழ்கவே..!
💐🙏🏻💐
அடியேன்
விசூர்மாணிக்கம்
26.03.2021.
தினம்ஒருகவிதை
எண்.868.
🦚
ஜெகத்குரு
ஜெயேந்திரர்
திருவடி
போற்றி போற்றி!
💐🙏🏻💐

வந்தே ஸ்ரீஜயேந்த்ர ஜகத்குரும்!

சனாதன தர்மத்தை வாழவைக்க வாராது வந்த மாமணியாம் நமது ஜகத்குரு!
அயோத்தி ராமபிரான் ஆலய புனர்நிர்மாணப்பணியில் ஸ்ரீஸ்வாமிகளின் கைங்கர்யம் அதிகம்!
மஹாஸ்வாமிகள் ஆசியுடன் இந்துசமயமன்றத்தை போஷித்து வளர்த்த பெருந்தகை!
பட்டிதொட்டியெலாம் சென்று தனது இன்முகம் காட்டி அனைவருக்கும் ஆசி வழங்கிய வள்ளல்!
ஆதிசங்கரருக்குப்பிறகு பாரத தேசமெங்கும் பவனிவந்து ஹிந்து தர்மத்திற்கு புத்துணர்ச்சி ஊட்டிய ஜகத்குரு!
எண்ணிலடங்கா திருப்பணிகள்! வேதபாடசாலைகள், கல்விச்சாலைகள், பல்கலைக்கழகம், மருத்துவமனைகள், ஏழை எளியோருக்காய் உதவிய உத்தம ஞானி!
ஸ்ரீசங்கர பகவத்பாதாசார்ய பரம்பராகத மூலாம்னாய ஸர்வக்ஞ பீடம் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் 69வது ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீஜயேந்த்ர ஸரஸ்வதி சங்கராச்சாரிய மஹாஸ்வாமிகளின் மூன்றாவது ஆராதனை தினத்தில் (26.03.2021) இந்துசமயமன்றம் தனது ஹ்ருதயபூர்வ அனந்தகோடி நமஸ்காரங்களை பக்தியுடன் ஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்வாமிகளின் அருட்கமலமலரடிகளில் சமர்ப்பிக்கிறது.
புலவர் க ஆத்ரேய சுந்தரராமன் மற்றும் ஸ்ரீமதி. கௌரி வெங்கட்ராமன்.
அமைப்பாளர்கள்
மற்றும்
இந்துசமயமன்ற அன்பர்கள்